*தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின் 8-வது மாநில மாநாடு - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கோலாகலம்*
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின் எட்டாவது மாநில மாநாடு இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
*அமைச்சர் பேசியதாவது:*
"ஒரு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் மூளை என்றால், செவிலியர்கள் இதயமாக செயல்படுகிறார்கள். அப்படிப்பட்ட செவிலியர்களின் நலனில் இந்த அரசு மிகுந்த அக்கறையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கடந்த 12 வருடங்களாக தமிழ்நாட்டில் புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏழு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். சொன்னதை செய்துவிட்டோம். மூன்று நாட்களுக்கு முன் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது."
*புதிய நியமனங்கள்:*
- விரைவில் *896 கிராம சுகாதார செவிலியர்கள்* பணி நியமனம்.
- செவிலியர் பற்றாக்குறையை போக்க *4,724 புதிய செவிலியர்கள்* மாவட்ட நல சங்கங்கள் மூலம் வெளிப்படையான முறையில் நியமனம்.
- ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் *2,500 தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம்* செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியீடு.
*7 புதிய செவிலியர் கல்லூரிகள் - ரூ.351 கோடி திட்டம்:*
2014-க்குப் பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையை போக்க, 110 விதியின் கீழ் ரூ.351 கோடி மதிப்பீட்டில் புதிய இடங்கள் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 http://B.Sc செவிலியர் இடங்களுடன் *6 புதிய கல்லூரிகள்*. இதற்கான ரூ.270.26 கோடி செலவினம் MGR மருத்துவ பல்கலைக்கழக நிதியிலிருந்து ஏற்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு *2026-2027 முதல் 600 இடங்களுக்கு* மாணவர் சேர்க்கை தொடங்கும்.
கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ESI மருத்துவமனையில் 60 இடங்களுடன் *7-வது கல்லூரி* உருவாக்கப்படுகிறது.
மேலும் ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் *1,925 கூடுதல் இடங்கள்* - DGNM-ல் 1290, B.Sc-ல் 440, M.Sc-ல் 75, Post Basic B.Sc-ல் 120 இடங்கள்.
மொத்தம் *2,585 கூடுதல் இடங்கள்* மூலம் கிராமப்புற இளம் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பயனடைவர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.













கருத்துகள்