முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடிப்பகத்துப் பணியாளரை உயர்த்தி, படிப்பகத்துப் பணியாளரை வீழ்த்துகிறதா! அரசின் சம்பள அறிவிப்பு -அலசல் ஆய்வுக் கட்டுரை

குடிப்பகத்துப் பணியாளரை உயர்த்தி, படிப்பகத்துப் பணியாளரை வீழ்த்துகிறதா! அரசின் சம்பள  அறிவிப்பு !?, -அலசல் ஆய்வுக் கட்டுரை,. 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டிற்கான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை (Demand No. 37) மீதான விவாதமும் கொள்கை விளக்கக் குறிப்புத் தாக்கல் செய்த ஆகஸ்ட் 31, 2026 அன்று  இத்துறைக்கான புதிய அறிவிப்புகள் மற்றும் கொள்கை முடிவுகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் கே. விக்னேஷ் சட்டப்பேரவையில் வெளியிட்டதில்.










கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் கள்ளச்சாராய உற்பத்தியை முழுமையாக ஒழிப்பதற்காகவும், போலி மதுபானப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பல்வேறு உத்திகள் அறிவிக்கப்பட்டுள்ளன, கள்ளச்சாராயத் தொழிலை கைவிட்டு, திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளிகளின் பொருளாதார மறுவாழ்விற்கான தனிநபர் நிதியுதவித் தொகை இந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கள்ளச்சாராய நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் தடுக்கவும் காவல் மற்றும் ஆயத்தீர்வை துறைகளில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் வாகனங்கள் மேம்படுத்தவும். டாஸ்மாக் (TASMAC) ஊழியர்கள் நலம் மற்றும் சீர்திருத்தங்கள் டாஸ்மாக் கடைகளின் கட்டமைப்பு மற்றும் பணியாளர்களின் நலன் சார்ந்து முக்கிய விவாதங்களும் அறிவிப்புகளும் மேற்கொள்ளப்பட்டதில் டாஸ்மாக் கடைப் பணியாளர்களுக்கு கடந்த 100 நாட்களில் 2-வது முறையாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது கல்வித்துறை உதவி பேராசிரியர்களின் ஊதியத்திற்கு நிகரானதாகவே பார்க்கப்படுகிறது, சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்தாமல் தனியார் நடத்தினால் இந்த செலவு மிச்சம், மற்றும் ஊழல் நடக்காது, மதுப் பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) கூடுதலாகப் பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது பணிநீக்கம்  உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பாயும் எனவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.   கடந்த காலங்களில் கடைகளுக்கான மின்சாரக் கட்டணம் மற்றும் இதர பராமரிப்புப் பணிகளுக்குப் போதிய நிதி ஒதுக்கப்படாத காரணத்தினால் ஏற்பட்ட சிக்கல்களைக் களைய, இந்த பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.3. நிதி ஒதுக்கீடு மற்றும் வருவாய் திட்டங்களில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூபாய் 17,290 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.போலி மதுபான விற்பனையைத் தடுக்கவும், முறையான வரி வசூலை உறுதி செய்யவும் மதுபானப் பாட்டில்களில் பயன்படுத்தப்படும் பாலியஸ்டர் அடிப்படையிலான ஹோலோகிராம் ஆயத்தீர்வை வில்லைகள்  3 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்ய புதிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. என்பதே அரசின் அளிவிப்பு





தங்கள் உடலையும், தங்கள் குடும்பத்தினரின் நிம்மதியைக் கெடுத்து, அரசுக்கு வருமானமளிக்கும்,   குடிகார குடிமகன்களே,  



 பொதுமக்களே, பாட்டிலுக்கு  10 ரூபாய் பாட்டு ஆனால் தற்போது அரசே மது விற்பனையை அதிகரிக்க ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கி ஊக்கம் தருகிறது இது மக்கள் அழிவுக்கு அரசு தரும் வெகுமதி, போதை ஒழிக்க, மது விற்பணை என்பது கண்கள் விற்று சித்திரம் வாங்கும் நிலை அன்றி வேறில்லை,






இதோ நமது நண்பர், சமூக சேவகர் G தேவராஜன் மதுக்கடைகளில் மதுபாட்டிலுக்கு இரசீது கொடுக்கவில்லை என்பதற்காகவும், பாட்டிலுக்கு 10 ரூபாய் சட்டத்திற்கு முரணாக வசூல் செய்ததற்கு, 37 டாஸ்மாக் கடைகள் உட்பட ENFORCEMENT DIRECTORTORATE ஆகிய துறைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, இனிமேல்  டாஸ்மாக ஊழியர்கள் மதுபாட்டிலுக்கு இரசீது கொடுக்கவில்லை என்றாலும், பாட்டிலுக்கு 10 ரூபாய் சட்டத்திற்கு முரணாக வசூல் செய்தாலும் , உரிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்ற உத்தரவைப் பெற்றுள்ளார். அரசு தான் மதுவை படிப்படியாக ஒழிக்க முன்வரவேண்டும் அதற்கு தேவை ஊழியர்கள் ஊதிய உயர்வு அல்ல, இதுவே மக்களை மகிழ்ச்சி அடைய வைக்கும், மேலும் தமிழ்நாடு அரசின் மானியக் கோரிக்கை எண் 20 என்பது உயர்கல்வித் துறை இந்த நிதியாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இந்த மானியக் கோரிக்கையின் கீழ் உயர்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடுகளும், புதிய திட்டங்களுக்கான முக்கிய அறிவிப்புகளும் சட்டப்பேரவையில் வெளியிட்ட தவெக கூட்டணி அமைச்சரவையின் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் சமீபத்திய 2026-2027 ஆம் நிதியாண்டுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை எண் 20-ன் கீழ் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்களாக நிதி ஒதுக்கீடு மற்றும் முக்கிய திட்டங்கள் 





ஒட்டுமொத்த ஒதுக்கீடு: 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்காக ரூபாய் 8,393 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.வெற்றி மடிக்கணினி திட்டம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குவதற்காக ரூபாய் 2,000 கோடி பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. வரவேற்கலாம்,  உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 20 லட்சம் வரை பிணையற்ற  கல்விக்கடன் வழங்க இத்திட்டம் செயல்படுத்தப்படும்.இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படும். மாநில அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ரூபாய் 1,807 கோடி மானியமாக வழங்கப்படவுள்ளது.  தமிழ்நாடு மாணவர் விடுதிகள் மற்றும் உள்கட்டமைப்பு கழகம் (TNHSC) மூலம் ரூபாய் 3,200 கோடி செலவில் 1 லட்சம் படுக்கை வசதிகள் கொண்ட 200 நவீன ஒருங்கிணைந்த விடுதிகள்  கட்டப்படும். மதுரையில் 300 மாணவர்கள் சேர்க்கை வசதியுடன் புதிய அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும். அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 6,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மூன்று கட்டங்களாக நிரப்பப்படும்.


கௌரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வாக அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 8,000 கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியம் ரூபாய் 30,000-லிருந்து ரூபாய் 35,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.பாலிடெக்னிக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியம் ரூபாய் 25,000-லிருந்து ரூபாய் 30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இது குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் ஊதியம் குறித்து ஒரு ஒப்பீடுகளை இங்கு காணலாம்,   இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மேம்பாடு: உயர்கல்வி நிறுவனங்களுக்கான நியமனங்களை தடையின்றி நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் தரம் உயர்த்தப்படும்.சமூக நலன் மற்றும் உள்ளடக்கிய உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் 50 திருநங்கைகளுக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.    கௌரவ விரிவுரையாளர் சம்பளமும் டாஸ்மாக் ஊழியர்கள் சம்பளமும் ஒரு ஒப்பீடு முக்கிய வேறுபாடுகள் மற்றும் சலுகைகளானது



கல்வித் தகுதியில் கௌரவ விரிவுரையாளர்கள் Ph.D, NET அல்லது SET போன்ற மிக உயரிய கல்வித் தகுதிகளையும், பேராசிரியருக்கான தகுதிகளையும் பெற்றவர்கள். டாஸ்மாக் ஊழியர்கள் பள்ளி மற்றும் பட்டப்படிப்பு தகுதிகளைக் கொண்டவர்கள்.  கௌரவ விரிவுரையாளர்களுக்கு கல்வி ஆண்டின் 11 மாதங்களுக்கு மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது (மே மாத விடுமுறைக்குச் சம்பளம் இல்லை).



ஆனால், டாஸ்மாக் ஊழியர்களுக்கு வருடத்தின் 12 மாதங்களும் முழுச் சம்பளம் உண்டு. கூடுதல் சலுகைகள் (டாஸ்மாக் ஊழியர்களுக்கு): ஆகஸ்ட் 31, 2026 அன்று அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பின்படி, டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாதச் சம்பளத்துடன் சேர்த்துப் பின்வரும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன:




ரூபாய் 20,000 பண்டிகை முன்பணம்.ஆண்டுக்கு 3 சீருடைகள் மற்றும் தையல் கூலி (₹6,000).வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் 8 மணி நேர வேலை சுழற்சி. தகுதியுடைய 250 ஊழியர்களுக்கு அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணி உயர்வு.  என பல சலுகை கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையில் தங்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC Norms) பரிந்துரைப்படி குறைந்தபட்சம் ரூபாய் 50,000 முதல் ரூபாய் 57,500 வரை சம்பளம் வழங்க வேண்டும் என்றும், 12 மாதங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் ஆசிரியர்களின் TET தகுதி தொடர்பான வழக்கு: TET தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை 2026–27-ஆம் ஆண்டிற்கான இடமாற்றக் கலந்தாய்வை நடத்த இடைக்காலத் தடை – பதவி உயர்வு பட்டியலை இறுதி செய்ய TET முடிவுகள் முக்கியம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  வழக்கு எண்கள்: W.P.Nos.25577, 26295, 25637, 25644, 25647, 25648, 25650, 25667, 25668, 25674, 25675, 25697 & 25700 of 2026 மற்றும் தொடர்புடைய W.M.P. வழக்குகள் வரிசையாக வருகிறது, இதைத் தீர்வு செய்ய வேண்டியது அரசு கடமையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...