தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்,சென்னையில் புறப்பட்டு சேலம் காமலாபுரம் விமான நிலையத்தை வந்தடைந்தார்,
விமான நிலையத்திலிருந்து கார் மற்றும் பிரச்சார வேன் மூலமாக மேட்டூர் அணைக்குச் சென்றார். வழிநெடுகிலும் பொதுமக்களும் விவசாயிகளும் திரண்டு வந்து அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேட்டூர் அணை திறப்புபாசனத்திற்கு நீர்: டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசனத் தேவைகளுக்காகக் காவிரி நீரை அணையிலிருந்து திறந்து வைத்தார். அணையில் தேங்கிய காவிரி ஆற்று நீரை மனமுருகி வேண்டி, மலர் தூவி தண்ணீரைத் திறந்து வைத்தார். காவிரி டெல்டா பாசனத்திற்காக சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையை செப்டம்பர் 1, 2026 இன்று காலை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மேட்டூர் அணைக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வமான வருகை இதுவாகும். அணையின் நீர்மட்டம் 88 அடியைத் தாண்டியதைத் தொடர்ந்து, சேலம், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களின் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேச்சேரி மற்றும் மேட்டூர் பகுதிகளில் திறந்த வாகனத்தில் வந்த முதல்வருக்கு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை திரும்பும் வழியில், மேட்டூர் அருகேயுள்ள சின்னக்காவூர் கிராமத்தில் ஒரு விவசாயியின் வீட்டில் அங்கிருந்தவர்களிடம் வேளாண்மை பணிகள் குறித்து கேட்டறிந்தார். அங்கு தன்னை அழைத்துச் சென்ற ஒரு மூதாட்டிக்கு, தான் அணிந்திருந்த கூலிங் கிளாஸை பரிசாக வழங்கி நெகிழ வைத்தார்.
மேலும் அங்கிருந்த பெண்களுக்கு புடவைகளையும் வழங்கினார். முதலமைச்சரின் வருகையையொட்டி சேலம் சரக டி.ஐ.ஜி மற்றும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மேட்டூர் அணை திறப்பு விழாவிற்குப் பிறகு, சேலத்தில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் முதல்வர் அங்கிருந்த மூதாட்டிக்கு தான் அணிந்திருந்த ரூபாய் 60,000 மதிப்புள்ள
விலை உயர்ந்த குளிர் கண்ணாடியைப் பரிசாக வழங்கினார். (சமூக ஊடகங்களில் இதன் மதிப்பு ரூபாய் 1 லட்சம் முதல் ரூபாய் 1.50 லட்சம் வரை என்றும் வதந்திகள் பரவின). ஆனால், அரசியல் ரசனை மக்களின் ஆதரவை முன்பு முதல்வர் எம் ஜி ஆர் பார்முலாவைத் தான் தற்போது முதல்வர் சி. ஜோசப் விஜய் பின்பற்றி வருகிறார் "ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடிமாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி .".அதை அந்த மூதாட்டி வைத்து என்ன பலன் தெரியவில்லை ."150 நாள்கள் தண்ணீர் திறக்க வேண்டும்.
15000 ஆயிரம் கன அடி விடவேண்டும். கால்வாய்கள் தூர் வாரப்படவில்லையாம். மின் விசை இயக்கி வேளாண்மை முதலாளிகளின் தேவைகளுக்காகத் திறக்கிறார்கள்.
45 நாள் 3000 கன அடி பயனற்றது என்கிறார்கள் டெல்டா விவசாயிகள். வருகை காரணமாக பலத்த காவல்துறை பாதுகாப்பு மற்றும் இரும்பு வேலி தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


























கருத்துகள்