இத்தாலியை சென்றடைந்தது இந்தியக் கடற்படைக் கப்பல் சுதர்ஷினி
இந்திய கடற்படையின் தொன்மையை பறைசாற்றும் லோக்கயான் பாய்மர கப்பல் பயணம்
இந்தியக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி, 'லோக்காயன் 2026' கடல் பயணத்தின் ஒரு பகுதியாக, 2026 செப்டம்பர் 9 அன்று இத்தாலியின் லிவோர்னோ துறைமுகத்திற்கு சென்றடைந்தது. இந்தப் பயணத்தின் போது, இக்கப்பல் 10 நாடுகளைக் கடந்து 17,400 கடல் மைல்களுக்கும் மேல் பயணித்துள்ளது. இது இந்தியாவின் கடல்சார் மரபுகளையும் கடல்கடந்த நட்புறவு உணர்வையும் முன்னெடுத்துச் செல்கிறது.
லிவோர்னோ செல்லும் வழியில், ஐஎன்எஸ் சுதர்ஷினி மத்திய தரைக்கடலில் இத்தாலிய கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐடிஎஸ் பாலினூரோவுடன் இணைந்து ஒரு பயணப் பயிற்சியை நடத்தியது. இந்த கூட்டுப் பயிற்சியில், ஒருங்கிணைந்த பயிற்சிகள் இடம்பெற்றன. இது இரு பாய்மரக் கப்பல்களின் குழுவினருக்கும் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடவும், தொழில்முறை நிபுணத்துவத்தைப் பரிமாறிக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்கியது.
இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தை வெளிப்படுத்துதல், சர்வதேச கடல்சார் கூட்டாண்மையை வலுப்படுத்துதல் மற்றும் மகாசாகர் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு லோக்கயான் பாய்மர கப்பல் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் 13 நாடுகள் வழியாக 10 மாதங்களுக்கு தனது பயணத்தை தொடர உள்ளது.
_20260910172010_4ac2b3.jpeg)
(2)_20260910171953_154840.jpeg)
(2)_20260910171939_57aee9.jpeg)
கருத்துகள்