முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சதுர்த்தி நாளில் மதுரை அன்னை ஸ்ரீ மீனாட்சியைக் காணவந்த ஐந்து வயது துர்கா

தமிழ்நாடு அரசு சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து 'துர்கா' என்ற 5 வயது பெண் யானை கொண்டுவரப்பட்டு,


சதுர்த்தி தினமான இன்று காலை கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.  'துர்கா' என்ற 5 வயது (பெண் யானையைக் குறிக்கும்  சொல்.   பிடி, அதவை, வடவை, கரிணி,அத்தினி,) கொண்டுவரப்பட்டு, இன்று காலை கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.  அஸ்ஸாமிலிருந்து தமிழ்நாடு கோவில்களுக்கு 5 வளர்ப்பு யானைகளைக் கொண்டு வருவதற்கான அனுமதியை அஸ்ஸாம் மற்றும் தமிழ்நாடு வனத்துறையினர் வழங்கினர்.



மாநிலங்களுக்கு இடையேயான இந்த யானைகள் இடமாற்றத்திற்குத் தேவையான தடையின்மைச் சான்றிதழ் (NOC) மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அந்த 5 யானைகளான துர்கா  5 வயது பெண் யானை, மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கொண்டு வரப்படுகிறது. மற்றும் ஹிராலால், சிவா, ரூப்சிங், பிஜூலி, இந்த யானைகள் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீ திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் சங்கர மடம், மயிலாடுதுறை ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில் மற்றும் இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் ஆகிய ஆலயங்களுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு.

சுமார் 3,000 கிலோமீட்டர் தூரப் பயணம் செய்த யானைகள் அஸ்ஸாம் மானஸ் தேசிய பூங்காவில் அண்மையில் 'பிரமிலா' மற்றும் 'பூர்ணிமா' ஆகிய இரண்டு மூத்த ரோந்து யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, புதிதாக 5 இளம் பயிற்சி பெற்ற யானைகள் (பீர்சிங், பிஜாய், பாபுல், ராஜா மற்றும் மோனாலிசா) வனத்துறைப் பணியில் இணைக்கப்பட்ட நிகழ்வும் நடந்தது. மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து 'துர்கா' என்ற 5 வயது பெண் யானை இன்று காலை (செப்டம்பர் 14, 2026) பத்திரமாகக் கொண்டு வரப்பட்டு  ஒப்படைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி தினமான இன்று இந்த துர்கா எனும் இளம் யானை கோயிலுக்கு புது வரவாக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது, தமிழ்நாடு அரசு சார்பில் அஸ்ஸாமில் இருந்து மொத்தம் 5 யானைகளில் முதலாவதாக 'துர்கா' மதுரைக்கு வந்து சேர்ந்துள்ளது. மற்ற 4 யானைகளும் திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் மடம், மயிலாடுதுறை ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் இராமேஸ்வரம் ஸ்ரீ  இராமநாதசுவாமி கோயில் ஆகிய இடங்களுக்கு வழங்கப்பட உள்ளன தமிழ்நாடு வனத்துறையின் உரிய அனுமதியைப் (NOC) பெற்றே இந்த யானை கொண்டுவரப்பட்டுள்ளது,  யானையை ஏற்பதற்கு முன்பாக, மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள மண் குளியல், நீர்க் குளியல்  மற்றும் யானை நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடவசதிகள் ஆகியவை குறித்து வனத்துறை அதிகாரிகள் குழு விரிவாக ஆய்வு செய்து உறுதி செய்துள்ளது  ஒரு ஆவயத்தில் யானை வந்து சேர இன்று காலத்தில் 9 கோடி வரை தேவை அப்போது தான் அதற்கு தகுந்த வசதிகள் செய்து தர இயலும், மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில் யானையான பார்வதிக்கு வயதான நிலயில் அண்மைக் காலமாக கண் பாதிப்பு மற்றும் உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த புதிய இளம் பெண் யானை துர்கா கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த திமுக ஆட்சியில் இரண்டு கோவில் யானைகள் கவனக்குறைவு மற்றும் பராமரிப்பு சரியில்லாத நிலையில் காரணமாகவே இறந்து போனது அதனால் அடுத்த தேர்தல் ஆட்சியை இழந்தது ஒரு உண்மை சம்பவம்:

குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதர் கோவில் யானை சுப்புலெட்சுமி. 1971-ல் ஆத்தங்குடியை காடப்ப செட்டியார் எனும் பக்தர் ஒருவர் கோவிலுக்கு தானமாக கொடுத்தது. 53 வயது ஆகி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது.

12 செப்டம்பர் 2024 அன்று நள்ளிரவு, அது தங்கியிருந்த தகரக் கொட்டகையில் மின்கசிவாலோ  அல்ல அங்கிருந்த விளக்காலோ இரவில் பாகன் அருகில் இல்லாமல் கால்கள் கட்டப்பட்டு தப்பிக்க வழியில்லாமல் தீப்பிடித்தது. 30 சதவீதம் தீக்காயத்துடன் துடித்து, 13-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்தது. அந்த சோகம் இன்றும் பக்தர்கள் மனதில் நீங்காத நினைவாக இருக்கிறது. 

சுப்புலெட்சுமியின் நினைவாக ஒரு யானை வேண்டும்! குன்றக்குடி பக்தர்களின் கண்ணீர் கோரிக்கை

தீயில் கருகி இறந்தது வெறும் யானை அல்ல, குன்றக்குடி முருகன் ஆலயத்தில் மக்கள் நேசித்த குழந்தை!

1971 முதல் 2024 வரை, 53 ஆண்டுகள் குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதரின் சன்னதியில் நின்று, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தும்பிக்கையால் ஆசி வழங்கியவள் சுப்புலெட்சுமி.  தீயில் துடித்து இறந்த போது, குன்றக்குடி பகுதியே அழுதது.

அரசுக்கு ஒரு வேண்டுகோள்:

சுப்புலெட்சுமியின் நினைவாக, அரசு ஒரு யானையை வழங்கி, தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்பு விதிகள் 2011-ன் படி, பாதுகாப்பான, விசாலமான, தீப்பாதுகாப்புடன் கூடிய இருப்பிடத்தில் பராமரித்தால் வனத்துறை உதவியால் சிறப்பாக இருக்கும். அது சுப்புலெட்சுமிக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

சுப்புலெட்சுமியின் ஆத்மா சாந்தியடைய, அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது இப்போதைய கோரிக்கை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...