டெண்டர் முறைகேடு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் மீது அறப்போர் இயக்கம் கொடுத்த டெண்டர் முறைகேடு புகாரில் அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது முதற்கட்ட நடவடிக்கை அரசு பணி சம்பந்தப்பட்ட பொது ஊழியர்கள் அனைவரின் மீதும் துறை ரீதியான நடவடிக்கையும், கிரிமினல் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அந்த ஊழல் முறைகேடு செய்ய காரணமான ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாகவை மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டு சதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது அறப்போர் இயக்கம், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்த புதிய தவெக அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது தற்போது அதிர்ச்சியாகும்,
இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் , தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ் , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) யின் இயக்குநருக்கு விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் அனுப்பியது
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டContractors எனும் ஒப்பந்ததாரர்களுக்கு சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூபாய் . 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையரான S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் D. சரத்குமார் ஆகியோர் இந்தப் பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழாவும் நடத்தியுள்ளனர்.
இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை http://tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
அந்த முதல் ஒப்பந்தமானது:- பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026-DMA-691566-2)
இங்கு அசோக ஸ்தூபி (தூண்) அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூபாய் . 27,30,000 மதிப்பிலான டெண்டர் இணையதளமான TN Tenders portal ல் 06 ஆகஸ்ட், 2026 ஆம் தேதி அன்று தான் வெளியிடப்பட்டது, இந்த டெண்டர் திறக்கப்பட வேண்டிய தேதி 24 ஆகஸ்ட் 2026 ஆகும். ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது 29 ஜூலை 2026 ஆம் தேதக அன்றே இப்பணிகள் முடிக்கப்பட்டு அமைச்சர் மற்றும் அலுவலர்களால் திறப்பு விழாவும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் அமைச்சர் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் அதே நாளிலேயே பதிவேற்றப்பட்டுள்ளன.
அடுத்ததாக ஒப்பந்தம் 2 :- சிட்லபாக்கம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026-DMA-691566-1):
தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூபாய். 18,60,000 மதிப்பிலான டெண்டரும் 06 ஆகஸ்ட் 2026 ஆம் தேதி அன்று தான் வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதியும் 24 ஆகஸ்ட் 2026 ஆகும். ஆனால், 10 ஆகஸ்ட், 2026 ஆம் தேதி அன்றே அந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு அது திறக்கப்பட்டுள்ளது இது அலுவலர்களுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத சின்டிகேட் முறைகேடு கூட்டணியை உறுதி செய்கிறது.
இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் (Financial bids) 24 ஆகஸ்ட் 2026 அன்று திறக்கப்பட வேண்டிய நிலையில், இன்று வரை இணையதளத்தில் அவை "To-be -opened" என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெற்றி பெற்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடமிருந்து மறைக்கவே மாநகராட்சி அலுவலர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.
மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69 சதவீதம் ) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை (AOC) அடைந்துள்ளது. இது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையின்றி, முறையான டெண்டர் நடைமுறைகளை திட்டமிட்டு புறக்கணிப்பதைக் காட்டுகிறது.
இது அதிகாரத் துஷ்பிரயோகம், ஊழல் நம்பிக்கைத் துரோகம் மற்றும் டெண்டர் சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றச் செயலாகும். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதில் முதலாவதாக உடனடி பணியிடை நீக்கம் (Suspension): தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மற்றும் அலுவலர்கள் அனைவரும் இரண்டாவதாக . துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்,
மூன்றாவதாக DVAC கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை .
நான்காவதாக பணப்பட்டுவாடா தடை (Stop Bill Payment):செய்து உத்தரவு, ஐந்தாவதாக ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் (Blacklisting):
ஆறாவதாக டெண்டரில் வெளிப்படைத்தன்மையுடன் மறு நடவடிக்கை தேவை என்பதே அதுவாகும், முதல் கட்ட நடவடிக்கை தற்போது மாநகராட்சி ஆணையர் பணி காத்திருப்பில் இனி விசாரணை தீவிமாகும்,








கருத்துகள்