முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலையை சந்திக்கும் தளபதி தவெகவின் அரசியல் எழுட்சி நடவடிக்கை

தலையை சந்திக்கும் தளபதி தவெகவின் அரசியல் எழுட்சி நடவடிக்கை  

தவெக தலைவர் முதல்வர் சி. ஜோசப் விஜய் - அஜித்குமார் சந்திப்பு மற்றும் திமுகவின் அரசியல் முரண்பாடுகள்,

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்பத்தில் நிற்கிறது.      தனி விமானம் அல்லாமல் பயணிகள் விமானத்திலேயே இலண்டன் சென்ற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் 

இதற்காக நேற்று இரவு 10 மணியளவில் சென்னையிலிருந்து புறப்படும் எமிரேட்ஸ் (EK 547) பயணிகள் விமானத்தில் முதலமைச்சர் செல்ல உள்ளார். இந்த விமானம் மூலம் துபாய் சென்றடையும் முதலமைச்சர், அங்கிருந்து லண்டன் செல்லும் அதிநவீன ‘டபுள் டக்கர்’ முதல் வகுப்பு விமானத்தில் தனது பயணத்தைத் தொடர்கிறார்.அதேவேளையில், முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான முன்-தயாரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக பிற அரசு உயர் அதிகாரிகள் ஏற்கனவே லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வரின் இந்த அரசுமுறை லண்டன் பயணத்தின் மூலம், தமிழ் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் தொழிற்துறை வளர்ச்சியும் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு தோராயமாக சுமார் ஒரு கோடி வரை செலவு ஆகும் என தலைமைச்செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பிரிட்டன் பயணத்தை முன்னிட்டு, நயதந்திர கடவுச் சிட்டை (டிப்ளமேடிக் பாஸ்போா்ட்) பெற சென்னை அண்ணா சாலையில் உள்ள வட்டார கடவுச் சீட்டை அலுவலகத்துக்கு முதல்வா் ச.ஜோசப் விஜய் வந்து பெற்று 


தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்ள முதல்வா் விஜய் செப்டம்பர் .10-ஆம் தேதி பிரிட்டன் சென்றார்   அதே வேளையில், நடிகர் அஜித் குமார் லண்டன் அருகே உள்ள சில்வர்ஸ்டோன் சுற்றில் (Silverstone Circuit) செப்டம்பர் 11-12 தேதிகளில் நடைபெறும் மிச்செலின் லெ மான்ஸ் கோப்பை (Michelin Le Mans Cup) கார் பந்தயத்தில் பங்கேற்கிறார். விஜய் துபாய் வழியாக இங்கிலாந்து செல்வதாலும், தமிழ்நாட்டில் 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி' அமைக்கப்படும் என்ற முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் அண்மைய அறிவிப்பை அஜித்குமார் பாராட்டியிருந்ததாலும், இவர்கள் இருவரும் துபாயிலோ அல்லது லண்டனிலோ நேரில் சந்திக்கக்கூடும் என்ற தகவல்  பரவுகிறது தமிழ்நாடு முதல்வருக்கு  நடிகராக இருந்த காலத்தில் 90 கிட்ஸ் பேச்சு வழக்கில் 'தளபதி' விஜய், லண்டன் செல்லும் வழியில் துபாயில் நடிகர் 'தலை' அஜித்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வரவு, அரை நூற்றாண்டு கால திராவிடக் கட்சிகள் நடத்திய அரசியல் கட்டமைப்பிற்கு ஒரு புதிய சவாலை உறுவாக்கியுள்ளது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவர் முதல்வர் சி. ஜோசப் விஜய் முன்வைக்கும் அரசியல் விமர்சனங்கள், முன்பு ஆண்ட ஆளுங்கட்சியான திமுகவை தற்காப்பு அரசியல் எனும் Defensive Politics நிலைக்கு தள்ளியுள்ளன. திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் தனது மிசா கால அனுபவங்கள் குறித்து வெளியிட்டுள்ள உருக்கமான காணொளியும், ஆதாரம் இல்லாத சமாளிப்பு நடவடிக்கை தான், அதற்குப் போட்டியாக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் லண்டன் பயணம் குறித்த விவாதங்களும் தமிழ்நாடு அரசியலில் சிலருக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஒரு அரசியல் ஆய்வாளராகப் பார்க்கும்போது, இது வெறும் அதிகாரப் போட்டி மட்டுமல்ல, இது 'அரசியல் அறம்' மற்றும் 'வரலாற்று முரண்நகை' எனும் Political Irony குறித்த விவாதமாகவும் உருவெடுத்துள்ளது.


தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய்  முதல்வர் தனது லண்டன் பயணத்திற்கு முன்பாக துபாயில் தங்கி, அங்கு தங்கியிருக்கும் நடிகர் அஜித்குமாரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

 சினிமாவில் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்கள் இணையதளங்களில் ஒருவருக்கொருவர் கடுமையான மோதல்களில் ஈடுபடுவது அப்போதய காலப் பொழுதுபோக்கு வழக்கம். கலை ஆர்வம் ஆனால், நிஜ வாழ்க்கையில் இவர்களிடையே ஆழமான நட்பு நீடிக்கிறது. அஜித்குமார் இல்லத்தில் நடந்த நல்ல மற்றும் துக்க நிகழ்வில் விஜய் நேரில் பங்கேற்று தனது தோழமையை உறுதிப்படுத்தியதை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் சினிமாவின் 2k கிட்ஸ் காலம் முதல் இரு பெரும் துருவங்கள் சந்திப்பது, திரையுலக ஆதரவைத் திரட்டும் ஒரு நுட்பமான நகர்வாகவே பார்க்கப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழலில், திமுக மற்றும் தவெக தொண்டர்களுக்கு இடையே நிலவும் மோதல் நிலையை, நடிகர்களாக இருந்த விஜய்-அஜித் ரசிகர்களின் மோதலோடு ஒப்பிட முடிகிறது. அது விளையாட்டு இது விபரீதம்,இத்தகைய சூழலில், இந்தச் சந்திப்பு தமிழ்நாடு அரசியலில் புதிய துருவச் சேர்க்கைகளை உருவாக்கக்கூடும்.

விஜய்யின் அரசியல் எழுச்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் தனது மிசா கால சிறை அனுபவங்களை ஒரு Sympathy அரசியலாக முன்வைத்துள்ளார். தனது தாடை எலும்புகள் நொருக்கப்பட்டதாகவும், சக நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு தன் மீது பாய்ந்து அடியைத் தாங்கித் தன்னைக் காப்பாற்றியதாகவும் அவர் கண்ணீருடன் விவரித்துள்ளார். ஆனால் அது பொது வெளியில் எடுபடவில்லை,

சிட்டிபாபுவின் தியாகத்தை மேடைகளில் முழங்கும் திமுக தலைமை, அவரது குடும்பத்திற்கு இதுவரை ஒரு எம்.எல்.ஏ, எம்.பி அல்லது ஒரு வாரியத் தலைவர்  பதவியைக் கூட வழங்கியதில்லை. தியாகத்தைப் பேசி வாக்குச் சேகரிக்கும் திமுக, இவரைக் காப்பாற்ற முன்றதாகக் கூறும் அந்தத் தியாகியின் குடும்பத்தைத் 'தெருவில் விட்டுள்ளது' என்பதே நிதர்சனம். வீரசாவர்க்கர் போன்ற வரலாற்றுப் போராளிகளை மிகக் கேவலமாக விமர்சிக்கும் திமுகவினர், இன்று தங்கள் தலைவர் வாங்கிய அடியைப் பற்றிப் பேசும்போது மட்டும் 'நாகரிக அரசியல்' பற்றிப் பேசுவது ஒரு வரலாற்று முரண்நகையாகும்.

திமுக இன்று 'அரசியல் நாகரிகம்' பற்றிப் பேசினாலும், கடந்த காலங்களில் அக்கட்சித் தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் மாற்றுத் தலைவர்கள் மீது வீசிய சொற்கள் ஆபாசமானவை மற்றும் வன்மமானவை.

காலஞ்சென்ற தலைவர் திமுக வைத்த விமர்சனம் எம்ஜிஆர் சுடப்பட்ட பிறகு அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தியது.

காமராஜர் ரஷ்யா சென்றபோது, "வழக்கமாக ரஷ்யாவிற்கு எருமைத் தோல் அனுப்புவோம், இப்போது நிஜ எருமையையே அனுப்புகிறோம்" என விமர்சித்தது.

ஜெயலலிதா தனிப்பட்ட வாழ்வு குறித்த ஆபாச விமர்சனங்கள் மற்றும் சட்டமன்றத்தில் 1989 நிகழ்வு மற்றும் கருணாநிதியின் மேடைப் பேச்சுக்களில் பயன்படுத்தப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள்.

ராமமூர்த்தி மற்றும் முசிரி புத்தன் மாற்றுத்திறனாளி தலைவர்களை ஓட்டப்பந்தயத்திற்கு அழைத்து, அவர்களை எள்ளி நகையாடியது. கம்யூனிஸ்ட் மற்றும் அதிமுக தலைவர்களின் உடல் ஊனத்தை 'தீப்பொறி' ஆறுமுகம் போன்ற பேச்சாளர்கள் வழியாகக் கேலி செய்தது.

அரசியலில் 'கர்மா' என்பது ஒரு சுழற்சி என்பதை இன்றைய நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

1996 காலகட்டத்தில் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை நடந்தபோது, கலைஞர் மு.கருணாநிதி பொதுமேடைகளில் கேலி செய்தார்.

இன்று அதே கர்மாவின் விளைவாக, அமலாக்கத்துறை சோதனைகளின் போது மு. க.ஸ்டாலினின் பேரன் உள்ளிட்ட குடும்பத்தினர் சுமார் 3 மணி நேரம் கழிவறையிலேயே அமர்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன அரசியலுக்குக் காலம் வழங்கிய பதிலடி இது.

முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து 'அறிவாலய திமுகவினர்' மற்றும் அவர்கள் ஆதரவு செய்தியாளர் சில நபர்கள் வழியாகப் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட வாய்ப்புள்ளது:

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது ஊழல் பணத்தை லண்டனில் முதலீடு செய்யச் செல்கிறார் என்றோ அவதூறுகளைக் கிளப்பத் தயாராக உள்ளனர்.

முதல்வர் சி. ஜோசப் விஜய் மீது வதந்திகளைப் பரப்புபவர்கள், திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் முதல்வராக இருந்த மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களால் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து ஏன் இன்னும் 'வெள்ளை அறிக்கை' வெளியிடவில்லை?

முதல்வர் சி ஜோசப் விஜய் லண்டனில் இருந்து திரும்பிய பிறகு, தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள் மாற்றப்படலாம் Portfolio changes. சில அமைச்சர்களின் பதவிகளும் பறிக்கப்படலாம்.

 "சிங்கம் திரைப்பட பாணியில்" லண்டனில் இருந்து முதல்வர் திரும்பியதும், திமுகவிற்குள் நிலவும் அதிருப்திகளும் முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் அடுத்தக்கட்ட நகர்வுகளும் இணைந்து தமிழ்நாடு அரசியலில் பல "பட்டாசுகளை" வெடிக்கச் செய்யும்.

தமிழ்நாடு அரசியலில் உணர்ச்சிவசப்படுவதையும், உருக்கமான காணொளிகளையும் தாண்டி மக்கள் கடந்த கால ஊழல் மற்றும் பொய் மாயை உண்மைகளை உற்று நோக்கத் தொடங்கிவிட்டனர். ஒரு தலைவரின் தியாகத்தைப் பேசும்போதே, அந்தத் தியாகியின் குடும்பத்தைப் புறக்கணிப்பதும், மாற்றுத் தலைவர்களின் ஊனத்தைக் கேலி செய்த வரலாற்றை மறைப்பதும் நீண்ட காலத்திற்குப் பயன் தராது. முதல்வர் சி ஜோசப் விஜயின் மற்றும்  திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் இடையிலான இந்த நேரடி மோதல், வரும் காலங்களில் தமிழ்நாடு அரசியலில்  அதிமுக எதிர் திமுக ன்பது இறி தவெக எதிர் திமுக னும் ஒரு மிகப்பெரிய 'அரசியல் அறுவடையை' நோக்கிச் செல்லும் என்பது மட்டுமே உறுதியாகிறது,அரசு சார்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில்:- தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள், வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ன் வாயிலாக ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் 8,491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்துள்ளதுடன், அவற்றின்மூலம் சுமார் 5,690 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது, முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.

15.07.2026 அன்று நடைமுறைக்கு வந்த இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA), இந்த முன்னெடுப்புகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. CETA ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே, சென்னையிலிருந்து ஏற்றுமதிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் வாயிலாக, இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்திய முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது.

பல்வேறு உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தமிழ்நாடு வலுவான தொழில்துறைத் திறன்களைக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இத்துறைகளில் பல்வேறு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. குறிப்பாக, ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், வாகன உதிரிபாகங்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகள், பிரிட்டன் சந்தையில் அதிகரித்துவரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பான நிலையில் உள்ளன. மேலும், கூட்டு நிறுவன பங்குதாரர்களைப் பெறுவதற்கும், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் பொறியியல், நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளையும், உலகளாவிய திறன் மையங்களையும் (GCCs) நிறுவி செயல்பட்டு வருகின்றன. இத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும், மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தற்போது மேற்கொள்ளும் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதன்மூலம் தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.

மேலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த ஒரு 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' (Motor Sports City) மாநிலத்தில் அமைக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். இதன் ஒருபகுதியாக, புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்'-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வதுடன், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு, விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவைகளில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான குழு 10.9.2026 ல் சென்னையிலிருந்து புறப்பட்டு, 17.9.2026 அன்று சென்னை திரும்பும். இக்குழுவில் மாண்புமிகு பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) உறுப்பினர் செயலர் திரு. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் (Guidance) மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. மற்றும் அரசு அலுவலர்கள் இடம்பெறுகின்றனர். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...