திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் உள்ளிட்ட 13 பேர் மீது DVAC முறைப்படி வழக்குப்பதிவு செய்துள்ளது.
அமலாக்கத்துறை (ED) வழங்கிய டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தத் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.: கே.என்.நேரு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தபோது, நகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் மொத்த ஒப்பந்த மதிப்பில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது
இந்த டெண்டர் முறேகடு மற்றும் கட்சி நிதி என்ற பெயரில் சுமார் ரூபாய் 1,020 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
கே.என்.நேருவின் சகோதரர் இரவிச்சந்திரன் லஞ்சப் பணம் கைமாறுவதைக் கண்காணித்ததாகவும், மற்றொரு சகோதரர் மணிவண்ணன் அந்தப் பணத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை வகித்ததாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு முன்னதாக, திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட மொத்தம் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடிச் சோதனை நடத்தியது.
இந்த நடவடிக்கை முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எனினும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் மற்றும் நிதி ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ஹேம சித்ரா தலைமையில் 20 க்கும் மேற்பட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையினர் 3 கார்களில் வந்த போது கே.என்.நேரு வீட்டிலில்லை. அவரது குடும்பத்தினர் மட்டும் இருந்தனர். லஞ்ச ஒழிப்புத் துறையினர் உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டனர். தகவலறிந்தது திமுக தொண்டர்கள் குவிந்தனர். 7.30 மணி அளவில் கே.என்.நேரு வீட்டுக்கு வந்தார்.
தொடர்ந்து கோஷமிட்டதால் 8.15 மணியளவில் கே. என்.நேரு வீட்டுக்குளிருந்து வெளியே வந்து திமுக தொண்டர்களைப் பார்த்து அமைதிப்படுத்திப் பேசி அலுவலகத்துக்கு செல்லும்படி அறிவுறுத்தி வீட்டுக்குள் சென்றார். பின்னர், காலை 8.40 மணிக்கு திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்தார். அவரை மட்டும் வீட்டுக்குள் அனுமதித்தனர்.
தொடர்ந்து சோதனை நடைபெற்றது. நேற்று பிற்பகல் 3 மணி வரை சோதனை நடந்தது.கோயம்பத்தூர் திருச்சிராப்பள்ளி ரோடு, சிங்காநல்லூர் அருகே உள்ள கே.என்.ரவிச்சந்திரனின் டி.வி.எச் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தினர். பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் குழுக்களாக பிரிந்து இந்த சோதனையை மேற்கொண்டனர். ஈரோடு பெருந்துறை சாலையில் குமலன் குட்டை பகுதியில் பி அண்ட் சி புராஜெக்ட் என்ற கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது.
நேற்று பகல் 11.30 மணிக்கு குமலன் குட்டையில் உள்ள இந்த நிறுவனத்தில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையில் ஆய்வாளர் ரேகா மற்றும் 5க்கும் மேற்பட்ட குழுவினர் டெண்டர் ஆவணங்கள், நிதி பரிவர்த்தனை உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர்களில் ஒருவரான அவிநாசி வேலுமணி என்பவருக்குச் சொந்தமான அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியில் உள்ள வி.ஆர்.வாட்டர் இன்ப்ரா கம்பெனி நிறுவன அலுவலகம் மற்றும் அவிநாசி காமராஜ் நகர் பகுதியில் உள்ள அவரது வீடு ஆகிய இடங்களில் ஒரே சமயத்தில் நேற்று திருப்பூர் சரக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் இரவிச்சந்திரன் தலைமையில் ஆய்வாளர் சசிரேகா உள்ளிட்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 8 மணிக்கு துவங்கிய இந்த சோதனை இரவு 7 மணி வரை நடைபெற்றது. சென்னை, உள்ளிட்ட 30 இடங்களில் பல மணி நேரம் நடைபெற்ற சோதனை இரவு நிறைவடைந்தது. சோதனையில்
கோயம்பத்தூர் ராமநாதபுரம் சிவராம் நகரில் உள்ள ஓய்வு பெற்ற மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் சசிப்பிரியா வீட்டிற்கு சோதனை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர் சென்றனர். அப்போது அவர் வெளிநாட்டில் வசித்து வருவதாக அவரது வீட்டில் வேலை செய்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டை சீல் வைக்கும் நடவடிக்கையை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எடுத்துள்ளனர்.






























கருத்துகள்