சமீப காலத்தில் மக்களின் கலாச்சார பன்பாடடுக்கு கேடான பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருவாய் ஈட்டும் நடிகர் விஜய் சேதுபதி,
போட்டியாளர்களிடையே பேசும்போது, "நாற்காலி என்பது எல்லார் வீட்டிலேயும் இருக்கும், அது கிடைக்கும் போது அதிகாரம் வரும், அதுதான் போதை" என்றார் அதற்கு முன் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட உணவகம் அல்லது கஃபே (Café) திறப்பு விழாவின் போது விஜய் சேதுபதி, போதைப்பொருள் குற்ற வழக்கு தொடர்புடைய ஜாபர் சாதிக் மற்றும், இயக்குனர் அமீர் மூவரும் ஒன்றாகக் கலந்துகொண்ட பழைய காணொளிக்காட்சி மற்றும் புகைப்படங்கள் தற்போது மீண்டும் இணையத்தில் பகிரப்படுகின்றன.
திரைப்படத் தொடர்பு: இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவான 'இறைவன் மிகப்பெரியன்' திரைப்படத்தை ஜாபர் சாதிக் தயாரித்தார். இந்தத் திரைப்படத்தின் மற்றும் உணவகக் கூட்டாண்மை வணிகத்தின் அடிப்படையில் அமீருக்கும் ஜாபர் சாதிக்குக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் ஜாபர் சாதிக் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானதை அடுத்து, அவருடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்களின் பழைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது விவாதப் பொருளாக்கப்பட்டு வருகின்றன.
விஜய் சேதுபதி - அமீர் இருவரும் தமிழ் சினிமாவின் சமகால பிரபலங்கள் மற்றும் அண்மையில் தேர்தல் சமயத்தில் ஒன்றாக வாக்கு செலுத்த வந்த புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. ஆக அரசியல் களத்தில் உள்ள முரண் விஜய் சேதுபதி கருத்து மூலம் பிரதிபலிப்பு. இந்த நிலையில் அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான இன்பதுரை நடிகர் விஜய் சேதுபதி கருத்துரிமைக்கு நாங்கள் துணை நிற்போம் என்கிறார்,ஐந்தாண்டு ஆட்சியை 100 நாட்கள் நடவடிக்கைகளில் மதிப்பீடு செய்வது சரியா....அதிகபட்சம் எந்த திசையை நோக்கி நகர்கிறார்கள் என்பதனை வேண்டுமானால் கணிக்கலாம்.... மற்றபடி விமர்சிப்பதும் கொண்டாடுவதும் வீண்...நீ நலலவன் என்பதாலேயே உலகம் உன்னை நல்லபடியாக நடத்திட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. எதிரிலிருப்பவன் .மரக்கறி (vegeterian) சாப்பிடுபவன் என்பதால் சிங்கம் அவனை அடித்துப் புசிக்காதிருக்குமா? அரசியல் யாரையும் எப்போதும் எதிராக மாற்றும் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நகர்வை கூர்ந்து கவனித்தால் மைக்ரோ சைஸ் அரசியல் புரியும், இதை மற்றவர்கள் புரிவதற்கு காலம் கடக்க வேண்டும், "மக்க கலங்குதப்பா மடி புடிச்சு இழுக்குதப்பா.. நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்குதப்பா... என்ன பெத்த மகராசா......"
காய்த்த மரம் கல்லடிபடும், பிரபல நபர்கள் கூறிய வார்த்தை சிலரால் சொல்லடி படும் என்பது சமீபத்திய போதை ஒழிப்பு பிரச்சாரம் ஒருபக்கம் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாடடு நபர்களுடன சினிமா வியாபாரம் மறுபக்கம் அரசியல் விமர்சனம், என்பது "படித்தது இராமாயணம் இடித்தது பெருமாள் கோவிலா" கமெண்ட் ஆனால் நோ மூவ்மென்ட்






கருத்துகள்