*ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்கு - 4 பெண் IPS அதிகாரிகள் கொண்ட SIT அமைப்பு*
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கை விசாரிக்க தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் 4 பெண் அதிகாரிகளை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து உத்தரவிட்டுள்ளார்
இந்த வழக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பல முக்கிய பிரமுகர்கள் சிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
*SIT குழுவில் இடம்பெற்றுள்ள 4 பெண் அதிகாரிகள்:*
1. *திருமதி. P.C. தேன்மொழி, IPS* - கூடுதல் காவல் ஆணையர், மத்திய குற்றப்பிரிவு (CCB), பெருநகர சென்னை
2. *திருமதி. திஷா மிட்டல், IPS* - இணை காவல் ஆணையர், சட்டம் & ஒழுங்கு (மேற்கு), பெருநகர சென்னை
3. *திருமதி. J. முத்தரசி, IPS* - காவல் கண்காணிப்பாளர் / ஊடகத் தொடர்பு அலுவலர், DGP அலுவலகம்
4. *திருமதி. V.V. கீதாஞ்சலி* - துணை காவல் ஆணையர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு, சென்னை
*முக்கிய அம்சங்கள்:*
- இந்த வழக்கு *CCB வழக்கு எண். 174/2025* மற்றும் அது தொடர்பான விவகாரங்களை திறம்பட விசாரிக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது
- இந்த SIT குழு சென்னை பெருநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படும்
- புகார் அளிக்கப்பட்ட காலகட்டத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
- இதற்கு முன்னதாக நேற்று 3 காவல் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். முன்னாள் சென்னை கமிஷனர் *ஏடிஜிபி அருண்*, சென்னை தெற்கு உதவி ஆணையராக இருந்த *ஐஜிபி கண்ணன்*, கோயம்பேடு உதவி ஆணையர் யாஸ்மின் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்
இன்று காலை 10 மணி அளவில் இந்த உத்தரவு வெளியானதாகத் தகவல்


கருத்துகள்