லெப்டினன்ட் ஜெனரல் உல்ஹாஸ் கிர்பேக்கர் இந்திய ராணுவத்தின் தக்ஷிண பாரத மண்டல புதிய தலைமைத் தளபதியாக செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்
ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி அன்று ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரிக்கு பதிலாக இவர் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.ராணுவ மரியாதை: சென்னை தீவுத்திடலில் உள்ள போரினில் மடிந்த வீரர்களின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தி இவர் தனது பணியைத் தொடங்கினார்., இதற்கு முன்னதாக இவர் இந்திய ராணுவத்தின் நிதித் திட்டமிடல் இயக்குநராக பதவி வகித்துள்ளார். மேலும், உத்தர் பாரத மண்டலத் தளபதியாகவும், ஜோத்பூர் சப்-ஏரியா தளபதியாகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.விருதுகள்: ராணுவத்தில் இவரது சிறந்த சேவையைப் பாராட்டி இவருக்கு அதி விசிஷ்ட சேவா பதக்கம் மற்றும் சேனா பதக்கம் வழங்கப்பட்டுள்ளன.தக்ஷிண பாரத மண்டலம் இந்திய ராணுவத்தின் தெற்குப் படைப்பிரிவின் கீழ் செயல்படும் இந்த தக்ஷிண பாரத மண்டலத்தின் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது.இந்த மண்டலம் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய ராணுவ நிர்வாகப் பாதுகாப்பிற்குப் பொறுப்பானதாகும். இந்திய ராணுவத்தில் கடந்த 38 ஆண்டுகளாக பணியாற்றியவர்,

கருத்துகள்