முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜே.எம்.எச். அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்குத் தடை

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI), சென்னை வேளச்சேரி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான ஜே.எம்.எச். அசன் மவுலானா  தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, தனது தேர்தல் செலவுக் கணக்குகளை முறையாகவும் உண்மையாகவும் தாக்கல் செய்யாத காரணத்தால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 10A-ன் கீழ் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.  அசன் மவுலானா தனது தேர்தல் செலவாக ரூபாய் 17,03,548 மட்டுமே கணக்கு காட்டியிருந்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் அவர் நாளிதழ்களில் கொடுத்த விளம்பரங்களுக்காக சுமார் ரூபாய் 32,05,915 செலவிட்டது கண்டறியப்பட்டது. இதன் மூலம் அவரது மொத்த செலவு ரூபாய் 49 லட்சத்தைத் தாண்டியது, இது அப்போதைய தேர்தல் செலவு உச்சவரம்பான ரூபாய் 30.80 லட்சத்தை விட அதிகமாகும். இந்தத் தடையின் காரணமாக, ஆகஸ்ட் 2026 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் நாடாளுமன்ற (மக்களவை/மாநிலங்களவை) அல்லது மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் (சட்டப்பேரவை/சட்ட மேலவை) வேட்பாளராகப் போட்டியிட முடியாது.தேர்தல் செலவுக் கணக்கில் முறைகேடு: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேளச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி



2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு. அசன் மௌலானா, JMH அவர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் கணிசமான தொகை குறைத்து காட்டப்பட்டதாகக் கூறி, இந்திய தேர்தல் ஆணையம் அவரை 3 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு 19.08.2026 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழ்நாடு அரசு அரசிதழின் 28.08.2026 தேதியிட்ட Extraordinary Gazette-ல் வெளியிடப்பட்டுள்ளது.




ரூபாய் 32.05 லட்சம் செலவு குறைத்து காட்டப்பட்டதாக குற்றச்சாட்டு

2021 தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், ஆசான் மௌலானா தனது தேர்தல் செலவுக் கணக்கில் ரூபாய் 17,03,548 செலவு செய்ததாக தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், தேர்தல் செலவுக் கணக்கை ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அதிகாரி, விளம்பரங்களுக்கான செலவில் ரூபாய் 32,05,915 அளவுக்கு குறைத்து காட்டப்பட்டிருப்பதாக முடிவு செய்தார்.

27.03.2021 மற்றும் 28.03.2021 ஆகிய தேதிகளில் 10 செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கான செலவு ரூபாய் 31,53,975 எனவும், 03.04.2021 அன்று வெளியான மற்றொரு விளம்பரத்திற்கான செலவு ரூபாய் 51,940 எனவும் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் மதிப்பிட்டன.

இதனை வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரங்களுக்கான செலவுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் சுயமாக மேற்கொள்ளப்பட்டவை என்றும், தமக்கு அவற்றில் எந்த அதிகாரப்பூர்வ தொடர்பும் இல்லை என்றும் ஆசான் மௌலானா தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் அளித்திருந்தார்.

எனினும், தேர்தல் செலவுகளை வேட்பாளரின் கணக்கில் சேர்க்க வேண்டிய சட்டப்பூர்வ விதிமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பரிசீலித்த தேர்தல் ஆணையம், அவரது விளக்கம் ஏற்கத்தக்கதல்ல எனக் கருதியது.

Representation of the People Act, 1951-ன் Sections 77 மற்றும் 78 ஆகியவற்றின் கீழ் வேட்பாளர் தனது தேர்தல் செலவினங்களுக்கான முறையான கணக்கை பராமரித்து, சட்டப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியது.

மேலும், தேர்தல் செலவுக் கணக்கில் கணிசமான தொகையை வெளிப்படுத்தாமல் இருப்பது வெறும் நடைமுறை தவறு அல்ல; தேர்தல் செலவுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் சமமான போட்டி ஆகியவற்றை பாதிக்கும் முக்கியமான விதிமுறை மீறல் என ஆணையம் குறிப்பிட்டுள்ளது,

இதன் அடிப்படையில், Representation of the People Act, 1951-ன் Section 10A-ஐ, Sections 77 மற்றும் 78 உடன் இணைத்து, இந்திய தேர்தல் ஆணையம் ஆசான் மௌலானாவை 19.08.2026 முதல் 3 ஆண்டுகளுக்கு,

நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும்,

மாநில சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும்

இந்த உத்தரவு Election Commission of India சார்பில் Senior Deputy Election Commissioner Dr. Pawn Kumar Sharma  பிறப்பித்தார்

Section 10A, Representation of the People Act, 1951 — தேர்தல் செலவுக் கணக்கை முறையாக தாக்கல் செய்யத் தவறியதற்கான தகுதி நீக்கம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...