முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு தொழில் எளிதாக்கல் (திருத்த) மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றம்

தமிழ்நாடு தொழில் எளிதாக்கல் (திருத்த) மசோதாவை சட்டமன்றத்தில் இன்று அறிமுகப்படுத்தி நிறைவேற்றினார் அமைச்சர் கீர்த்தனா, 


தமிழ்நாடு தொழில் எளிதாக்கல் (திருத்த) மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் இன்று 2 செப்டம்பர் 2026 ஆம் தேதி முறைப்படி அறிமுகப்படுத்திய நிலையில் அவையில் நிறைவேறியது, மாநிலத்தில் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும், அவற்றுக்கான உரிமங்களைப் பெறுவதற்கும் நிலவும் காலதாமதத்தைக் குறைத்து, "தொழில் செய்வதை எளிதாக்கும்"  நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவதே இந்த திருத்த மசோதாவின் முக்கிய நோக்கம்



ஏற்கனவே தமிழ்நாட்டில் புதிய நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் தொடங்குவதற்கான அனுமதிகள் 21 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய சட்டத்திருத்தம் ஆன்லைன் மற்றும் ஒற்றைச் சாளர  முறையை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பட்டாசு ஆலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு உரிமம், மற்றும் மீண்டும் புதுப்பித்தல்  அனுமதிகள் பெற நீண்ட காலம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விதிமீறல்களைத் தடுக்கவும், மொபைல் செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக உரிமங்களை எளிதாகப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், முந்தைய ஆட்சிக்காலங்களில் உரிமங்கள் வழங்கப்பட்டதில் நிலவிய முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் குறித்து அமைச்சர் கீர்த்தனா பேசியது அவையில் எதிர்க்கட்சியினரின் கடுமையான எதிர்ப்பையும் விவாதத்தையும் கிளப்பியது,. இந்த நிலையில்



தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் ச. கீர்த்தனா இந்த திருத்த மசோதாவைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேறியது, தொழில் நிறுவனங்கள் தொடங்க அனுமதி பெறுவதையும் உரிமம் வழங்கும் நடைமுறைகளையும் மேலும் எளிதாக்குவது இதன் நோக்கமாகும். மாநிலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், நிர்வாகச் செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்கும் இந்த மசோதா உதவியாக இருக்கும்.தி.மு.க., ஆட்சி குறித்து, அமைச்சர் கீர்த்தனா பேசியதற்கு, தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை தொடர்ந்து, அவர் பேசியது சபை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. சட்டசபையில், அமைச்சர்  பட்டாசு தொழிற்சாலை தொடங்க அனுமதி பெற மூன்று ஆண்டுகள், புதுப்பித்தலுக்கு ஓராண்டு ஆகிறது. இதனால், பல தொழிற்சாலைகள் விதிகளை மீறி செயல்படுகின்றன. இது போன்ற விதிமீறல்களால், 89 சதவீத விபத்துக்கள் நடக்கின்றன. ஆனாலும், சிவகாசியில் ஒரு தீயணைப்பு நிலையம் மட்டுமே உள்ளது. தற்போது இரண்டாவது தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அத்துடன், 2000 ஆம் ஆண்டில், 100 படுக்கையுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, இன்னும் அறிவிப்பாகவே உள்ளது. பட்டாசு தொழிற்சாலைகளுக்கான அனுமதியை எளிதாக்கும் வகையில், 'ஆன்லைன்' முறையில் உரிமம் பெற, மொபைல் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. அதேபோல, அதிக கெமிக்கல் சேர்த்து, பட்டாசு தயாரிப்பதை கண்காணிக்க, பரிசோதனை மையம் உருவாக்கப்படும். அப்பகுதி மக்களுக்காக தோல் வங்கி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். அத்துடன், தி.மு.க., ஆட்சியில் என்ன நடந்தது என அவர் கூற, அதற்கு தி.மு.க., வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டனர். மேலும், அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டதை போல, த.வெ.க., ஆட்சியிலும் நடந்துள்ளதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். இருவரின் பேச்சும், சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக, சபாநாயகர்  ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் (திருத்த) மசோதா, 2026 (Tamil Nadu Business Facilitation (Amendment) Bill), தொழில்கள் மற்றும் முதலீடுகளுக்கான பல்வேறு அரசு அனுமதிகளை (Clearances) வழங்குவதற்கான கால வரம்பு அதிகபட்சமாக 21 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில சட்டங்களின் கீழ் கால வரம்பு குறிப்பிடப்படாத அல்லது 21 நாட்களுக்கு மேல் உள்ள அனுமதிகள் அனைத்தும் இனி 21 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் (பொது மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்கள் இதில் கணக்கிடப்படாது). தமிழ்நாட்டில் அதிக மதிப்புள்ள மற்றும் மூலோபாய முதலீடுகளை (Strategic Investments) ஒருங்கிணைத்து கண்காணிக்க "தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்" (Tamil Nadu Investment Promotion Commission) அமைக்கப்படும். இந்த புதிய உயர் மட்ட ஆணையத்தின் தலைவராக மாநில தலைமைச் செயலாளர் (Chief Secretary) செயல்படுவார். தொழில் துறைச் செயலாளர் இதன் உறுப்பினர்-செயலராக இருப்பார். ரூபாய் 200 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மூலதன முதலீடுகள், 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டங்கள், மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை இந்த ஆணையம் நேரடியாகக் கண்காணிக்கும். சிப்காட் (SIPCOT), டிட்கோ (TIDCO), சிட்கோ (SIDCO) போன்ற அரசு முகமைகளால் தொழில்களுக்காக ஒதுக்கப்பட்டு, இன்னும் மேம்படுத்தப்படாமல் உள்ள நிலங்களின் பயன்பாடு குறித்து இந்த ஆணையம் ஆய்வு செய்யும். இந்த ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்தும் மாநிலத்தின் ஒற்றைச்சாளர குழுக்கள் (Single-window committees) மற்றும் துறை சார்ந்த நோடல் முகமைகளைக் கட்டுப்படுத்தும்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...