*இன்று காலை 13:13 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு:*
*என்ன வழக்கு?*
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் *எஸ்.காசி ராமலிங்கம்* பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
- மதுராந்தகம் - மரகதம் குமரவேல், தாராபுரம் - சத்தியபாமா, அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா, பெருந்துறை - ஜெயக்குமார், கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை - சி.விஜயபாஸ்கர் ஆகிய 6 அதிமுக MLAக்கள் மே 25 முதல் ஜூன் 29க்குள் ராஜினாமா செய்துவிட்டு தலைமைச் செயலகத்திலேயே தவெக-வில் இணைந்தனர்.
- அவர்கள் கொள்கைக்காக ராஜினாமா செய்யவில்லை, அமைச்சர் பதவி, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் வாய்ப்புக்காக, தகுதி நீக்கத்தில் இருந்து தப்பிக்கவே ராஜினாமா செய்தனர். பொதுத்தேர்தல் முடிந்த சில மாதத்தில் இடைத்தேர்தல் நடத்துவதால் அரசுக்கு நிதிச்சுமை, ஆயிரக்கணக்கான ஆசிரியர், காவலர்கள் மனித சக்தி வீண். எனவே *தேர்தல் செலவை 6 பேரிடமும் வசூலிக்க வேண்டும்* என கோரியிருந்தார்.
*நீதிமன்றம் என்ன சொன்னது?*
சென்னை உயர் நீதிமன்றம் அந்த வழக்கை *விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டது* என கூறி தள்ளுபடி செய்து, மனுதாரர் காசி ராமலிங்கத்திற்கு *ரூ.1 லட்சம் அபராதம்* விதித்தது. 4 வாரத்தில் அபராதத்தை செலுத்த வேண்டும் என உத்தரவு.
இதே போல சைதாப்பேட்டை வழக்கறிஞர் சுதன் தொடர்ந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கையும் செப் 24-ல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, *"ராஜினாமா செய்தவர் மீண்டும் போட்டியிட தடை விதிக்க சட்டத்தில் இடமில்லை, அதை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்"* என கூறியது.

கருத்துகள்