1962 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தினம் 2 ஆம் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்தநாள்
அரசியல் கலந்த ஆசிரியர் உயர் பதவிக்கு வந்ததால் இந்த நிலை அதற்கு முன்னும் உண்மையான ஆசிரியர்கள் இருந்தனர், சமூகத்தில் மதிக்கப்பட்டனர் மாணவர்கள் கற்கவும், புதிய கருத்துக்களைப் புரிந்துகொள்ளவும், படிப்பில் உள்ள சவால்களைச் சமாளிக்கவும் உதவுவதால், ஆசிரியர்கள் வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் பாடங்களை விளக்குகிறார்கள், கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள், மேலும் மாணவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவுகிறார்கள். ஒரு பாடம் கடினமாகத் தோன்றும்போது, தொடர்ந்து முயற்சி செய்யுமாறு ஆசிரியர்கள் குழந்தைகளை ஊக்குவிக்கிறார்கள். அவர்களின் வழிகாட்டுதல், மாணவர்கள் கற்றலில் அதிக நம்பிக்கையையும் வசதியையும் பெற உதவும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவுகிறார்கள்: புதிய கருத்துகளைப் புரிந்துகொள்ளுங்கள்
கேள்விகளைக் கேட்டு சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
அவர்களின் தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்துங்கள்
நம்பிக்கையை உருவாக்குங்கள்
நல்ல கற்றல் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்
மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்
அவர்களின் ஆர்வங்களைக் கண்டறியுங்கள்
அவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.
உதாரணமாக நாம் கூறுவது ஆசிரியர் தினம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதையரின் தமிழாசிரியர் உ.வே.சா. தன் குருவான மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தீவிரமாக பக்தி கொண்டு தமிழ் கற்றார். ஆசிரியரின் வரலாற்றை 'ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்' என்ற நூலாகவே எழுதியுள்ளார். நல்ல சிஷ்யன் அமைய குருவும், குரு அமைய சிஷ்யனும், தவம் செய்ய வேண்டும், ஆசிரியர்கள் மாணவர்கள் இருவருமே பரஸ்பரம் மரியாதை பக்தி நெறி இருந்த காலம் அது, சுதந்திர காலம் வரை 100 சதவீதம் இருந்தது அதன் பின் 50 சதவீதம் 1996 வரை இருந்தது இப்போது 30 சதவீதம் உள்ளதே கடினம், கல்வி வியாபாரம் ஆனதால் மதிப்பிழப்பது குரு சிஷ்ய உறவுகள் தானே, ஆசிரியப்பணி அறப்பணி அதற்கு உன்னை அற்பணி இதுவே தற்போது தேசிய நல்லாசிரியர் விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கராஜ் எம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, புளியம்பட்டி,.க்கு தேசிய விருது தவிர, தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில அளவில் 396 ஆசிரியர்களுக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' (மாநில நல்லாசிரியர் விருது) வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
விருது பெற்றவர்களில் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் ஐ.ஈஸ்வரி உள்ளிட்டோர் உண்டு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 171 ஆசிரியர்களும், தொடக்கப்பள்ளிகளில் இருந்து 171 ஆசிரியர்களும், தனியார் மற்றும் பிற சிறப்புப் பள்ளிகளில் இருந்து 54 ஆசிரியர்களும் அடங்குவர். 2026ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது 396 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள்
மொத்தம் 396 ஆசிரியர்கள்.இடம்: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம்.தலைமை: பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்: 171 பேர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்: 171 பேர்தனியார் பள்ளி ஆசிரியர்கள்: 38 பேர் ஆங்கிலேய-இந்திய (Anglo-Indian) பள்ளிகள்: 2 பேர் சமூகப் பாதுகாப்புத்துறை பள்ளிகள்: 2 பேர் அடங்கும். ஆகவே ஆசிரியராக இருப்பது ஒரு வரம், அதில் வாழ்வது பெரும் தவம்! மாணவர்கள் எதிர்காலத்தை ஒளிரச் செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள்






கருத்துகள்