முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சங்கரபதி: முட்காட்டுக்குள் தூங்கிய மூன்று ராஜ்ஜியங்களின் தொட்டில்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி - தேவகோட்டை சாலையில் போகும் போது ஒரு முட்காடு வரும்.


உள்ளே எட்டி பார்த்தால் வேர்கள் பின்னிய ஒரு கோட்டை. 300 வருடமாக அங்கே தூங்கிக் கொண்டிருந்தது. அதன் பெயர் தான் *சங்கரபதிக் கோட்டை*. இந்த ஒரு கோட்டை தான் தமிழகத்தின் மூன்று பெரிய சமஸ்தானங்களின் பிறப்பிடம் என்றால் நம்ப முடிகிறதா?


கதை 1720-ல் தொடங்குகிறது. அப்போது ராமநாதபுரம் சேதுபதி சீமை தான் பெரிய ராஜ்ஜியம். அதன் மன்னர் கிழவன் சேதுபதி என்ற விஜய ரகுநாத சேதுபதிக்கு 46 மனைவிகள். அதில் கடைசி காதல் மனைவி தான் திருக்களம்பூர் *கதலி நாச்சியார்*. கதலிக்கு பிறந்த ஒரே மகள் *அகிலாண்டேஸ்வரி நாச்சியார்*. அகிலாவை கட்டியவர் *மேதகு கௌரி வல்லப சசிவர்ண உடையனத் தேவர்*. சேதுபதியின் ஒரே மகளை கட்டிய மருமகன்.



இங்கே தான் போட்டி வந்தது. கதலி நாச்சியாருக்கு உடன் பிறந்த தம்பி *ரகுநாதன்* இருந்தார். அவர் தனது அக்காள் மகள் அகிலாண்டேஸ்வரியின் வாரிசை தன் வாரிசுக்கு கட்டி கொடுக்க கேட்டார். கிடைக்கவில்லை. கோபமான ரகுநாதன், "அப்படியானால் எனக்கு புதுக்கோட்டையை பிரித்து கொடுங்கள்" என்று அரண்மனையில் சண்டை போட்டார்.


சண்டை பெரிதானதும் கிழவன் சேதுபதி நேராக *தஞ்சாவூர் நாயக்கர் மன்னரிடம்* உதவி கேட்டார். நாயக்கர் மன்னர் தான் நடுவராக வந்து சமரச தீர்ப்பு கொடுத்தார். தீர்ப்பு: "ராமநாதபுரம் ஜமீன் 5 பாகமாகட்டும். 3 பாகம் சேதுபதிக்கு இருக்கட்டும். மீதி 2 பாகத்தில் ஒன்றை ரகுநாதனுக்கு புதுக்கோட்டையாகவும், ஒன்றை மருமகன் சசிவர்ணத் தேவருக்கு சிவகங்கையாகவும் பிரித்து கொடுங்கள்" என்றார். *நாயக்கர் மன்னரின் இந்த உதவியால் தான்* புதுக்கோட்டை, சிவகங்கை என இரண்டு புதிய சமஸ்தானங்கள் பிறந்தன. ரகுநாதன் *புதுக்கோட்டை முதல் அரசர் விஜய ரகுநாத ராயத் தொண்டைமான்* ஆனார். சசிவர்ணத் தேவர் *சிவகங்கை முதல் அரசர்* ஆனார். அன்று பிரிந்த போது சங்கரபதி கோட்டை, திருப்பத்தூர் கோட்டை சிவகங்கை சீமைக்குள் வந்தது. கீழாநிலைக்கோட்டை, திருமயம் கோட்டை புதுக்கோட்டைக்கு சென்றது.





புதிய சிவகங்கை ராஜ்ஜியம் பிறந்ததும் படை வேண்டுமே? ஆங்கிலேயர் ஆர்காட்டு நவாப்புடன் சேர்ந்து வரி கேட்ட நேரம். அதற்காக காட்டுக்குள் ரகசியமாக கோட்டை கட்டினார்கள். 16-ஆம் நூற்றாண்டு அடித்தளம், 1700-களில் செல்லமுத்துத் தேவர் மற்றும் கிழவன் சேதுபதியால் விரிவாக்கம். செவிவழிக் கதைப்படி தொண்டி முஸ்லிம் வணிகர் கொடுத்த 200 அரபு குதிரைகளுக்கு பயிற்சி கொடுக்க மைசூர் ஹைதர் அலி தளபதி திப்பு அனுப்பிய குதிரைப் பயிற்சியாளர் இந்துவான *சங்கரன்* தங்கிய இடம் என்பதால் *சங்கரன் பதி* சங்கரபதி ஆனது. 10,000 சதுர அடியில் கிரேக்க வழி இந்தோ-முகல் கட்டிடக்கலையில் குதிரை, யானை பயிற்சி பள்ளியாக, மன்னர்கள் திட்டம் தீட்டும் ஓய்வு இல்லமாக இருந்தது. பின்னாளில் வேலுநாச்சியார், முடிசூடா மன்னர்கள் மருது பாண்டியர்கள் ஆங்கிலேயரிடம் இருந்து தப்பிக்க இங்கே தான் பதுங்கினர். கோபமான ஆங்கிலேயர் பீரங்கியால் முன் பகுதியை தகர்த்தனர். அருகில் உள்ள முனீஸ்வரர் கோவில் போரில் இறந்த வீரர்களை காவல் தெய்வமாக வணங்கும் வழக்கம் என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் V.ராஜகுரு.








ஊரின் நிர்வாகமும் மாறிக் கொண்டே வந்தது. 1720-ல் மதுரை ஜில்லா, அமராவதி தாலுகா, 1865-ல் இராமநாதபுரம் ஜில்லா, எழுவன்கோட்டை தாலுகா - ராணி காதம நாச்சியார் காலத்தில் குத்தகைதாரர் ஜார்ஜ் பியர், பின்னர் திருப்பத்தூர் தாலுகா, 1985-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகன் மாவட்டம், காரைக்குடி தாலுகா, தற்போது சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா.




300 வருடம் காடு இந்த கோட்டையை மூடி பாதுகாத்ததால் தான் பல்கலைக்கழக ஆய்வுகளில் இதை "மறைந்திருந்த கோட்டை - Hidden Fort" என்கிறார்கள். அழகப்பா பல்கலைக்கழகம் இதை செட்டிநாடு பாரம்பரிய கோட்டை, இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலை என்கிறது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 18-ஆம் நூற்றாண்டு சேதுபதி கால விரிவாக்கம் என்கிறது. "ஆவணம் குறைவு என்பதால் வரலாறு மறைந்தது" என்கிறார் V.ராஜகுரு.

இப்போது மட் புதர்களில் ஆலமர வேர்களால் சிதைந்து கிடந்த கோட்டையை தமிழக அரசு ரூ.9 கோடியில் புதுப்பிக்கிறது. 2001-ஆம் ஆண்டில் அறிவித்த போதிலும் கடந்த ஆட்சியில் காங்கிரஸ் MLA சா.மாங்குடி முயற்சியால் அறிவிப்பு, 2024-ஆம் ஆண்டில் வேலை தொடங்கியது.


சிமெண்ட் இல்லை, கேரளா காசர்கோடு செம்புறாங் கல், தளவாய்புரம் சித்துக் கல், சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி கலவையில் கட்டுகிறார்கள். விரைவில் சுற்றுலா தலமாக திறக்கப் போகிறது.

ஒரு சிறு கிராமத்தின் காட்டுக்குள், நாயக்கர் உதவியால் பிறந்த மூன்று சமஸ்தானங்களின் தொட்டில் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது. விழித்தெழும் நேரம் வந்துவிட்டது!

---

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...