முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

5 முனைப் போட்டியில் இடைத்தேர்தல் அரசியல் களம் வெற்றி யாருக்கு வீழ்ச்சி யாருக்கு

தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்



அக்டோபர் 6, 2026 ஆம் தேதி நடைபெறும் நிலையில் இடதுசாரி மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் களம் 5 முனைப் போட்டியாகியுள்ளது. - "தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்., மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் . போட்டி; தமிழக வெற்றிக்கழக கூட்டணி ஆட்சிக்கு திமுக கூட்டணியில் வென்று பின் வெளியிலிருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும்"என 

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி . ஆலோசனைக்கு பிறகு சண்முகம் பேட்டி தந்த நிலை, 

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, போட்டியிடும் நிலையில் 

நாம் தமிழர் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், இடதுசாரிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் நிலையிலேயே, கூட்டணியில் இணையாமல் தனித்துப் போட்டியிடும் இந்த நடவடிக்கை, “தமிழ்நாட்டை இடதுபக்கம் திருப்புவோம்” என்ற நீண்டகால இலக்கை நோக்கிய முதல் நடைமுறைப் படியாகவே பார்த்தாலும் இவர்கள் வாங்கும் வாக்குகள் ஜாமீன் தொகையை வாங்குமா என்பதே எழு வினா,


இரண்டு இடதுசாரிக் கட்சிகளும் இடைத்தேர்தலில் தனித்துக் களம் இறங்குவதாக முடிவு செய்துள்ளன. உண்மை மக்கள் மனநிலை அறிய நல்லதொரு முடிவே என்றாலும், அரசியல் கணக்குப்படி ஐந்துமுனைப் போட்டியில் தற்போது நாம் தமிழர் கட்சி களம் இறங்கியது அது கம்யூனிஸ்ட் பெறும் வாக்குகளை விட அதிகம் பெறும் ஆனால் அவர்களும் ஜாமீன் தொகை பெறுவது கடினம், இது கள எதார்த்தம்,ஆளும் கட்சிக்கே சாதகமான முடிவுகளே கிடைக்கும் என்கிற தேர்தல் கணக்குகளும் உள்ளன.





இருந்தாலும் இடதுசாரிகளின் நோக்கம் வெறும் இந்த இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவது அல்ல. தங்களது வாக்குகள் தவெகவுக்கு விழககூடாது என்பதே, நீண்டகால அரசியல் செயல்திட்டம் ஒன்றை உருவாக்குவது, தங்களது தனித்த அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது என்றே கருதுகிறேன். ஆனால் அதற்கு இவர்கள் குறைந்தது பத்தாயிரம் வாக்குகளாவது வாங்க வேண்டும், அது இப்போது இயலுமா தெரியாது,



இடதுசாரி கம்யூனிஸ்ட்களின் இந்தத் திடீர் முடிவில் சிக்கலுக்குள்ளாகப் போகிறவர்கள், இடதுசாரிகளின் ஆதரவாளர்கள் என்றுதான் சொல்ல வேண்டும், சமூக ஊடகங்களில் முழுநேரமும் திமுகவிற்கும் திமுகவின் ஊடகங்களுக்கும் களமாடுகிற கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சியாளர்களே. பார்ப்போம், இனியாவது இடதுசாரிக் கட்சிகளுக்காகக் களம் காண்பார்களா அல்லது எப்போதும் போல திமுகவிற்காகவே சமூக ஊடகங்களில் களத்தில் இருப்பார்களா என்பதையும், இந்த 5 முனைப் போட்டியில் களம் காணும் முக்கியக் கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் முக்கியத் தரப்புகள் தனித்து நின்ற தமிழக வெற்றிக் கழகம் விசிக, மதிமுக முஸ்லீம் லீக் என ஆளுங்கட்சியான தவெக இந்த இடைத்தேர்தலை தனது முதல் தேர்தல் சோதனையாக எதிர்கொள்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக): பிரதான எதிர்க்கட்சியாக தேமுதிக உடன் களம் இறங்குகிறது.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாஜக, அமமுக மற்றொரு அணி முக்கிய எதிர்க்கட்சியாகப் போட்டியிடுகிறது.நாம் தமிழர் கட்சி சீமான் தலைமையில் தனித்துப் போட்டியிடுகிறது.



இடதுசாரிகள் (CPI / CPM): தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தாலும், இந்த இடைத்தேர்தலில் தனித்துக் களம் காண்கின்றன. தொகுதி வாரியாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் இரு தொகுதிகளிலும் களம் காணும் முக்கிய வேட்பாளர்களின் பட்டியல்: 2026 பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால் இந்த இடைத்தேர்தலில் . தவெக தலைவர் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தவெக வேட்பாளர்கள் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் எனத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அட்டவணை பட்டியல் ஜாதி வாக்கு வங்கி அதிகம் உள்ள இந்த இரண்டு தனித்தொகுதிகளிலும் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவது வாக்குகளைப் பிரித்து, தேர்தல் சமன்பாடுகளை மாற்றும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஐந்தாண்டு ஆட்சியை 100 நாட்கள் நடவடிக்கைகளில் மதிப்பீடு செய்வது சரியா என்பதும். அதிகபட்சம் எந்த திசையை நோக்கி நகர்கிறார்கள் என்பதனை வேண்டுமானால் கணிக்கலாம். மற்றபடி விமர்சிப்பதும் கொண்டாடுவதும் வீண். தற்போது


தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் 12.9.2026 ல இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில், 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பைக்கான (2026 Michelin Le Mans Cup) கார் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அது பல விதமாக பேசப்பட்டபோதும் 90 கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ் ஆதரவு பலமே, மொத்தத்தில் திமுக மற்றும் அதிமுக கடந்த கால ஆடசியில் செய்த ஊழல் முறைகேடு தற்போது குறைந்த நிலை மேலும் மறற கட்சியில் கவர்ச்சி இல்லாத தலைமை இதுவே மேலிட சோதனை முயற்சி இந்த இரண்டு படடியல் ஜாதி தனித் தொகுதி இடைத்தேர்தல், இது அரசியல் பரிச்சை மற்றும் கூடடணிக் கணக்குகள் அடங்கியது, இனி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி தேர்தல் தரவுகள் மற்றும் சமூகப் பொருளாதார ஆய்வுகளின்படி, மொத்தமாக அட்டவணை பட்டியல் ஜாதிகள் சேர்ந்த (SC) வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 42 சதவீதம் வன்னியர் குல சத்திரியர் ஜாதி பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.




தேர்தல் புள்ளியியல் தளங்களின் கணிப்புப்படி, இத்தொகுதியின் தோராயமான ஜாதி வாரி மக்கள் தொகை சதவீத விவரம் பின்வருமாறு அட்டவணை பட்டியல் ஜாதி (SC): 38 சதவீதம் வன்னியர் குல சத்திரியர் (MBC): 30 சதவீதம் முதலியார் (FC) : 12 சதவீதம் நாயுடு (BC) : 5 சதவீதம் கிறிஸ்தவர்கள்: 4 சதவீதம் இதர சமூகத்தினர்: 11 சதவீதம் (இதில் முஸ்லிம்கள், பழங்குடி ஜாதி இருளர்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் அடங்குவர அதிகாரப்பூர்வமாக ஜாதி வாரி கணக்கெடுப்பை வெளியிடாததால், இந்த விவரங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளின் கள நிலவரத் தரவுகள் மற்றும் தேர்தல் பகுப்பாய்வுகளின் அடிப்படையிலேயே கணிக்கப்பட்டுள்ளன.


அதேபோல் தாராபுரம்ஜாதி வாரியாக மக்கள் தொகை உத்தேசமாக கொங்கு வேளாளக் கவுண்டர் BC: சுமார் 28 முதல் 37 சதவீதம் அருந்ததியர் உள்ளிட்ட அட்டவணை பட்டியல் ஜாதியினர் - SC): சுமார் 26 சதவீதம் வரை என அதிகாரப்பூர்வ 2011 கணக்கெடுப்பு படி செங்குந்த முதலியார்: FC சுமார் 10 முதல் 20 சதவீதம்,செட்டியார் OC மற்றும் நாடார் BC: தலா 4 முதல் 8 சதவீதம் சிறுபான்மையினர் (முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள்): சுமார் 7 சதவீதம் 8 இதர சமூகங்கள் மற்றும் குடியேறிய மாற்று மாவட்ட மக்கள் BC உள்ளிட்ட : சுமார் 9 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு மொத்த வாக்காளர்கள்: சுமார் 2,22,434 அதில் அடடவணை பட்டியல் சாதியினர் (SC): சுமார் 26.08 சதவீதம் (65,468 வாக்காளர்கள்) பட்டியல் பழங்குடியினர் (ST): சுமார் 0.03 சதவீதம் (75 வாக்காளர்கள்) ஒரு தனி (SC) தொகுதியாக இருப்பதால், போட்டியிடும் அணைவரும் அட்டவணை பட்டியல் ஜாதி என்பதால் இங்கு கொங்கு வேளாள கவுண்டர், மற்றும் செங்குந்தர்கள், செடடியார் இன சமூகத்தினரும், தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக விளங்குகின்றனர்.மதுராந்தகம் தொகுதியில் பாமகவுக்கும் தாராபுரம் தொகுதியில் கொங்கு கட்சிக்கும் வைக்கப்படும் தேர்தல் பரிச்சை இந்த தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளும் போட்டி இல்லை யாரையும் ஆதரிக்கவில்லை இந்த நிலையில் இது கொங்கு வேளாளக் கவுண்டர், மற்றும் வன்னியர் குல சத்திரியர்களின் வாக்குகளுககு அட்டவணை படடியல் தொகுதியில் சோதனை முயற்சி, விசிக வாக்குகள் கமயூனிஸ்ட் கட்சிகள் வாங்கினால் தவெகவுக்கு இந்த வாக்குகள் மாறும் இதுவே அரசியல் கணக்கு, இங்கு தவெக பெறுகிற வெற்றி தடை உள்ள மற்ற தொகுதிகளில் தேர்தல் நடக்கும் நிலையை உறுவாக்கும் நிலை வரும். இது 2029 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மன் தமிழ்நாடு அரசியல் களத்தில் வைககப்படும் கூடடணி கணக்குகளுக்கான முதல் பரிட்சை எனலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...