தமிழ்நாடு பாஜகவின் மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளரான திவ்யா சேஷாத்ரி (எ) டாக்டர் திவ்யா MP, கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.*"Divya Seshadri"* *"Karuppu Muruganandam"*
முன்னதாக, மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் மீது, திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் திவ்யா சேஷாத்ரி, பாஜக தேசிய மற்றும் மாநில தலைமையிடம் செப்.12 அன்று விரிவான புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக கூறி, கருப்பு முருகானந்தத்தை மாநில பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உடனடியாக நீக்கினார்.
இதனை தொடர்ந்து, கட்சியின் ஒழுங்கு மற்றும் விதிகளின்படி, புகார் அளித்த திவ்யா சேஷாத்ரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் வகித்து வந்த மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருப்பு முருகானந்தம் தரப்பில், இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், AI மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் புனையப்பட்ட புகார் என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பின்குறிப்பு: இவை புகார்தாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகள். காவல்துறை விசாரணை மற்றும் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது.


கருத்துகள்