”பேசிப் பழகிய பொய்.. வாங்கிப் பழகிய கை.. போட்டுப் பழகிய பை.. இது தான் திமுக”... கவியரசர் கண்ணதாசனின் வரியை சுட்டிக்காட்டி தி.மு.க.வை சட்டமன்றப் பேரவையில் வெளுத்து வாங்கிய முதல்வர் சி. ஜோசப் விஜய்
தான் பேசிய ஒருமணிநரம் அதாவது 60 நிமிடங்களில் 60 வருஷ கட்சி திமுகவின் லஞ்சம் லாவண்யம் ஊழல் முறைகேடு மற்றும் திருட்டுத் தனங்களை கண்கள் சிவக்க கோபத்துடன், ஆக்ரோஷமாகவே பட்டியலிட்ட முதல்வர் சர்க்காரியா கமிஷன் ஊழல் முதல் ஆம்ஸ்டராங்க் படுகொலை வழக்கு வரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று 7 செப்டம்பர் 2026ஆம் தேதி காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கியுள்ளார். சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு புகார்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் முதலமைச்சரின் இந்த உரை சிறப்பாகவே அமைந்திருந்தது. அதில் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றதில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்.உதயநிதி, முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர்.
3 நாட்கள் அரசு விடுமுறைக்குப் பிறகு இன்று கூடிய சட்டமன்றக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கேள்விகளுக்கும் முதல்வர் விஜய் ஆவேசமாகவும் நேரடியாகவும் தனது பதிலுரையை வழங்கினார். திமுகவினரைப் பார்த்து அவர் காரசாரமாகப் பேசிய தருணங்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன, சமூக ஊடகங்களில் வைரலாகும் பேச்சு இந்த பதிலுரையின் போது முதல்வர் அவையில் தனது தரப்பு நியாயங்களையும் அரசின் செயல்பாடுகளையும் மிகத் தீவிரமாக முன்வைத்தார். முன்னாள் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் தலைவர்களை நோக்கி முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆவேசமான மற்றும் நேரடியான அரசியல் தாக்குதல்களைத் தொடுத்தார். 1970-களின் சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் ஏரி திட்ட 'ஊழல்' மற்றும் திமுகவினரின் ஊழல் நிதி வசூல் விவகாரங்களைக் குறிப்பிட்டு திமுகவை மிகக் கடுமையாகச் சாடினார். Dishonest Intention திமுகவின் செயல்பாடுகளை விமர்சித்த விஜய், "அவர்களது சாதனையே இந்த 'நேர்மையற்ற எண்ணம்' தான்" எனக் குறிப்பிட்டுப் பேசினார்.
ஸ். உதயநிதிக்குப் பதில்: பேரவையில் காரசாரமான விவாதங்களின் போது ஸ்.உதயநிதியை நோக்கி, "தினசரி செய்தித்தாள்களைப் படித்திருந்தால் இது உங்களுக்குத் தெரிந்திருக்கும்" என்று முதல்வர் கொடுத்த நக்கல் கலந்த பதிலடி சமூக ஊடகங்களில் வைரலாகிறது. சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக உறுதிமொழி சட்டத்தின் முன் அனைவரும் சமம்: மாநிலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்தார், ஒரு மாநிலத்தின் அமைதியான சூழலில்தான் ஒட்டுமொத்த முன்னேற்றமும் அடங்கியுள்ளது என்பதை வலியுறுத்தினார். மக்களின் வரிப்பணம் மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், தனது நிர்வாகத்தில் எந்தவித ஊழலும் சகித்துக் கொள்ளப்படாது என்றும் உறுதியளித்தார். முதலமைச்சர் தனது தயாரித்து வைக்கப்பட்ட உரையைத் தாண்டி,
திமுகவின் வாரிசு அரசியல் மற்றும் கடந்த கால முறைகேடுகளைப் பட்டியல் போட்டுப் பேசியதால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் ஆத்திரமடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பியதோடு தர்ணாவிலும் ஈடுபட்டனர். ஆனால் தனது கடமையை சரியாக உரையில் நிறைவு செய்தார் முதல்வர்,கடந்த காலத் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் மீதான சர்க்காரியா கமிஷன் விசாரணை அறிக்கையில் கணட விபரம் :-
50 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்க்காரியா கமிஷன் ஊழல் இன்று மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையையும், அதை நேரலையில் பார்த்த மக்களையும் உண்மையில் உலுக்கியது.
கடந்த காலத் திமுக செய்த ஊழல் தொடர்பான சர்க்காரியா கமிஷன்,.
1970களில காலஞ்சென்ற கலைஞர் மு. கருணாநிதியின் திமுக ஆட்சியின் போது ஊழல் முறைகேடுகள் நடந்தன. அதற்கு எதிராக அந்த ஊழலை விசாரிக்குமாறு வேண்டி மத்திய அரசிடம் காலஞ்சென்ற எம்ஜிஆர் 04 நவம்பர் 1972 ஆம் தேதியில் ஒரு மனுக் கொடுத்தார்! அதையொட்டி இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் காலஞ்சென்ற எம். கல்யாணசுந்தரம் 6 -நவம்பர் 1972 ஆம் தேதியில் கொடுத்த மனு மற்றும்
20 -டிசம்பர் -1972 ஆம் தேதியில் கொடுத்த மனுக்கள் பிறகு நாஞ்சில் கி.மனோகரன் வேலூர் ஜி.விஸ்வநாதன் ஆகியோர் 01 -டிசம்பர் - 1975 ஆம் தேதியில் கொடுத்த மனுக்களில் கலைஞர் மு. கருணாநிதி உள்ளிட்ட அவரது அமைச்சரவை அமைச்சர்களான இரா நெடுஞ்செழியன், ப உ.சண்முகம், அன்பில் தர்மலிங்கம் செ.மாதவன், சாதிக்பாட்ஷா, ஓ பி ராமன், சி பா ஆதித்தனார், ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு இந்த மனுக்கள் வழங்கப்பட்டது! இந்த வழக்கை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சர்க்காரியா அவர்கள் தலைமையில் பிரதமர் இந்திரா காந்தி அரசு ஒரு குழு அமைத்து 3 -பிப்ரவரி -1976 ஆம் தேதியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்ப்பட்டதன் அறிக்கை தான் இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது! இதன் மீதான விசாரணை சென்னையிலும் உதகமண்டலத்லிலும் நடைபெற்றது! ஏறத்தாழ 86 நாட்கள் இந்த வழக்கை சர்க்காரியா அவர்கள் தலைமையில் உள்ள கமிஷன் புலன் விசாரணை செய்தார். இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணைகள் செய்து இந்த அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தார்!
அன்றைய இந்த விசாரணையில் மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷன், கோவிந்த சுவாமிநாதன், ஆர் டி பந்த்ரே, டாக்டர் ஒ எஸ் சிட்டேல், எஃப் எஸ் நாரிமன், ஜி.ராமசாமி செல்வம், போன்றோர் குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதிகள் அதாவது எதிராளிகள் சார்பில் ஆஜரானார்கள். மனுதாரர்கள் சார்பாக சென்னை என.சி.ராகவாச்சாரி கே டி பால்பாண்டியன் வி பி ராமன் என் டி.வானமாமலை போன்ற மூத்த வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டிய வாதிகளான மனுதாரர்கள் சார்பில் ஆஜரானார்கள். விசாரணைக் கமிஷன் சார்பில் வழக்கறிஞராக எம் எல் நந்தா ஜி லட்சுமண ரெட்டி போன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். 1976 ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான அன்றைய தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிரான ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருநபர் விசாரணைக் குழு 1971 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை வரலாற்றை உற்று நோக்கினால் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவசரகால நிலை எனும் மிசா காலத்தில் 356 வது பிரிவின் கீழ் திமுக முதல்வர் மு கருணாநிதியின் முதலமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு அமைக்கப்பட்டது. நீதிபதி எஸ். சர்க்காரியா தலைமையிலான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பிற்காலத்தில் (1983 ஆம் ஆண்டு மத்திய-மாநில உறவுகள் ஆணையத்தில் இருந்து வேறுபட்டவர்), குழு பல ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்தது. கமிஷன் அறிக்கை, கலைஞர் மு. கருணாநிதி மற்றும் அவரது அமைச்சரவைச் சகாக்கள் சிலருக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் உத்தியோகப்பூர்வ பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கண்டறிந்தது, இது நம்பகமானதாகக் கருதப்பட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டிய நிலையில், தான் தற்போது தமிழ்நாடு முதல்வர் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் குற்றம் சுமத்தி சட்டமன்றப் பேரவையில் ஆதாரங்களுடன் சிறப்பாகவே பேசினார்.























கருத்துகள்