முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கைலாஷ் யாத்திரை காணாமல் போன ஓய்வு நீதிபதியைக் கன்டறியும் நிலை அறிக்கை 8 நாளில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு டில்லி தமிழ் வழக்குரைஞா்கள் சங்கம் முன்னர் அனுப்பியுள்ள கடிதத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி வி. சிவஞானம்


இந்திய நீதித்துறையில் ஏறக்குறைய 34 ஆண்டுகள் நீடித்த ஒரு சிறப்பான பணியைக் கொண்டிருந்தாா். 23 ஜூலை 2025 ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா்.

தற்போது அவர் தமிழ் யாத்ரீகா்கள் குழுவின் ஒரு பகுதியாக நேபாளத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்தில் எடுக்கப்பட்ட ஒரு குழுப் புகைப்படம், அவா் அக்குழுவுடன் இருந்ததை உறுதி செய்கிறது. 26 ஆகஸ்ட் 2026 அன்று அதிகாலை வேளையில், அவா் தனது மனைவிக்கு செல்லுலர் வாட்ஸ்அப் அழைப்பு விடுத்தாா், அதன் பிறகு வேறு எந்தத் தொடா்பும் ஏற்படவில்லை. திமுரேயில் உள்ள நேபாள ஆயுதப் பாதுகாப்புப் படை எல்லைச் சாவடிக்கு அருகே மீட்கப்பட்ட, மற்றொரு பேருந்தில் பயணித்தவா்கள், நீதிபதி சிவஞானத்தின் பேருந்து தங்களது பேருந்திலிருந்து சுமாா் 100-200 மீட்டா் தொலைவில் மட்டுமே இருந்ததாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனா்.





எனவே, அவரது பாதுகாப்பு மற்றும் இருப்பிடம் குறித்து அவரது குடும்பத்தினரும் எங்கள் சங்கமும் மிகுந்த கவலை கொண்டுள்ளனா். ஓய்வுபெற்ற நீதிபதி வி.சிவஞானத்தை கண்டறிந்து, அவரது பாதுகாப்பு மற்றும் இருப்பிடத்தை உறுதிசெய்து, அவா் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கு வழிவகை செய்ய, வேண்டுகோளை இந்திய அரசுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறும், சாத்தியமான மற்றும் உடனடியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையுடன் தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலவாழ்வு மற்றும் புனா்வாழ்வு ஆணையா் ஆா். சதீஷ், ஐ.ஏ.எஸ்.க்கும் டில்லி தமிழ் வழக்குரைஞா்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதேபோல் நேபாளத்தில் பயணம் செய்த Infosys CEO-வைத் தொடர்பு கொள்ள முடியவில்லை; தேடும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், தற்போதைய உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான நீதிபதி வீ. சிவஞானம் நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது அரும் காணாமல் போயுள்ளார். லக்ஸ் கோபிசெட்டி இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸின் அமெரிக்கத் துணை நிறுவனமான 'இன்ஃபோசிஸ் பப்ளிக் சர்வீசஸ்' சிஇஓ ஆவார். நேபாள-திபெத் எல்லைப் பகுதிக்கு தனிப்பட்ட முறையில் சுற்றுலா சென்றிருந்தவர், வெள்ளப் பாதிப்புக்குப் பின் தொடர்புகொள்ள முடியாமல் காணாமல் போயுள்ளார். இவரைத் தேடும் பணியில் இன்ஃபோசிஸ் நிறுவனம் அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. 


சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி. சிவஞானம் அவர்கள், நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து ஆகஸ்ட் 26 முதல் காணாமல் போயுள்ளார். அவர் தமிழ் பக்தர்கள் குழுவுடன் நேபாளம் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 சுமார் 34 ஆண்டுகள் நீதித்துறையில் பணியாற்றிய

நீதியரசர் வீ.சிவஞானத்தை பாதுகாப்பாக கண்டுபிடித்து மீட்க மெட்ராஸ் பார் அசோசியேஷன் (MBA) முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

MBA தலைவர் வி.ஆர். கமலநாதன் மற்றும் செயலாளர் ஜெ. போத்திராஜ் ஆகியோர், இந்திய தலைமை நீதிபதி நீதியரசர் சூர்யகாந்த், பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை அவசரமாகவும் தீவிரமாகவும் மேற்கொள்ள கோரியுள்ளனர். 

இந்திய மற்றும் நேபாள அதிகாரிகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, கிடைக்கக்கூடிய அனைத்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் பயன்படுத்தி, நீதிபதி வீ.சிவஞானத்தை பாதுகாப்பாக இந்தியாவிற்கு வரவைக்க வேண்டும் என்றும் MBA வலியுறுத்தியுள்ளது. 


நேபாள வெள்ளத்தில் மாயமான 85 தமிழ் யாத்ரீகர்கள் - மத்திய, மாநில அரசுகளிடம் நிலை அறிக்கை கோரி உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் மீட்புக்காக காத்திருக்க; 220 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 85 பேர் தொடர்பு இல்லாமல் உள்ளனர்; குடும்பத்தினர் காத்மாண்டுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் 

 நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர மின்னல் வெள்ளப் பெருக்கில் சிக்கி மாயமான 85 தமிழ் யாத்ரீகர்களை மீட்கும் முயற்சிகள் குறித்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் நிலை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, திண்டுக்கல் வழக்கறிஞர் ஏ.எஃப். பர்வேஷ் முஷ்ரஃப் தாக்கல் செய்த பொதுநல மனு அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

நேபாள-திபெத் எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர மின்னல் வெள்ளப் பெருக்கில், கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரையில் ஈடுபட்டிருந்த தமிழக யாத்ரீகர்கள் சிக்கிக் கொண்டனர். தமிழக அரசு தரப்பில், 305 பேர் நேபாளத்திற்கு பயணம் மேற்கொண்டதாகவும், இதுவரை 220 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரப்பட்டதாகவும், 85 பேர் இன்னும் தொடர்பு இல்லாமல் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் சென்னை முதல் அமர்வுக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி, 

305 யாத்ரீகர்களில் 220 பேர் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ள 85 பேரை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாயமான யாத்ரீகர்களின் குடும்பத்தினர், அரசு செலவில் காத்மாண்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு இல்ல அதிகாரிகள், இந்தியத் தூதரகம் மற்றும் நேபாள அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி. சிவஞானம் இந்த வெள்ளத்தில் மாயமானவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 26 அன்று அவரது மனைவியுடன் கடைசியாக பேசிய அவர், அதன்பின்னர் தொடர்பு இல்லாமல் போயுள்ளார்.

தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு பயணம் மேற்கொண்டவர்களில் முக்கியமாக இரண்டு குழுக்கள் உள்ளன:

57 பேர் (54 தமிழகம் + 3 புதுச்சேரி) - இவர்களில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

49 பேர் - இவர்களில் எவருடனும் இதுவரை தொடர்பு இல்லை.

மொத்தம் 106 பேர் (103 தமிழகம் + 3 புதுச்சேரி) இந்த இரண்டு குழுக்களில் பயணம் மேற்கொண்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய மற்றும் மாநில அரசுகள், மீட்புப் பணிகள் குறித்து விரிவான நிலை அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், மாயமான யாத்ரீகர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 85 தமிழ் யாத்ரீகர்கள் இன்னும் மாயமாகியுள்ள நிலையில், நீதிமன்றம் தலையிட்டு நிலை அறிக்கை கோரியுள்ளது. இது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு நம்பிக்கை. ஆனால், அதிகாரப்பூர்வ பட்டியல்கள் இல்லாததால், மாயமானவர்களின் எண்ணிக்கை குறித்த குழப்பம் தொடர்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி வி. சிவஞானம் உள்ளிட்டோர் மீட்புக்காக காத்திருக்கும் நிலையில், மீட்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். குடும்பத்தினர் காத்மாண்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது ஒரு நல்ல நடவடிக்கை. ஆனால், உண்மையான மீட்பு மட்டுமே அவர்களின் துயரத்தை போக்கும். கும்பகோணம் சூப்பர் யாத்திரா குழுவில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், மகாதேவ் கைலாஷ் யாத்திரா குழுவில் இருந்து யாரும் மீட்கப்படவில்லை. இந்த குழுவினரின் நிலை குறித்து அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். 8 நாட்களில் நிலை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவு, நீதிமன்றம் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதை காட்டுகிறது. மீட்புப் பணிகள் குறித்த வெளிப்படையான தகவல்கள் வெளியாக வேண்டும்.

8 நாட்களுக்குள், மத்திய மற்றும் மாநில அரசுகள் மீட்புப் பணிகள் குறித்த நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மாயமான 85 பேரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடரும். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை, அந்த அறிக்கையின் அடிப்படையில் நடைபெறும். என அறிவித்தது,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...