*ரெங்கநாதன் திருப்பதி: பப்ளிக் ஜஸ்டிஸ் சிறப்பு புலனாய்வுக் குழு*
ஒரு திருமண வீட்டில் நீங்கள் சாப்பிடும் பட்டர் பனீர், ஒரு பெரிய ஹோட்டலில் ஆர்டர் செய்யும் பனீர் பட்டர் மசாலா - அது உண்மையில் பனீரா என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா ? இல்லையே
இதோ அந்த மோசடியின் முழு கதை...
*அத்தியாயம் 1: தயாரிப்பு - தொழிற்சாலையில் நடக்கும் மாயாஜாலம்*
கோவையிலோ, டெல்லியிலோ ஒரு சிறிய தொழிற்சாலை. உள்ளே பால் வாசனையே இல்லை.
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர், அதில் கொஞ்சம் பால் பவுடர், அத்துடன் *30 கிலோ பாமாயில், 20 கிலோ மரவள்ளி ஸ்டார்ச், எமல்சிஃபயர் என்ற ஒட்டும் ரசாயனம்* கொட்டப்படுகிறது. நன்றாக கலக்கி, அச்சில் ஊற்றி, குளிர்சாதன பெட்டியில் வைத்தால்... பார்க்க அசல் பனீர் போலவே வெண்மையாக, பளபளப்பாக ஒரு கட்டி தயார்!
இதன் பெயர் தான் *அனலாக் பனீர்.*
உண்மையான பனீர் தயாரிக்க *1 கிலோவுக்கு 6 லிட்டர் பால், செலவு ரூ.400.* ஆனால் இந்த போலி பனீர் தயாரிக்க செலவு *வெறும் ரூ.120!* விற்பனை விலை ரூ.200. ஒரு கிலோவுக்கு ரூ.200 லாபம், யாருக்கு தான் ஆசை வராது?
*அத்தியாயம் 2: போலி - நம் தட்டுக்கு வரும் வரை*
இந்த போலி பனீர் தான் இன்று தமிழகம் முழுவதும் பல ஹோட்டல்கள், திருமண கேட்டரிங், ஆன்லைன் கடைகளில் *"ஃப்ரெஷ் பனீர்"* என்ற பெயரில் விற்கப்படுகிறது.
நீங்கள் புரதம், கால்சியம் என்று நினைத்து சாப்பிடுகிறீர்கள். ஆனால் உண்மையில் உங்கள் வயிற்றுக்குள் போவது என்ன தெரியுமா?
- *உண்மையான பனீர்:* புரதம் 18%, கால்சியம் அதிகம்.
- *அனலாக் பனீர்:* புரதம் 5% மட்டுமே, கால்சியம் இல்லை. மாறாக *டிரான்ஸ் ஃபேட் நிறைந்த பாமாயில்* இருப்பதால், தொடர்ந்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால், இதய நோய் வரும் அபாயம்.
இது வெறும் பண மோசடி அல்ல சார், *நம் குழந்தைகளின் ஆரோக்கியத்துடன் விளையாடும் மோசடி.*
*அத்தியாயம் 3: அரசு தடை - FSSAI-யின் அதிரடி*
இந்த மோசடியை கண்டுபிடித்த FSSAI, கடந்த வாரம் (22.09.2026) ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரைவு அறிவிப்பை வெளியிட்டது.
*FSSAI சொல்வது என்ன?*
> "பாலில் இருந்து பெறப்படாத பொருட்களால் தயாரிக்கப்படும் எந்த பொருளையும் இனி 'பனீர்' என்று அழைக்கக்கூடாது, விற்கக்கூடாது. நுகர்வோரை ஏமாற்றும் இந்த செயலை தடை செய்கிறோம்."
அதாவது இனி எந்த நிறுவனமும் தன் கவரில் "Veg Paneer, Analog Paneer, Non-Dairy Paneer" என்று எழுத முடியாது. *"Analog Product"* என்று மட்டுமே எழுத வேண்டும். மீறினால் ரூ.5 லட்சம் அபராதம், உரிமம் ரத்து.
இந்த தடை வரைவு மீது 60 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டு, பின்னர் இறுதி சட்டமாகும். *BOX NEWS: போலி பனீருக்கு எமனாக வந்த 'சிங்கம்' துக்காராம் முண்டே!*
*மகாராஷ்டிரா முழுவதும் 1 வருடம் தடை - FSSAI நாடு முழுவதும் தடைக்கு இதுவே முன்மாதிரி!*
மத்திய அரசின் FSSAI தற்போது நாடு முழுவதும் அனலாக் பனீருக்கு தடை முன்மொழிந்துள்ளது என்றால், அதற்கு விதை போட்டவர் *மகாராஷ்டிரா உணவு பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே (IAS)* தான் சார்.
*யார் இந்த துக்காராம் முண்டே?*
நேர்மைக்கு பெயர் போன, எந்த அரசியல் அழுத்தத்திற்கும் அஞ்சாத IAS அதிகாரி. நாக்பூர் மாநகராட்சி ஆணையராக இருந்த போதே ஆக்கிரமிப்புகளை இடித்து பெயர் பெற்றவர்.
*அவர் என்ன செய்தார்?*
- கடந்த *ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை* மகாராஷ்டிரா FDA, *308 பனீர் மாதிரிகளை* ஆய்வு செய்தது.
- அதில் *109 மாதிரிகள் (35.4%) தரமற்றவை* என்றும், 30 மாதிரிகள் மனிதன் சாப்பிட தகுதியற்ற *UNSAFE* என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
- பெரும்பாலான ஹோட்டல்கள், கேட்டரிங் நிறுவனங்கள் பில், மெனுவில் கூட சொல்லாமல் போலி பனீரை விற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து *30-07-2026 அன்று அதிரடி அரசாணை* வெளியிட்டார்.
> "மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் அனலாக் / நான்-டெய்ரி பனீர் தயாரிப்பு, சேமிப்பு, விற்பனை, ஹோட்டல்களில் பயன்படுத்துவது அனைத்தும் 1 வருடத்திற்கு தடை செய்யப்படுகிறது"
*தண்டனை என்ன?*
மீறினால் *6 மாதம் சிறை + ரூ.1 லட்சம் அபராதம்.* போலி பனீர் சாப்பிட்டு யாராவது இறந்தால் *ஆயுள் தண்டனை + ரூ.10 லட்சம் அபராதம்*
மகாராஷ்டிராவை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலமும் தடை விதித்தது. இந்த இரண்டு மாநிலங்களின் நடவடிக்கையை பார்த்து தான் தற்போது மத்திய FSSAI நாடு முழுவதும் தடைக்கு வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
*ஒரு நேர்மையான IAS அதிகாரியின் ஒரு கையெழுத்து, ஒட்டு மொத்த இந்தியாவின் உணவு பாதுகாப்பையே மாற்றியுள்ளது *---
*முடிவுரை: நாம் என்ன செய்ய வேண்டும்?*
மக்கள் , இனி பனீர் வாங்கும் போது பாக்கெட்டின் பின்புறம் பாருங்கள். அதில் *"Contains Vegetable Oil / Palm Oil"* என்று இருந்தால் அது பனீரே அல்ல, அனலாக் பனீர்!
உண்மையான பனீரில் *"Ingredients: Milk, Milk Solids"* என்று மட்டுமே இருக்கும்.
*பால் பனீரை கேட்டு வாங்குவோம், போலி பனீரை புறக்கணிப்போம்!








கருத்துகள்