பாஜகவின் மாநிலப் பொதுச்செயலாளரும் காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களின் பொறுப்பாளருமான முத்துப்பேட்டை கருப்பு முருகானந்தம் செயல்பட்டு வந்தார்.
சங்கப்பணி, கட்சிப்பணி என நாகபடடினம், திருவாரூர், தஞ்சாவூர் மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை என மணடலத்தின் பாஜகவை நீண்ட காலம் வழிநடத்தும் தலைவராகவே அகமுடையார் தேவர் சமூகத்தின் பாஜக முகமாக விளங்கினார் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் பெண் ஒருவர் 2024-ஆம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாகவும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும், தனது மிரட்டல் விடுவதாகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரி கட்சியின் தேசியத் தலைமையிடம் புகார் அளித்துள்ளார். கட்சியில் ஏற்கனவே இருந்த ஆளுமை நிறைந்த ஒரு தலைவர் கரு. நாகராஜன் சிவகங்கை மாவட்டம் சென்னையில் வசித்தவர் இதே போல ஒரு குற்றச்சாட்டு காரணமாக வெளியறறப்பட்டு, தற்போது வி த லீடர்ஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் ஆகச் செயல்படுகிறார்,
தற்போது அதே சமயம் கருப்பு முருகானந்தம் மீதான புகாரில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை கருப்பு எம் முருகானந்தத்தை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, பா.ஜ.க கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், தேசியப் பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ், மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பிற மூத்த தலைவர்களிடம் அதிகாரப்பூர்வமான புகாரை அளித்ததாக கூறப்படுகிறது. அதன் நகலும் வெளிவந்த நிலையில் இந்நிலையில் கருப்பு முருகானந்தம் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் M.முருகானந்தம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்” என தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாறிய பயணம் அது,
கட்சியின் தேசியத் தலைவர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த புகார் கடிதத்தில், டாக்டர் திவ்யா சேஷாத்ரி தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட பின்னணி குறித்து விரிவாகவே குறிப்பிட்டுள்ளார்:
இவர் ஏற்கனவே கர்நாடக மாநில பாஜகவில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.
இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும் அவர், தனது குடும்பச் சூழல் காரணமாகவும் அரசியல் ரீதியான தொடர்பு காரணமாகவும் கருப்பு முருகானந்தத்தின் மீது தீவிர நம்பிக்கை வைத்திருந்துளதாகவும் திவ்யா சேஷாத்ரியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கருப்பு முருகானந்தம் உறுதி அளித்துள்ளதாகவம் அத்துடன், குழந்தைகள் படிக்கும் பள்ளி ஆவணங்களில் தனது பெயரைப் பாதுகாவலராகப் (Guardian) பதிவு செய்ததுடன், குழந்தைகளையும் தன்னை 'டாடி' என்று அழைக்க வைத்துள்ளார். எனவும், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் அவர் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வாக்குறுதிகளை முழுமையாக நம்பிய திவ்யா சேஷாத்ரி, கர்நாடக மாநிலத்தில் தனக்கு இருந்த மரியாதைக்குரிய கட்சிப் பொறுப்பையும் பெங்களூருவில் இருந்த இல்லத்தையும் விட்டு விலகி, 2024-ஆம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளியில் குடியேறி வசித்து வருவதாகவும் பேசப்படும் நிலையில், பாஜகவின் நல்ல ஆளுமைகளை வெளியேற்ற சிலர் காரணமானால் அது பாஜவுக்கே இழப்பு,
தற்போது பாஜகாவில் உள்ள தேத்தாகுடி ஜீவஜோதி, தூத்துக்குடி சசிக்கலாபுஷ்பா, மதுரை கரகாட்டம் பரமேஸ்வரி ஆகியோரை வைத்து கொள்கை சார்ந்த கட்சி முடிவுகள் சாத்தியமா என்பதே பாஜகவின் நீண்ட கால உண்மைத் தொண்டர்களைச் சிந்திக்க வைத்துள்ளது, கருப்பு முருகானந்தம் தற்போது வேறு அரசியல் நகர்வுக்கு தயாராகவே இந்தப் புகார் மூலம் வெளியேற்றப்பட்டதாவே மக்கள் மத்தியில் பேச்சாகும், அவர் புகார் அளித்த நபரின் மீது உண்மைத்தனமை குறித்து பலமான விசாரணை நடத்த வேணடிய நிலைமை தான் சரியான தீர்வு,















கருத்துகள்