தமிழ்நாடு இடைத்தேர்தல் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின்
வேட்பாளர்களைக் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ச. ஜோசப் விஜய் இன்று 10 செப்டம்பர் 2026 அறிவித்துள்ளார். தவெக வேட்பாளர்களாக மதுராந்தகம் (தனி) தொகுதி: கே. மரகதம் குமரவேல் (தவெக துணைப் பொதுச் செயலாளர்) தாராபுரம் (தனி) தொகுதி: பி. சத்தியபாமா (திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளர்) இருவரும்
தவெக தலைமையில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்ற புதிய கூட்டணியில் இடைத்தேர்தலைச் சந்திக்கின்றன. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும்
ஏற்கனவே அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள். பின் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நிலையில், தற்போது அதே தொகுதிகளில் தவெக சார்பில் மீண்டும் களம் கண்டுள்ளனர்.



கருத்துகள்