கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம், சக்லேஷ்பூர் தாலுகா.
அங்கு தான் விவசாயி *சொக்கண்ண கவுடா* வசிக்கிறார். சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம். காபி தோட்டம் தான் வாழ்வாதாரம்.
கடந்த வருடம் பயிருக்காக கனரா வங்கியில் ரூ.50,000 கடன் வாங்கியிருந்தார். வட்டி, அசல் என ஒரு ரூபாய் கூட பாக்கி வைக்காமல், கடைசி தவணை வரை கட்டி முடித்துவிட்டார். கடன் முடிந்த சந்தோஷத்தில் இருந்தவருக்கு, 3 மாதம் கழித்து திடீரென ஒரு குறுஞ்செய்தி வருகிறது.
வங்கியின் கம்ப்யூட்டரில் இருந்து வந்த அந்த தானியங்கி மெசேஜில் இப்படி இருந்தது:
*"Your loan account has an overdue of Rs.9.34. Please pay immediately to avoid penalty."*
வெறும் 9 ரூபாய் 34 பைசா. பலரும் இதை கண்டுகொள்ள மாட்டார்கள். சிலர் அலட்சியமாக விட்டு விடுவார்கள். ஆனால் சொக்கண்ண கவுடா அப்படி செய்யவில்லை.
அவருக்கு ஒரு கேள்வி தோன்றியது. "நான் 50,000 ரூபாயை கட்டும்போது ஒரு நாள் தாமதமானால் கூட அபராத வட்டி போடும் வங்கி, இப்போது 9 ரூபாய்க்கும் கணக்கு கேட்கிறதே, அப்படியென்றால் என் பணமும் கணக்கு தானே?"
*மறுநாள் காலை 11 மணி.*
சொக்கண்ண கவுடா நேராக சக்லேஷ்பூர் கனரா வங்கிக்கிளைக்கு சென்றார். கையில் 10 ரூபாய் நோட்டுடன் கவுண்டரில் நின்றார்.
கேஷியரிடம் அந்த 10 ரூபாயை நீட்டினார்.
"சார், என் கணக்கில் 9.34 பாக்கி இருக்குன்னு மெசேஜ் வந்தது. இந்தா 10 ரூபாய். என் பாக்கியை எடுத்துக்கிட்டு, மீதி 66 பைசாவை திருப்பி கொடுங்க சார்" என்றார் புன்னகையுடன்.
வங்கி ஊழியர்கள் முதலில் சிரித்தனர். பின்னர் தான் பிரச்சனை புரிந்தது.
இப்போது 66 பைசா என்ற சில்லறை இந்தியாவில் புழக்கத்திலேயே இல்லை! 50 பைசா கூட கிடைப்பது கடினம். 66 பைசாவை எப்படி திருப்பிக் கொடுப்பது?
"பெரியவரே, சில்லறை இல்லை, நீங்க 9.34-க்கு பதிலா 10 ரூபாயாவே கட்டிட்டு போங்க" என்றார் கேஷியர்.
அதற்கு அந்த விவசாயி விட்ட பதில் தான் அங்கிருந்த அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
*"சார், நான் 50,000 கட்டும்போது நீங்க 49,999.66 கட்டினா போதும், மீதி 34 பைசாவை விட்டுடுறோம்னு சொல்வீங்களா? சொல்ல மாட்டீங்க. ஒரு பைசா கூட விட மாட்டீங்க. அதே மாதிரி தான் எனக்கும். என் 66 பைசா எனக்கு பெருசு தான் சார்."*
அந்த கிளையில் ஒரு சிறு சலசலப்பு ஏற்பட்டது. விஷயம் மேலாளருக்கு போனது. மேலாளர் வந்து சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் விவசாயி பிடிவாதமாக நின்றார்.
விஷயம் வெளியே தெரிந்து, உள்ளூர் பத்திரிகையாளர்கள் வரவே, வங்கி நிர்வாகம் யோசித்தது.
கடைசியில் வங்கி நிர்வாகம் ஒரு அழகான முடிவை எடுத்தது. அந்த 10 ரூபாயை வாங்கிக்கொண்டு, மீதம் உள்ள 66 பைசாவை *அவரது சேமிப்பு கணக்கிலேயே வரவு வைத்து*, அந்த 9.34 பாக்கி கணக்கை முழுமையாக முடித்து வைத்தது.
வங்கி தரப்பில் பின்னர், "இது போன்ற சிறு பைசா பாக்கிகள் வட்டி கணக்கிடும் போது கம்ப்யூட்டரில் தானாக உருவாகும் Round-off தவறு தான், ஊழியர்கள் தவறு இல்லை" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், அந்த விவசாயி கேட்ட நியாயமான கேள்வி இன்று நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
*வங்கிகள் வாடிக்கையாளரிடம் ஒரு பைசாவை கூட விடாமல் கறாராக இருக்கும்போது, வாடிக்கையாளரின் ஒரு பைசாவுக்கும் அதே மரியாதையை வங்கிகள் கொடுக்க வேண்டும் அல்லவா?*
சொக்கண்ண கவுடாவின் 66 பைசா போராட்டம், சாமானிய மக்களின் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.*₹50,000 கடனை கட்டிய பின்பும் ₹9.34 பைசாவுக்கு நெருக்கடியா? வங்கிகளின் அலட்சியம்!
கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் ₹50,000 கடனை முழுமையாக அடைத்த பின்பும், வங்கி அவருக்கு ₹9.34 பைசா பாக்கி உள்ளது என நெருக்கடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கி ₹9.34 என கடிதம் வந்ததால், கடுப்பான அந்த நபர் ₹10 செலுத்திவிட்டு, "மீதி 66 பைசாவை நாணயங்களாக திருப்பி தராவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும்" என பதிலுக்கு சவால் விட்டுள்ளார்!
*இதில் வங்கி செய்தது சரியா? சட்டம் என்ன சொல்கிறது?*
1. *ரிசர்வ் வங்கி (RBI) விதி:* வங்கிகள் தங்கள் கணக்குகளை ரூபாய்க்கு Round Off செய்ய வேண்டும். 50 பைசாவுக்கு கீழ் இருந்தால் தள்ளுபடி செய்ய வேண்டும், 50 பைசாவுக்கு மேல் இருந்தால் அடுத்த ரூபாயாக கணக்கிட வேண்டும். வெறும் 34 பைசாவுக்காக நெருக்கடி கொடுப்பது விதிமீறல்.
2. *நியாயமற்ற நடைமுறை (Unfair Practice):* கடனை முழுமையாக கட்டிய பின் NOC (No Due Certificate) கொடுக்காமல், பைசா கணக்கு காட்டி CIBIL Score-ஐ குறைப்பதாக மிரட்டுவது தவறு.
3. *வாடிக்கையாளர் நீதிமன்றம்:* இது போன்ற சில்லறை பாக்கிக்காக மன உளைச்சல் கொடுத்தால், வாடிக்கையாளர் நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரலாம்.
*பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?*
கடனை அடைத்த பின், கட்டாயம் NOC வாங்குங்கள். உங்கள் CIBIL Report-ல் "Closed" என உள்ளதா என சரி பாருங்கள். சில்லறை பாக்கி என்று வந்தால், வங்கியின் Ombudsman-க்கு புகார் அளிக்கலாம்.
வங்கியின் இந்த நடவடிக்கைக்கு அந்த நபர் கொடுத்த பதிலடி சரியா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பப்ளிக் ஜஸ்டிஸ் கமெண்டில் சொல்லுங்கள்.


கருத்துகள்