தாய்மாமன் தங்கமோதிரத் திட்டம் செப்டம்பர் 28 ஆம் தேதி துவக்கம்
தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தொடங்கி வைப்பதாக அறிவிப்பு
தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்திற்காக முதல் தவணையாக ஒரு லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்கிறது அரசு
ஜூன் 22ஆம் தேதியிட்டு அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கத் திட்டம்
தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் மக்களில் தாய்மார்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள்
ஜூன்.மாதம் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் .28 ஆம் தேதிவரை நாளொன்றுக்கு 107 மையங்களில் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரம்
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் போது தங்கமோதிரம் வழங்கப்படும் என தமிழ்நடு அரசு அறிவிப்பு.தமிழ்நாடு அரசின் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கான டெண்டரை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே .செப்டம்பர் 10, 2026 ஆம் தேதியன்று தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான டெண்டர் ஒதுக்கீட்டை (குறிப்பாக ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகக் கூறி) எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டெண்டரை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது, இந்தத் திட்டத்தின் மூலம் அரசுக்குத் தான் லாபம் மற்றும் கூடுதல் பலன்கள் கிடைக்கின்றன என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, வழக்கை தள்ளுபடி செய்ததன் மூலம் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை எவ்வித தடையுமின்றி செயல்படுத்துவதற்கான வழிவகை அரசுக்குக் கிடைத்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த பிரதமர் அறிவிப்பு மக்கள் "தங்கம் வாங்க வேண்டாம்" எனவும் பொதுமக்களுக்கு தெரிவித்த நிலையில் அது மாநில அரசுக்கு பொருந்துமா? என்பது அரசின் கொள்கை முடிவுகளுக்குப் பொருந்தாது,
அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம். இந்திய பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. உலக சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சி. இந்தியாவிலேயே திருமணம் நடத்தும் ‘Wed in India’ இயக்கம். வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதையும், பொழுதுபோக்கு பயணங்களையும் தவிர்க்க வேண்டும்"
சுதேசிப் பொருட்களை பயன்படுத்த இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள் என்று நாட்டின் பிரதமர் மாதம் ஒரு முறை மக்களிடம் கோரிக்கை வைக்கிறார். மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்துக் கொண்டால் இந்திய பணத்தின் மதிப்பு உயரும் என்றும் சொல்லப்படுகிறது
இனி புதிதாக தங்கம் விற்கும் கடைகளுக்கு BIS ஹால்மார்க் சிறய கடைக்கு மட்டுமே அனுமதி பெரிய கடைக்கு கொடுக்கப்படாது என்று மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வரலாம். நாட்டை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும் தங்கத்தின் விற்பனையைத் தடுக்க வேறு என்ன செய்யலாம்? தங்கம் வாங்க வேண்டாம். கிரிகிஸ்தான் நாட்டில் இருந்து வீடியோ காட்சி வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அதே நேரத்தில் சில முக்கிய வேண்டுகோளையும் முன்வைத்தார். தேவையற்ற வெளிநாட்டு பயணங்களைத் தவிர்க்க வேண்டும், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கவும். உள்நாட்டுச் சுற்றுலாவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வெளிநாடுகளில் ஆடம்பரத் திருமணங்கள் நடத்துவதை தவிர்த்து, உள்நாட்டிலேயே எளிமையான திருமணங்களை நடத்த வேண்டும்.
உள்நாட்டு உள்ளூர் பொருட்கள் மற்றும் உள்ளூர் சேவைகளை நாம் அதிகம் பயன்படுத்தும் போது நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும். அவசியமில்லாத போது தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார் இதன்மூலம், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தம் குறையும்.
வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கு
சுயசார்பு கொள்கையை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்கும்பட்சத்தில், சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை எட்டும்போது, அதாவது 2047ஆம் ஆண்டில் இளைய தலைமுறையிடம் ஒரு முழுமையான வளர்ந்த இந்தியாவை ஒப்படைக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த மே மாதமும் வலியுறுத்திய பிரதமர்
முன்னதாக, சர்வதேசப் போர் பதற்றங்கள், பணவீக்கத்தைச் சமாளிக்க பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், பெட்ரோல் டீசல் நுகர்வைக் குறைத்தல், மின்சார வாகனங்களை பயன்படுத்துதல், வீட்டில் இருந்தே பணிபுரிதல் போன்ற வழிகளை பின்பற்றுமாறு பிரதமர் மோடி கடந்த மே மாதமே வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய இக்கட்டான உலகளாவிய சூழலில், இந்தியப் பொருளாதாரம் தநது ஸ்திரத்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள ஒவ்வொரு குடிமகளின் பங்களிப்பும் அவசியம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டி உள்ளார். ஆனால் இந்தியாவில் வாழும் சில நபர்கள் சாமியார்கள் மற்றும் போலியான நபர்கள் தாங்கள் கிலோ கணக்கில் நகை அணிந்து வரும் நபர்கள் செவிகளில் பிரதமர் கோரிக்கை கேட்கவில்லை என்பதே சாமானியன் நிலை, இந்த போலி நபர்கள் வசம் உள்ள தங்கம் பறிமுதல் செய்து அரசு கஜானாவுக்கு வந்தால் நாடு உண்மையிலேயே தரம் உயரும், முதலில் இவர்களுக்கு வரவேண்டும் கட்டுப்பாடு,













கருத்துகள்