*வெள்ளலூர் நாடு ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா - 500 ஆண்டுகால முழுமையான வரலாற்றுடன்*
*மேலூர் வட்டம் வெள்ளலூர் தனனரசு கள்ளர் நாடு 48 ல் முதன்மையான கீழ்திசை நாடு :*
*கி.பி.1500-1600 - நாயக்கர் ஆட்சிக் காலம், நாட்டின் பிறப்பு:*
500 ஆண்டுகளுக்கு முன் மதுரையை நாயக்க மன்னர்கள் ஆண்டபோது, மேலூர் பகுதி முழுவதும் காடுகளும் கண்மாய்களும் சூழ்ந்திருந்தது. அப்போது 60 கிராமங்களை சேர்ந்த கள்ளர் குல மக்கள் யாருக்கும் கப்பம் கட்டாமல் தங்கள் பகுதியை தாங்களே ஆண்டனர். அப்படி உருவான தன்னரசு நாடுதான் வெள்ளலூர் நாடு. 7 கரைகள், பின்னர் 11 கரைகள், 60 கிராமங்கள் என ஒரு சிறு ராஜ்ஜியமாக இயங்கியது.
இந்த நாட்டின் எல்லையை காக்க வெள்ளலூர் கண்மாய் கரை வேப்பமரத்தடியில் சுயம்புவாகத் தோன்றியவள் தான் அன்னை ஏழைகாத்தம்மன்.
*கி.பி.1700-1750 - பாளையக்காரர் போர்களும் அம்மனின் அருளும்:*
நாயக்கர் ஆட்சி வீழ்ந்து பாளையக்காரர் போர்கள் நடந்தபோது, சிவகங்கை, இராமநாதபுரம் படைகள் வெள்ளலூர் நாட்டை கடக்க முயன்றன. அப்போது இந்நாட்டு மக்கள் அம்மனை வேண்டி வைக்கோல் போர்களுக்குள் ஒளிந்து எதிரிகளை ஏமாற்றி விரட்டினர். அதன் நினைவாக இன்று வரை ஆண்கள் உடலில் வைக்கோல் பிரி சுற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
*கி.பி.1800-1850 - ஆங்கிலேயர் காலம் - பெயர் வந்த காரணம்:*
திருமோகூர் ஆலயத்தில் இருந்து களவாடப்பட்ட காளமேகப் பெருமாள் கடவுள் சிலை மீட்க நடந்த
*நத்தம் கணவாய் போர் - கி.பி. 1755*
இது இந்தியாவில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியப் படை சந்தித்த முதல் பெரும் தோல்வி சார். பிளாசி போருக்கு (1757) முன்பே நடந்தது.
*பின்னணி:*
கி.பி.1755-ல் ஆற்காடு நவாப்புக்காக வரி வசூலிக்க வந்த ஆங்கில தளபதி *கர்னல் அலெக்சாண்டர் ஹெரான்* மற்றும் *கான்சாகிப் மருதநாயகம்* திருமோகூர் அருகே உள்ள *கோவில்குடி* கிராமத்தில் கள்ளர்களின் குலதெய்வ கோவிலை சூறையாடி பித்தளை சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்றனர். c4ee
*போரில் பங்கு பெற்ற மக்கள் யார்?
இதற்கு பழிவாங்க காத்திருந்தவர்கள் தான் *மேலூர் மற்றும் வெள்ளலூர் தன்னரசு நாட்டுக் கள்ளர்கள்*
- *மேலூர் நாட்டு கள்ளர்கள்* - வெள்ளலூர் நாடு உட்பட 7 நாட்டு, 11 நாட்டு கள்ளர்கள் ஒன்று திரண்டனர். அதில் வெள்ளலூர் நாட்டு 11 கரைக்காரர்களும் இதில் அடக்கம்.
- அவர்கள் கோவில்குடி சிலைகளை மீட்க திட்டம் தீட்டினர்.
*போர் நடந்தது எப்படி?*
ஹெரானின் படையில் இருந்து பிரிந்து திருச்சிராப்பள்ளிக்கு க்கு சென்ற 1000 சிப்பாய்கள் கொண்ட படை ஜமால் சாகிப் தலைமையில் நத்தம் கணவாயை கடக்கும் போது, மேலூர் கள்ளர்கள் கணவாயில் மறைந்திருந்து தாக்கினர்.
1000 பேரில் *970 பேர் வெட்டி வீழ்த்தப்பட்டனர், 30 பேர் மட்டுமே உயிர் தப்பினர்* என ஆங்கிலேயக் கிழக்கிந்தியத் தளபதியே தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
பின்னர் இதற்கு பழிவாங்கும் விதமாக மதுரை பனையூரைச் சேர்ந்து கான்சாகிப் மருதநாயகம் பிள்ளை பிரிட்டிஷ் ஆதரவாளராக மாறிய கயவர் மதுரையில் 500 கள்ளர்களை தூக்கிலிட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
இதனால் தான் நத்தம் கணவாய் போர் என்பது *மேலூர் வெள்ளலூர் தனனரசு நாட்டுக் கள்ளர்களின் வீர வரலாறு* என போற்றப்படுகிறது. வெள்ளலூர் நாட்டு மக்களும் இந்த போரில் முக்கிய பங்கு வகித்துள்ளனர் சார்.
இந்த வீரர்களுக்கு நினைவுத் தூண் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் கூட அனுமதி வழங்கியுள்ளது.
ஆங்கிலேயர்கள் மதுரையை பிடித்தபோதும் வெள்ளலூர் நாட்டின் உள் நிர்வாகத்தில் தலையிட அவர்களால் முடியவில்லை. 7 கரைக்காரர்கள் கூடி அம்மன் கோவிலிலேயே நீதி நிர்வாகம் வழங்கினர். அப்போது ஏற்பட்ட கொடிய பஞ்சத்தில், பணக்காரர்கள் தானியங்களை பதுக்கியபோது, அம்மன் கோவில் மடப்பள்ளியில் மட்டும் அடுப்பு அணையவில்லை. 11 கரைக்காரர்களும் தாங்கள் நாட்டு மக்கள் வழங்கம் வீட்டு வரி மற்றும் அரிசியை கொண்டு வந்து விழா எடுத்து , கள்ளர் குலத்தின் தலைவர் தலைமையில் பேதமில்லாமல் அனைத்து ஜாதி ஏழைகளுக்கும் ஊற்றினர். அன்று முதல் ஏழைகாத்தம்மன் என்ற பெயர் நிலைத்தது.
*இன்றைய திருவிழா முறை (500 ஆண்டாக மாறாதது):*
1. *15 நாள் நோன்பு:* புரட்டாசியில் 60 கிராம மக்களும் அசைவம் தவிர்த்து விரதம் இருக்கின்றனர். உணவுக் கட்டுப்பாடு, மற்றும் கலாச்சாரம் பண்பாடு கடடாயம் பாதுகாக்கிறனர்
2. கள்ளர் குலத்தின் பிரிவுகளில் *சிறுமிகள் அம்மனாக:* 7 வயதுக்குள் 7 சிறுமிகள் அம்மனாக தேர்வு செய்யப்பட்டு 15 நாளும் கோவிலிலேயே தங்க வைக்கப்படுகின்றனர்.
3. *மது கலய ஊர்வலம்:* வெள்ளலூர் மூல கோவிலில் இருந்து கோட்டநத்தம்பட்டி கண்மாய் வழியாக கோவில்பட்டி பெரிய கோவில் வரை 8 கி.மீ ஊர்வலம். பெண்கள் வயது கடந்த பெண்கள் மற்றும் ஆண்கள் பழமை மாறாது மேல்சட்டை பக்தி காரணமாக அணியும் நிலை இல்லை
4. *சுடுமண் பொம்மைகள்:* இதை *குலாளர்* சமூக மக்கள் கூலிபடடி எனும் ஊரில் களிமண்ணால் செய்கின்றனர். இது போரில் இறந்த முன்னோர்கள், காவல் தெய்வங்களின் வடிவம். மதலை பெண்கள் இதை கையில் ஏந்தி வருகின்றனர். இதுதான் கள்ளர் பெரும்பான்மை நாட்டில் அனைத்து சமூகமும் கலந்து வாழும் அழகுக்கு சான்று.
5. *11 கரைகளின் ஒற்றுமை:* ஒவ்வொரு கரைக்கும் ஒரு பொறுப்பு - ஒரு கரை மது கலயம், ஒரு கரை பூக்கூடை, ஒரு கரை தேர் என பிரித்து நடத்துகின்றனர்.
*11 கரைகள் விவரம்:*
செம்புலி கரை (குப்பச்சிபட்டி), நண்டன் கோப்பன் கரை (குறிச்சிபட்டி), பூலான் மலவராயன் கரை (பழையஒக்கபட்டி), மூண்டவாசி கரை (மேல ஒத்தபட்டி), வேங்கைபுலி கரை (மட்டங்கிபட்டி), சமட்டி கரை (பழையூர்பட்டி), நய்கான் கரை (உறங்கான்பட்டி) ஆகிய 7 தலைமை கரைகள் மற்றும் பாண்டார கரை, மேலூர் கரை, கருத்தான் கரை, கள்ளர் கரை ஆகிய 4 கிளை கரைகள்.
இது வெறும் கோவில் கதை அல்ல, 60 கிராமத்தின் ஒற்றுமை கதை, அனைத்து ஜாதியும் ஒன்றாக வாழும் 500 ஆண்டு கடந்து வந்த சமத்துவ வரலாறு.






































கருத்துகள்