இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெறுவதால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதாயமில்லை என்பதால் முன்கூட்டியே பின்வாங்கல் நடவடிக்கை
இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெறுவதால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதாயமில்லை
என்பதால் முன்கூட்டியே பின்வாங்கல் நடவடிக்கை என்பதே உண்மை இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக தவெகவின் கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுவதில், பங்கேற்க தவெக ஆட்சிக்கு ஆதரவளித்துள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சூழலில் தான், நாளைய தவெக கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார் தவெக கூட்டணிக் கட்சி கூட்டத்திற்கு
நாங்கள் போகப்போவதில்லை என- சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் கூறியுள்ளார், தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பங்கேற்காது என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கருத்து அதே கருத்து பாலகிருஷ்ணன் கூறிய நிலையில் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி விலகல் என்றே கருதலாம் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவைப் பற்றி பேசும் போது திடீரென, “இன்றைக்கு கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநிலச் செயளாளர் சண்முகம், முதல்வரின் பதிவை தவறான பார்வையில் புரிந்து கொண்டுள்ளார். அதற்கு ஒரு விளக்கம் தர வேண்டும்” என்றார்.
சிபிஎம் சண்முகம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், “அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியதுஅதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்” எனக் கூறியிருந்தார். இதனை சுட்டிக்காட்டி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டசபையில் இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் பெ.சண்முகத்தை விமர்சித்தார். அதேபோல "த.வெ.க. கூட்டணி கட்சி கூட்டத்தில் CPI பங்கேற்கவில்லை''..! ஆனால் ஜனநாயக ரீதியாக ஆதரவு தொடரும் - என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரபாண்டியன், ஆக கம்யூனிஸ்ட் கட்சி தவெக இடைத்தேர்தல் வெற்றி தங்களது கட்சிக்கு லாபமாக இருக்காது என கருதியதால் இந்த நிலை நாளை கூட்டம் முடிவில் மற்ற விசிக மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகள் குறித்து நிலை தெரியும்.










கருத்துகள்