அமைச்சர் CTR நிர்மல் குமார் குறித்து எம்பி ஆ. ராஜா செய்த அவதூறுக்கு எதிர்ப்பு மற்றும் மிசா குறித்த உணமை கூறும் அறிக்கை நிலையும்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மிசா சட்டத்தின் கீழ் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யபடவில்லை என்பது குறித்து அமைச்சர் CTR நிர்மல்குமார் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, செப்டம்பர் 12-ஆம் தேதி பல்வேறு வருவாய் மாவட்டங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் மாநில அமைச்சர் ம.சுப்பிரமணியன், நாடாளுமன்ற மக்ஙளவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ஆ.ராசா பேசிய கருத்துகள் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் மத்தியில் கடுமையான சர்ச்சையை உறுவாக்கியதுடன், மாற்றுக் கட்சியினர் மற்றும் அவர்கள் தனிப்பட்ட குடும்பத்தினரைத் தரக்குறைவாக சாடியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மற்றும் திமுக நாடாளுமன்ற கட்சித்தலைவர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்டவர்கள் மற்றும் தோழமைக்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்,
அதற்கு ஆ.ராசா சர்ச்சை பேச்சுக்கு விளக்கமளித்து அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான். என் வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” என்று வருத்தத்தை வருத்தமில்லாது தெரிவித்துள்ளார்,
இந்தச் சர்ச்சை தீவிரமடைந்த சூழலில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் எந்தவித கூடுதல் விளக்கமுமின்றி பின்வரும் திருக்குறளைப் பதிவிட்டுள்ளார், ஆக அதுவே கடியாது கடிந்து கூறுவது, இங்கு ஒரு உண்மை அறிவநு அவசியம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசாங்கம் தான் ஷா கமிஷன் அறிக்கை பொதுவெளியில் இருந்தும் சுழற்சியில் இருந்தும் காணாமல் போனதற்கு முதன்மைக் காரணமாகும். பின்னணி மற்றும் முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது, 1975–1977 ஆம் ஆண்டு காலத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையான Emergency சட்டம் அத்துமீறல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை விசாரிக்க, 1977-ஆம் ஆண்டில் அப்போதைய ஆளும் ஜனதா கட்சியின் பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசு நீதிபதி ஜே. சி. ஷா தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் 1978-ஆம் ஆணடில் தனது விரிவான அறிக்கையை மூன்று தொகுதிகளாக அரசிடம் சமர்ப்பித்தது.
ஜனதா கட்சி அரசு பிரதமர் சரண்சிங் தலமையிலான ரசு கவிழ்ந்த பிறகு, 1980-ஆம் ஆணடில் இந்திரா காந்தி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்று ஆட்சிக்கு வந்தவுடன், அவசரநிலை கால அத்துமீறல்களை விவரிக்கும் இந்த ஷா கமிஷன் அறிக்கையின் அனைத்து நகல்களையும் சந்தையிலிருந்தும், அரசு அலுவலகங்கள் மற்றும் நூலகங்களிலிருந்தும் திரும்பப் பெற்று அழிக்குமாறு உத்தரவிட்டார். இதனால் இந்த அறிக்கை இந்தியாவில் பொதுமக்களின் பார்வைக்குக் கிடைக்காமல் முற்றிலும் மறைந்து போனது.
காங்கிரஸ் அரசின் தவறு, இந்தியாவில் அனைத்து நகல்களும் அழிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட நிலையில், ஜனதா கடசியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியன் தனது சொந்த நூலகத்தில் இந்த அறிக்கையின் மூன்று தொகுதிகளையும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார். அவர் 2010 ஆம் ஆண்டில், "Shah Commission Report - Lost and Regained" என்ற புத்தக வடிவில் இந்த அறிக்கையை மீண்டும் பதிப்பித்து வெளியிட்டார். மேலும், இந்த அறிக்கையின் மற்றொரு நகல் ஆஸ்திரேலிய தேசிய நூலகமான National Library of Australiya ல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததும் பின்னர் தெரியவந்தது. தற்போது எளிதாக கிடைக்கும்.















கருத்துகள்