முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பள்ளிக்கல்வித் துறையில் திமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளுக்கு சோதனையும் வழக்கும்

திமுக அரசின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் சோதனை நடக்கும் போதே மத்தியக் குற்றப் பிரிவுக் காவல்துறை அறிக்கையில்


சொல்லப்படுவது யாதெனில் “தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் (Permanent Recognition), பள்ளி தர உயர்வு (Upgradation), DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக Federation of Associations of Private School In Tamil Nadu- இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையாளரிடம் அளித்த புகாரில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்ததில் தொடர்புடைய P.T.அரசகுமார் என்ற நபரை 27.06.2026 ஆம் தேதியன்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு,


பின் குண்டர் தடுப்புச் சட்டக் காவலில் வைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் விரிவான முறையில் விசாரணை மேற்கொண்டு, இதுவரை, 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு, மாநில பள்ளிக் கல்வித்துறை மற்றும் பல்வேறு அலுவலகங்களைச் சேர்ந்த பல அரசு அலுவலர்களையுமா விசாரணை செய்து, அதன் தொடர்புடைய அரசு அலுவலகம் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை, 177  பணம் லஞ்சம் கொடுத்து பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் தொகை லஞ்சமாக வசூலிக்கப்பட்டு நம்பிக்கை மோசடி செய்ததாக முதற்கட்டமாக தெரியவந்தது.  (ஆக இதில் இருவரும் குற்றவாளிகளே!) மேலும் புகார்கள் தொடர்ந்து பெறப்பட்டு, நிதி மோசடி தொடர்பான விசாரணையின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தொடர்புடைய நபர்களின் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.

இவற்றில் A1 நபர் ஆன பி. பி.டி.அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய 20 வங்கிக் கணக்குகள் மற்றும் A2  நபரான தலைமறைவுக் குற்றம் சட்டப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமாருடன் தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகளில் நிதிப் பரிவர்த்தனைகள் அதன் தொடர்பான சரிபார்ப்பு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களது குடியிருப்புகள், அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அமைந்துள்ள DPI வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, குற்றச்செயலுடன் தொடர்புடைய ஆவணங்கள், தனியார் பள்ளிகள் தொடர்பான பதிவுகள், அரசு அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்ட மனுக்கள் மற்றும் பிரதிநிதித்துவ ஆவணங்கள், நிதி தொடர்பான பதிவுகள், கைபேசிகள், கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் இதர டிஜிட்டல் மற்றும் மின்னணு ஆதாரங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரின் பங்கு, நிதிப் பரிவர்த்தனைகள், ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களுக்கிடையிலான தொடர்புகள் ஆகியவை பெருமாநகர சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவினால் சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வழக்கின் விசாரணையின் தொடர்ச்சியாக, சாட்சிகளின் வாக்கு மூலங்கள், ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் அரசு ஆவணங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியிலுள்ள மொத்தம் 4 இடங்களிலும், இவரது உதவியாளரான வாலாடி கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 2 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது” என விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.. தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்று தருவதாக மோசடி - மத்திய குற்றப்பிரிவு குழுவினர் அதிரடி சோதனை  என்பது 

தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், இதுவரை 3 நபர்கள் கைது செய்யப்பட்டு, மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரால் தமிழ்நாடு முழுவதும் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்க முயன்ற நபரும் லஞ்சம் பெற்ற இடைத்தரகர் மற்றும் வாங்கி அனுமதிக்கு உறுதியளித்த அமைச்சர் என அணைவருமே ஊழல் நபர்கள் தான் எல்லோர் மீதும் நடவடிக்கை பாய்ந்தால் அவர்களுக்கு ஜனநாயகத்தில் மக்களின் மீது பயம் வரும்,

இதுவரை 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக,

தற்போது காவல்துறை தீவிரமாகத் தேடும் A2 முத்துக்குமார், அன்பில் மகேஷி பொய்யாமொழியின் பள்ளித் தோழர். 2011-ஆம் ஆண்டில் தேமுதிக வில் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இவர் விருத்தாசலம் தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். பின் திமுகவில் சேர்ந்து அன்பில் மகேஷு பொய்யாமொழிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். பி.டி அரசகுமார் நடத்தி வந்த சங்கத்தின் பொருளாளராவார் இவரைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸும் வெளியிடட .மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை,  அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் சோதனை நடக்கிறது காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த போது “பி. டி.அரசகுமாரைக் கைது செய்து குண்டாஸ் போட்டதால் ஜெயிலில் இருக்கும் அரசகுமார் ஏகப்பட்ட முறைகேடு விஷயங்களை வாக்குமூலமாகவே பதிவில் கொடுத்திருக்கிறார்.. அதில் தான் தனியார் பள்ளிகளடம்பணத்தை வசூலித்து அதை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனைவியிடம்  கொடுத்துள்ளேன் என அரசகுமார் வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார் எனத் தகவல் ..இந்த வழக்கில் மிகவும் முக்கியமான நபர் முத்துக்குமார்.. இவரைக் கைது செய்ய லுக் அவுட் நோட்டஸ் கொடுத்து மும்பையில் பதுங்கி இருக்கிற உறுதியான தகவல் கிடைத்ததனால முத்துக்குமார் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டுவரப்படுவார்.


முத்துக்குமாருக்கு எதிரான நடவடிக்கை துவங்கியதால் இப்போது அன்பில் மகேஷ்  பொய்யாமொழி வீட்டுக்குள்ளும் சிசிபி- மத்தியக் குற்றப் பிரிவு காவல்துறை சோதனைக்குப் போன  நிலையில் வழக்கில் முத்துக்குமார் தரப்போகும் வாக்குமூலங்கள் மிகவும் அதிர்ச்சியாகவே இருக்கும்” எனக் கூறும் அவர்கள் .அன்பில் மகேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவாருன்னு தகவல் பரவுகிறது,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...