பூலோக வைகுண்டம் எனப் போற்றும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்,
வைணவத் திருத்தலங்களில் தொன்மையானதும், முதன்மையானதும், பழைமையான வரலாற்றைக் கொண்டதாகும்.
அங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் இலக்கியங்களில் "மெய்க்கீர்த்தி" போல ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கத்தின் மூலவரான ஸ்ரீரங்கநாதர், திருப்பாற்கடலில் இருந்து பிரம்மதேவனால் வழிபடப்பட்டு, பின்னர் சூரிய வம்சத்து மன்னர்களான இக்ஷ்வாகு, தசரதன் மற்றும் ஸ்ரீராமபிரானால் வழிபடப்பட்டவர் எனும் ஆன்மீக வரலாறும் உண்டு.
ஸ்ரீராமர் இந்த ரங்க விமானத்தை விபீஷணனுக்குப் பரிசளிக்க, இலங்கை செல்லும் வழியில் காவிரி ஆற்றின் நடுவிலுள்ள தீவுப்பகுதியில் இதை நிறுவினார். காலப்போக்கில் மணலில் புதைந்த இந்த ஆலயத்தை, கிளிச்சோழன் (தர்மவர்ம சோழனின் வம்சாவளி) ஒரு கிளியின் சுலோகத்தைக் கேட்டு கண்டறிந்து மீண்டும் புதுப்பித்ததாகக் வரலாறு கூறுகிறது. ஸ்ரீரங்கம் கோயிலில் 800-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர்கள் , பாண்டியர்கள் , ஹொய்சளர் மற்றும் விஜயநகரப் பேரரசர்களின் வரலாற்றையும், மன்னர்களின் தானதர்மக் கொடைகளையும் மெய்க்கீர்த்திகளாகப் பறைசாற்றுகின்றன. பொது ஆண்டு 907 முதல் 953 வரை முதலாம் பராந்தக சோழன் ஆட்சிக் காலம் முதலே இக்கோயிலுக்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன் மற்றும் குலோத்துங்க சோழன் ஆகியோரின் மெய்க்கீர்த்திகளுடன் கூடிய கல்வெட்டுகள் இக்கோயிலின் திருப்பணிகளைப் பற்றி விளக்குகின்றன.
பாண்டியன் மன்னன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் இக்கோயிலுக்குப் பொன் வேய்ந்து, பல கொடைகளை அளித்து "பொன்வேய்ந்த பெருமாள்" எனப் புகழப்பட்டார், சுமார் 156 ஏக்கர் பரப்பளவில், 7 திருச்சுற்றுப் பிரகாரங்கள் மற்றும் பிரதான கோபுரம் உள்ளிட்ட 21 கோபுரங்களுடன் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஹிந்து வைணவ வழிபாட்டுத் ஸ்தலமாகும். ஆசியாவின் மிக உயரமான கோபுரங்களில் ஒன்றான இராஜகோபுரம் 239.5 அடி உயரம் கொண்டது. பன்னிரு ஆழ்வார்களில் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் இந்த ஸ்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆச்சார்யர் ஸ்ரீ இராமானுஜர் இக்கோயிலின் நிர்வாக முறைகளை முறைப்படுத்தினார். அவரது திருமேனி (உடல்) இன்றும் இக்கோயிலின் வசந்த மண்டபத்தில் பத்மாசனத்தில் பச்சைக் கற்பூரம் மற்றும் குங்குமப்பூ பூசப்பட்டு இயற்கை முறையில் பதப்படுத்தப்பட்டு வழிபாட்டில் உள்ளது"சீராரும் திருவரங்கச் செழுமதில்சூழ் திருமுற்றத்து..."( இதன் பொருள்: செல்வச் செழிப்புமிக்க திருவரங்கத்தின் பெரிய மதில்கள் சூழ்ந்த திருமுற்றத்தில், இறைவனுக்குப் பொன்னாலான கருவறை, விமானம் அமைத்து, துலாபாரம் புக்குத் தன் எடைக்கு நிகரான பொன்னையும் நவமணிகளையும் அள்ளி வழங்கி, "பொன்வேய்ந்த பெருமாள்" என்று உலகறியச் செய்தான். நீலமேக நெடும்பொன் குன்றத்துப்பால்கெழு கதிர்முடி சூடி யதுபோல்ஆயிரங் கிளவித் தணித்தலை நடுவண்பாய்பaccess படுக்கைச் சேயோன் பள்ளி..."எனச் சிலப்பதிகாரம் (காடுகாண் காதை) விளக்கும் பழைமையான கோயில் நகரமாக ஸ்ரீரங்கம் உள்ளது.
திருச்சீராப்பள்ளி எனும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள திம்மராய சமுத்திரம் நாயக்க மன்னர் அளித்த கொடை இனாம் கிராமத்தில் 1821/A1, 1821/A2 மற்றும் 1821/B ஆகிய சர்வே எண்களில் சுமார் 21 ஏக்கர் 6 சென்ட் நிலம் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள திம்மராயசமுத்திரம் வருவாய் கிராமப் பகுதி, பொதுவாகப் பொதுமக்கள் மற்றும் உள்ளூர் வழக்கில் திருவானைக்கோவில் அல்லது திருவானைக்காவல் என அழைக்கப்படுகிறது
திம்மராய சமுத்திரம் கிராமத்தில் 1887 ஆம் ஆண்டு அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் விவரங்களை இந்த நிலம் அரங்கநாத சுவாமி கோயில், நாச்சியார் கோயில், அழகிய சிங்கர் கோயில், குணசீலம் பெருமாள் கோயில் மற்றும் கொடியாலம் கோபாலகிருஷ்ணசுவாமி கோயில் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரம்மோற்சவம், மண்டகப்படி, அர்ச்சனை, உற்சவ ஊர்வலம் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட வைணவ நெறி சார்ந்த அறக்கட்டளைக்கு உட்பட்டவை' ஆகும்.
அறக்கட்டளையின் பெயர் எதுவும் பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை. '28.08.1887 ஆம் தேதி அன்று கொடியாலம் வாசுதேவன் ஐயங்கார் மற்றும் கொடியாலம் சேஷாத்ரி ஐயங்கார் ஆகியோருக்கு இடையே பதிவு செய்யப்பட்ட ஆவணம் மூலம் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாக', சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் மனுதாரர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், பிரச்னைக்குரிய நிலத்தில் மனை விற்பனை துவங்கியபோது அடிப்படை ஆவணங்களை பொது மக்கள் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும்" என்கிறார் ஸ்ரீரங்கம் நகர நலச் சங்கத்தின் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம். வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை தனியார் நில விற்பனை ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் நிலங்களை பிறருக்கு மாற்றுவதையோ, விளம்பரம் செய்வதையோ, முன்பதிவு செய்வதையோ தடுத்து நிறுத்தும் வகையில் தடை உத்தரவை வழங்குமாறு நீதிமன்றத்தை சுப்ரமணியன் தீர்வு கோரியிருந்தார்.
கடந்த வியாழக்கிழமை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மொத்தமாகவோ அல்லது சிறு பகுதி நிலம் தொடர்பாக எந்தப் பதிவையும் சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் மேற்கொள்ளக் கூடாது" என உத்தரவிட்டனர்.
வழக்கில் ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர், ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோயில் இணை ஆணையர் ஆகியோர் விளக்கம் அளிக்குமாறு கூறி நவம்பர் மாதம் 5 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர். இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனர் ஒரு விளக்கம் அளித்துள்ளார் அதில்
"நாங்கள் வாங்கியுள்ள சர்வே எண், கிராமம் ஆகியவற்றுக்கும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அறக்கட்டளையின் நிர்வாகிக்கு சொந்தமான நிலத்தை மட்டுமே வாங்கினோம்" என்கிறார்.
அறக்கட்டளை என்றால் அதை வாங்க மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற அனுமதி தேவை மற்றும் வருமானவரித்துறை சிறப்பு அனுமதியும் தேவை, ஆனால் அது இல்லை
"இது கோயிலுக்காக ஒப்படைக்கப்பட்ட அறக்கட்டளையின் நிலம் என்கின்றனர். 'அதை நிரூபித்தால் பெருமாளுக்கே கொடுத்துவிடுகிறோம்' என அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்" என அவர் பத்திரிகை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனால் இது அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு ஸ்ரீரங்கத்தில் பல நூறு ஏக்கர் நிலங்கள் உள்ளதாகக் கூறும் பாலா ராமஜெயம், "பாகப் பிரிவினையில் திம்மராய சமுத்திரம் என்ற கிராமத்தின் பெயர் இல்லை. நாங்கள் வாங்கியுள்ள சொத்து வீரேஸ்வரம் என்ற கிராமத்தில் உள்ளது" எனக் கூறுகிறார். தொடர்ந்து பேசியவர், "1887 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஆவணத்தில் திம்மராய சமுத்திரம் என வருவாய்த்துறை பதிவு செய்துள்ளது. திம்மராய சமுத்திரம் கிராம சொத்தில் வீரேஸ்வரம் என்பதைக் குறிப்பிட வாய்ப்பில்லை" என்றார்.
"ஆயிரம் கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனைகளை நடத்தி வரும் நாங்கள், நில ஆவணங்களை ஆராயாமல் வாங்கவில்லை" எனக் கூறும் பாலா ராமஜெயம், " சிலர் விளம்பரத்துக்காக நாங்கள் வாங்கிய 16 ஏக்கர் நிலத்தை மட்டும் இலக்காக வைத்துச் செயல்படுகின்றனர்" எனக் கூறுகிறார்.
இதுதொடர்பாக, அறக்கட்டளையின் நிர்வாகிகளிடம் பேசும் நிலையில் இது அறக்கட்டளை ஆலயத்தின் சொத்து என்பதே உண்மை அதேநேரம், கடந்த மே மாதம் 11 ஆம் தேதி ஜி ஸ்கொயரின் ஜென் லே-அவுட்டில் 552 சதுர அடி பரப்பளவு உள்ள மனையை லோகநாதன் என்பவர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக விற்பனைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.
ஆனால், நிலத்தைப் பதிவு செய்வதற்கு ஸ்ரீரங்கம் சார்-பதிவாளர் மறுத்து விட்டார். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜி ஸ்கொயர் நிறுவனர் பாலா ராமஜெயத்திடம் கூறும் போது, "இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது" என்கிறார்.
"லோகநாதன் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் தடை மனு கொடுத்துள்ளனர். இதற்கு எதிராக மாவட்ட பதிவாளரிடம் முறையீடு செய்துள்ளோம். கோயில் நிலம் என்பது தொடர்பாக ஹிந்து சமய அறநிலையத்துறையில் இருந்து ஓராண்டாக எந்தப் பதிலும் வரவில்லை" இதே ஸ்ரீ ரங்கம் நிலைதான் ஹிந்து சமய அறநிலையத்துறை திருப்பராய்துறை பராய்துறைநாதர் ஆலயத்திலும் நடத்திய ஊழல் ஆகும் அதுவும் விரைவில் வெளிச்சத்திற்கு வரும், . வீரேஸ்வரமா அல்லது திம்மராய சமுத்திரமாக மாறிவிட்டதாக சிலர் கூறுகின்றனர். சென்னை தியாகராய நகரை எப்படி நுங்கம்பாக்கமாக மாற்ற முடியும்?" என்கிறார் ரியல் எஸ்ட்டேட் நிறுவனர் அறக்கட்டளை நிலம் தொடர்பான சர்ச்சை குறித்து ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோயிலின் இணை ஆணையர் சிவராம்குமாரிடமும்: 9345235212 மற்றும் ச.சிவக்குமார் கூடுதல் ஆணையர் (கல்வி (ம) தொண்டு நிறுவனங்கள்) இந்து சமய அறநிலையத்துறை 044-28339999 Direct : 044-28334823 கேட்டதற்கு. ஆனால், அவர் ஊழல் குறித்து அவர் பதில் அளிப்பதற்கு மறுத்துவிட்ட நிலை காரணம் அவருக்கு நில ஆவண வரலாறு தெரியும் ஆனால் கூறமாட்டார், காரணம் இந்த நிலம் அறநிலையத்துறை நிர்வாகத்தில் வந்த பினபு வாங்கியதோ அல்லது தானம் வந்ததோ இல்லை, அதற்கு முன் உள்ள நிலை
திருச்சி மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) குமாரைத் 0431-2462501, 94984 52110, 94984 52120, இதழ் சார்பாக தொடர்பு கொண்டது. வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விவரங்களைப் பகிர்ந்தவர், "தற்போதைய நிலையில் இதுகுறித்துப் பேச இயலாது" என்று மட்டும் பதில் அளித்தார். காரணம் பயம் மற்றும் ஊழல் ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோயில் உள்பட 5 கோயில்களின் சமயப் பணிகளுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்து வியாழக்கிழமை செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அறக்கட்டளையின் நிர்வாகிகள், ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு முறைகேடாக நிலத்தை விற்றுவிட்டதாக, வழக்கின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், "அது கோயில் நிலம் அல்ல. வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்" என 'ஜி ஸ்கொயர்' நிறுவனர் பாலா ராமஜெயம் தெரிவிக்கிறார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கு
மனுவில், 'ஸ்ரீரங்கத்தில் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில் தனியார் கட்டுமான நிறுவனம், 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் குடியிருப்புப் பகுதியை உருவாக்கியுள்ளதாகவும் அந்த நிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மனைகளை பகிரங்கமாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வருவதை பக்தர்கள் மூலம் அறிந்தேன்' எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் தான் இடைக்காலத் தடை இறுதி உத்தரவுக்கு முன்னோட்டமாக வந்துள்ளது அதை திரு அரங்கன் சார்பில் வரவேற்போம்
ஹிந்து சமய அறநிலையத் துறை ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: என அமைச்சர் ரமேஷ் தகவல்,
ஹிந்து சமய அறநிலையத் துறையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்..
எல்லா விஷயத்தையும் பேசி பேசி தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. செயலில் காட்டினால் போதும். எங்களுடைய முதல்வர் செயலில் காட்டக்கூடியவர். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த ஆந்திர பெண்ணிடம் ரூபாய் .2,000 லஞ்சம் பெற்றதாக வந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து கோயில்களிலும் ஒரு சிலரால் இதுபோன்று நடக்கிறது. இது தொடர்பாக விசாரணை பெற்று வருகிறது.
செய்தி ஊடகங்களில் பேசுபவர்கள் ஏதாவது பேசுவார்கள். நிச்சயமாக இந்த ஆட்சியை பொறுத்த வரை, எங்கள் தலைவர் முதல்வர் சொன்னது போல நாங்களும் ஊழல் செய்ய மாட்டோம். ஊழல் செய்தவர்களை விட மாட்டோம். தவறு செய்யும் கீழ்மட்ட அதிகாரிகள் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவர் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஹிந்து சமய அறநிலையத் துறையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். கடந்த ஆட்சியில் என்னென்ன கோயில் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன, என்னென்ன தவறுகள் நடந்திருக்கிறது என அனைத்தையும் ஆய்வு செய்து வருகிறோம்.
அதன் அடிப்படையில் யாரெல்லாம் குற்றங்களில் ஈடுபட்டிருகிறார்கள் என கவனித்து வருகிறோம். இந்து சமய அறநிலையத் துறையை பொறுத்த வரை நிச்சயமாக ஊழலை ஒழிப்போம். என்கிறார், நமக்குத் தெரிந்தே கடந்ந காலத்தில் 20 விதமான ஊழல்கள் நடந்துள்ளது அதையும் அமைச்சர் ரமேஷ் சரி செய்வார் ஊழல் வாதிகளிடம் சமரசம் செயய மாட்டார், என நம்புவோம்,.




















கருத்துகள்