மூத்த பத்திரிகையாளரும் சிஎன்என்-நியூஸ்18 தொலைக்காட்சியின் உதவி ஆசிரியருமான பாயல் மேத்தா ( வயது 46), மும்பையில் காலமானார்.
மும்பைக்குச் சென்றிருந்த பாயல் மேத்தாவுக்கு, 2026 செப்டம்பர் 19 ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவில் திடீரென உடல்நலக் குறைவு (நெஞ்சுவலியோ அல்லது கடுமையான அசெளகரியமோ) ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும்,
சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 20 இன்று அதிகாலையில் காலமானார், அவர் நாடாளுமன்றச் செய்திகள், மத்திய அரசு மற்றும் பாஜக அரசியல் நகர்வுகளைத் துல்லியமாக சேகரித்து வழங்குவதில் மிகவும் பிரபலமானவர், இவரது திடீர் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல அரசியல் தலைவர்களும், இந்தியப் பத்திரிகையாளர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.




கருத்துகள்