முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

 நகராட்சி நிர்வாகத் துறையின் டெண்டர் முறைகேடு காரணமாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு சம்பந்தப்பட்ட இடங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் DVAC சோதனை !


முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புள்ள 19 இடங்களும் அதில் அடக்கம், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அதிரடி சோதனையானது “ரூபாய் .1000 கோடி வேலைவாய்ப்பு முறைகேடு” சம்பந்தப்படடது,

“நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பேர் பணியமர்த்தலில் திமுக கட்சி நிதி வசூல் என்ற பெயரில் சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றமானது திமுக முதன்மைச் செயலாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே.என்.நேரு  அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்பான 19 இடங்களில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) திருச்சிராப்பள்ளி தில்லைநகர் இல்லத்தில் 10-க்கும் மேற்பட்ட விஜிலன்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர் 

இன்று 05.09.2026 காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாகக் கூறப்படும் ரூபாய் .1000 கோடி மதிப்பிலான வேலைவாய்ப்பு முறைகேடு மற்றும் டெண்டர் ஒப்பந்தங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கே.என்.நேரு தொடர்புடைய அலுவலகங்கள். சென்னை: மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், அண்ணாநகர், ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நேரு மற்றும் அவரது சகோதரரின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள்.

கோயமுத்தூர் முறைகேட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் உயர் அதிகாரிகளின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 

மொத்தம் 19 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.என்.நேரு, முந்தைய திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,2,538 பேரை பணியமர்த்துவதில் முறைகேடு நடந்ததாகவும், மேலும், திமுக அரசியல் கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்) வசூல் என்ற பெயரில், பல்வேறு நிறுவனங்களை மிரட்டி சட்டவிரோத முறையில் பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்டதாகவும்  எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்,ஊழல் நடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் பிரிவு 7(c) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) தொடர்பான பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறது.

அதில் இன்று  காலை 7 மணியளவில், நான்கு வாகனங்களில் வந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், திருச்சிராப்பள்ளி தில்லைநகரில் உள்ள கே.என்.நேருவின் இல்லத்திற்கு வந்த போது கே. என்.நேரு லால்குடியில் இருந்ததால், அதிகாரிகள் அவர் வரும் வரை காத்திருந்து, பின்னர் சோதனையைத் தொடங்கினர். இந்த சோதனை தொடர்பான தகவல் பரவியதும், திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கே. என்.நேருவின் இல்லத்தின் முன்பாக குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் தொடர்பான இடங்களில் ஏற்கனவே வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து, தற்போது ஊழல் தடுப்புக் கண்காணிபபு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையம் இந்த சோதனையை மேற்கொண்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் நடக்கும் இந்த சோதனை, ஊழலுக்கு உரியது தமிழக அரசியலில் பேசும் நிலை ஏற்படுத்தியுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை போன்ற முக்கிய துறையில் 2,538 பேரின் பணியமர்த்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் மிகவும் தீவிரமானது. இது பொதுப்பணித் தேர்வுகளை புறக்கணித்து, அரசியல் செல்வாக்கின் பேரில் பணி நியமனம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. DVAC-யின் இந்த சோதனை, அந்த முறைகேடுகளின் உண்மைத் தன்மையை வெளிக்கொணரும். அரசியல் கட்சி நிதி வசூல் என்ற பெயரில் நிறுவனங்களை மிரட்டி பணம் வாங்கியதாக எழுந்துள்ள புகார், அரசியல் கட்சிகளின் நிதி திரட்டும் முறைகள் குறித்த கேள்வியை எழுப்புகிறது. இது சட்டவிரோத பணப்பரிமாற்றமாக இருந்தால், அது மிகக் கடுமையான PMLA சட்டப்படி குற்றமாகும்.  கே.என்.நேரு, தற்போது எதிர்க்கட்சி துணைத் தலைவராக உள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அவர் மீதான இந்த சோதனை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஆளுங்கட்சியின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. நேருவின் இல்லத்தின் முன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். இது, கட்சி தலைவர்கள் மீதான அவர்களின் ஆதரவையும், அதே நேரத்தில் சட்டத்தின் மீதான அவர்களின் பார்வையையும் காட்டுகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர வேண்டும். இந்த சோதனை, கடந்த கால ஊழல் புகார்கள் மீது தற்போதைய அரசு எவ்வளவு தீவிரமாக செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது. இதன் மூலம், எதிர்காலத்தில் இதே போன்ற முறைகேடுகள் நிகழாமல் தடுக்கப்படும். ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் 

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை ஆய்வு செய்து, மேலதிக விசாரணையை தொடர்வார்கள். தேவைப்பட்டால், கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்தால், குற்றப்பிரிவுகள் சேர்க்கப்படலாம் அல்லது புதிய நபர்கள் கைது செய்யப்படலாம். இந்த விசாரணை

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடு, அலுவலகத்திலும் சோதனை நடைபெற்ற நிலையில்  DVAC தனது அதிகாரப்பூர்வ செய்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது 

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற பல்வேறு டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

DVAC தலைமையக குற்ற எண் 7/2026-ல், IPC-யின் 120B, 406, 409, 420 ஆகிய பிரிவுகள், BNS, 2023-ன் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் 7, 7A, 8, 9, 12, 13(2) r/w 13(1)(a) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

30 இடங்களில் சோதனை விசாரணையின் ஒரு பகுதியாக, 05.09.2026 அன்று சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் மொத்தம் 30 இடங்களில் DVAC அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகளின்போது, டெண்டர்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான 241 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், முறைகேடுகள் தொடர்பாக மின்னணு ஆதாரங்களும் (Electronic Evidence) கைப்பற்றப்பட்டுள்ளதாக DVAC தெரிவித்துள்ளது.

விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கு தற்போது விசாரணை நிலையில் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள தகவல் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...