ஏடிஎம் (ATM) இயந்திரங்களை உடைத்தோ அல்லது ஒட்டுமொத்தமாக இயந்திரத்தையே தூக்கிச் சென்றோ கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
தமிழ்நாட்டின் சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் அடுத்தடுத்து மூன்று முக்கிய ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அண்மையில் நடந்த முக்கிய கொள்ளைச் சம்பவங்கள் குறித்து விபரம் :- திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு- செப்டம்பர் 5, 2026: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கியின் ஹிட்டாச்சி (Hitachi) ஏடிஎம் மையத்தில், முழு ஏடிஎம் இயந்திரத்தையுமே கொள்ளையர்கள் பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த இயந்திரத்தில் சுமார் ரூபாய் 5 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மையத்தில் பாதுகாப்பு காவலர் யாருமில்லை
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி - ஆகஸ்ட் 27, 2026: கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் கேஸ் வெல்டிங் டார்ச் மூலம் இயந்திரத்தை வெட்டி, அதிலிருந்த ரூபாய் 11.5 லட்சம் முதல் ரூபாய் 12 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டது.
அதேமாதிரி காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம்- ஆகஸ்ட் 2026: ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்-மில், கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் லாக்கரை உடைத்து ரூபாய் 10 லட்சம் திருடப்பட்டது. கொள்ளையர்கள் முழு இயந்திரத்தையும் கடத்துதல் நடக்கிறது, கடந்த காலத் திருடர்கள் லாக்கரை மட்டும் உடைத்த கொள்ளையர்கள், தற்போது வாகனங்கள் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த ஏடிஎம் இயந்திரத்தையே பெயர்த்து எடுத்துச் செல்லும் துணிச்சலான வழியைக் கையாள்கின்றனர். சிசிடிவி மற்றும் அலாரத்தை செயலிழக்கச் செய்து கேமராக்களில் தங்களின் முகம் தெரியாமல் இருக்க இரசாயன ஸ்பிரேக்களை அடிக்கின்றனர்.
மேலும், வங்கியின் தலைமை அலுவலகத்திற்குச் செல்லும் அலாரம் சைரன் இணைப்புகளையும் துண்டிக்கின்றனர்.
இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியில் வட மாநிலங்களான ஹரியானா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஒரு பெரிய கும்பல் நெட்வொர்க் இருக்கலாம் என காவல்துறை புலனாய்வுப் பிரிவு சந்தேகிக்கிறது. இதில் தொடர்புடைய பவன் குமார் என்ற முக்கிய குற்றவாளி ஜெய்ப்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.





கருத்துகள்