அகிலம் முழுதும் பிரசித்தி பெற்ற மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் அழைப்பிதழ் விநியோகம் தொடங்கி பக்தர்களுக்கான அனுமதி வரை பல்வேறு விவகாரங்களில் பக்தர்கள் ஆன்மீக அன்பர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக கும்பாபிஷேகத்தில் அரசியல் வி.ஐ.பி. கலாச்சாரம் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள், அலைக்கழிக்கப்பட்ட விவகாரம் கடும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. பொதுமக்களை உள்ளே செல்ல முடியாமல் தடுத்ததும், புனித நீருக்கு பதிலாகக் குடிநீரைக் காவலர்கள் மூலம் தெளித்தது பாதைகளை முழுமையாக அடைத்தது, அனுமதிச்சீட்டுகளை கட்சிக்காரர்களுக்கு அதிகமாக வழங்கியது ஆன்மீக அரசியல் கட்சியின் தலைவர்கள் உதாசீனப் படுத்திய நிகழ்வு மற்றும் ஆன்மீக நம்பிக்கை இல்லாத பல நாத்தீகவாதிகளை அனுமதித்தது, கோவி அறங்காவலர்களை புறக்கணித்தது என அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இது குறித்து முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது முகநூல் பதிவில், இந்தக் குளறுபடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழக அரசே முக்கியக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் தனது முகநூல் பதிவில், “இன்றைய முழு கும்பாபிஷேக விழாவும், அறங்காவலர்களின் எந்தவொரு ஆலோசனையையும் கருத்தில் கொள்ளாமல், தற்போதைய தவெக அரசின் அறநிலையத்துறை அதிகாரிகளால் நேரடியாக நடத்தப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளுக்கும் முற்றிலும் முரணாகச் செய்யப்பட்டுள்ளது.மேலும் இன்று நடந்த கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க போதிய அனுமதி மற்றும் வசதிகள் கிடைக்கவில்லை என பக்தர்கள் பலர் வருத்தம் தெரிவிக்கும் பல சமூக ஊடகப் பதிவுகள் இன்று காலை எனக்கு வந்துள்ளன. பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் சில குறைகள் எந்த ஆட்சியிலும் நடந்திருக்கக் கூடியது தான். ஆனால் இன்றைய பிரச்சினைக்கு முக்கியக் காரணம், முந்தைய நிகழ்வுகளில் அனுபவமுள்ள அறங்காவலர்களைத் திட்டமிடலில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைத்ததே ஆகும். இதுபோன்ற நிகழ்வுகளில் முன்அனுபவம் இல்லாத அதிகாரிகளைக் கொண்டு விழாவை நடத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அதனால் இன்று பக்தர்களின் குறைபாடுகளுக்குத் தற்போதைய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
அதேவேளையில், இன்று கும்பாபிஷேகம் நடந்த மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபத்தைச் சீரமைத்தது உட்பட -இந்தத் தனித்துவமான திருப்பணிகளைச் செய்ய கடந்த மூன்று ஆண்டுகளாக எடுக்கப்பட்ட 95 சதவீதத்திற்கும் அதிகமான மாபெரும் முயற்சிகள், 2021 முதல் 2026 வரையிலான முந்தைய ஆட்சிக் காலத்தில்தான் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். அந்தவகையில் கடந்த ஆட்சிக் காலத்தில் 95 சதவீதப் பணிகள் முடிவடைந்திருந்த நிலையில், அனுபவம் மிக்க அறங்காவலர்களைத் திட்டமிடலில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைத்ததே இன்றைய குளறுபடிகளுக்கு முக்கியக் காரணம் என்று பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. பக்தர்களால் கோபுரத்தைக் கூட காண முடியவில்லை என்றால், இது யாருக்கான கும்பாபிஷேக விழா? மக்களுக்கானதா? அல்லது, இந்த அமைச்சரின் உற்றார் உறவினர் மற்றும் சுற்றத்துக்காருக்கானதா? VIP முறை இல்லை என்று சொல்லும் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ② L VIPs மட்டும் வழி உள்ள கும்பாபிஷேக விழாவை என்னவென்று சொல்வார்?எதிர்பார்த்ததை விட குறைந்த அளவில் பக்தர்கள் வந்ததும், மிக அடிப்படையான விஷயங்களைக் கூட செய்து வைக்க இயலாத நிலையில் தான் இந்த அரசு இருக்கிறது என்பதை மக்களே தெரிவித்துவிட்டார்கள்.
இப்படி ஒரு அலங்கோலத்தை அரங்கேற்றிவிட்டு, அதனை சாதனையாக பேசுவதற்கு அமைச்சருக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? நீங்கள் ஆச்சரியக்குறிகளாக இருப்பதற்காக எதற்காக பக்தர்கள் பாதிக்கப்பட வேண்டும்?“மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்” :- அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலையை அமைச்சர்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. அறங்காவலர்களின் உரிமைகளை அமைச்சர்கள் தட்டிப் பறிக்க கூடாது. ஹிந்து அறநிலையத்துறை என்பது கோவில்களின் நிர்வாகம் செயலிழந்தால், அதை சரி செய்ய வேண்டிய கண்காணிப்பு அமைப்பேயன்றி நிர்வாகத்தை தனதாக்கிக் கொள்ளும் உரிமையாளர்கள் அதிகாரம் கிடையாது. என பாஜகவின் மூத்த தலைவர்கள் கூறுகிற நிலை
‘அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு’ என அதன் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார், இந்திய அரசியலமைப்புச் சட்டம் (பிரிவுகள் 25 மற்றும் 26) வழங்கும் மத சுதந்திரத்தின்படி, அரசாங்கம் கோயில்களின் 'மதச்சார்பற்ற' நிர்வாகப் பணிகளை (Secular Administration) மட்டுமே ஒழுங்குபடுத்த முடியும்; ஆன்மீக மற்றும் வழிபாட்டு உரிமைகளில் நேரடியாகத் தலையிட முடியாது.எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறை என்பது ஆலயங்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரு காவலனாக (Trustee மற்றும் Custodian) ஆக இருக்க வேண்டுமே தவிர, அதிலிருந்து அரசு வருமானம் ஈட்ட முற்படக் கூடாது என்ற சட்ட வல்லுநர்களின் கருத்து சட்டப்படியும், நீதிமன்றத் தீர்ப்புகளின்படியும் முற்றிலும் உண்மையானதாகும்.தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத்துறை (HR&CE) சட்டம், 1959 ன் முதன்மையான நோக்கம் கோயில்களைப் பாதுகாப்பதும், அவற்றின் நிர்வாகத்தை முறைப்படுத்துவதும், கோயில் சொத்துக்கள் மற்றும் வருவாயைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும் ஆகும். இது அரசு வருவாய் ஈட்டுவதற்கான ஒரு வழிமுறை அல்ல.இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளின்படி இதன் செயல்பாடுகள்: நிர்வாக முறைப்படுத்தல் மட்டுமே, உரிமை அல்ல, இத்துறை கோயில்களின் அன்றாட நிர்வாகம், கணக்கு வழக்குகளைப் பராமரித்தல் மற்றும் கோயில் நிலங்களைப் பாதுகாக்கும் பணிகளை மட்டுமே செய்கிறது.
கோயிலோ அல்லது அதன் சொத்துக்களோ அரசுக்குச் சொந்தமானவை அல்ல; அவை அந்தந்தக் கோயில் தெய்வங்களுக்கே (Deity) தேவஸ்தானத்திற்குச் சொந்தமானவை. கோயில் வருவாய் கோயிலுக்கே கோயில்கள் மூலம் பெறப்படும் உண்டியல் காணிக்கை, இதர கட்டணங்கள், மற்றும் நில வாடகை ஏலம், குத்தகை போன்ற அனைத்து வருவாய்களும் அந்தந்தக் கோயில்களின் வங்கிக் கணக்குகளிலேயே வைக்கப்படுகின்றன.இந்த நிதி, கோயிலின் தினசரி வழிபாடுகள், திருவிழாக்கள், திருப்பணிகள் (புனரமைத்தல்), மற்றும் ஊழியர்களின் ஊதியத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.ஒரு கோயிலின் உபரி நிதியை, அரசின் பொதுவான திட்டங்களுக்கோ அல்லது வேறு மதப் பணிகளுக்கோ பயன்படுத்தச் சட்டத்தில் இடமில்லை. (இருப்பினும், நிதியற்ற பிற ஏழைகளின் ஹிந்துக் கோயில்களின் திருப்பணிகளுக்குச் சட்ட விதிமுறைகளின்படி உதவ முடியும்).
நிர்வாகக் கட்டணம் (Administrative Fee) கோயில்களை நிர்வகிக்கும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக, கோயிலின் மொத்த வருவாயில் ஒரு குறிப்பிட்ட சிறிய சதவீதம் (சட்டப்படி அதிகபட்சம் 12 சதவீதம் வரை) நிர்வாகக் கட்டணமாகத் துறைக்குச் செலுத்தப்படுகிறது. இது அரசிடமிருந்து தனியாக நிதி பெறாமல், நிர்வாகத்தைச் சுயமாக நடத்த மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில், "அரசு ஒரு தர்மகர்த்தாவைப் போல (Trustee) கோயிலைப் பராமரிக்க வேண்டுமே தவிர, அதன் வருவாயை அரசுப் பணிகளுக்கோ அல்லது மதச்சார்பற்ற காரியங்களுக்கோ பயன்படுத்தக் கூடாது" என்று தெளிவுபடுத்தியுள்ளன.சுருக்கமாகக் கூறின், இந்தச் சட்டம் கோயில்களின் வழிபாட்டு மரபுகளைக் காக்கவும், சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு அரணாகும்.
























கருத்துகள்