மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய நீதிமன்றம், துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட நால்வரும் கூடுதலாகக் கைது
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொலை மரண வழக்கில், சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட மானாமதுரை துணைக் கண்காணிப்பாளர், திருப்புவனம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நால்வரை சிறையில் அடைக்க சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
மடப்புரம் அஜித்குமார் படுகொலை மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய நீதிமன்றம் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 4காவல்துறை அலுவலர்களைச் சிறையிலடைக்க உத்தரவு,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், தமிழ்நாடு காவல்துறையின் அதிகார வரம்புகளைக் கேள்விக்குள்ளாக்கும் சில காவல்துறை பணியாளர்கள் மீதான நீதித்துறையின் நடவடிக்கை தற்போது எட்டியுள்ளது.
ஆரம்பத்தில் ‘தடயங்களை மறைத்தல்’ என்ற சாதாரணப் பிரிவின் கீழ் மூடி மறைக்க முயன்ற இந்த வழக்கினை, மதுரை மாவட்ட நீதிமன்றம் தற்போது ‘கொலை வழக்காக’ மாற்றியுள்ளது. இது லாக்-அப் மரணங்களை வெறும் விபத்தாகவோ அல்லது தற்கொலையாகவோ சித்தரிக்க முயலும் பணி செய்யும் அதிகார வர்க்கத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு கடுமையான எச்சரிக்கையாகவும், நீதித்துறையின் நியாயமான, மற்றும் தீர்க்கமான தலையீடாகவும் அமைந்துள்ளது,.
மதுரை மாவட்ட ஐந்தாவது கூடுதல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி தாமோதரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் செயல்களைக் கூர்மையாகவே ஆய்வு செய்த நீதிபதி, அவர்கள் மீது ஏற்கனவே இருந்த ‘தடயங்களை மறைத்தல்’ என்ற பிரிவை மாற்றி, ‘கொலை வழக்காக’ பதிவு செய்யப் பிறப்பித்த
உத்தரவைத் தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய 4 உயர் அலுவலர்களும் உடனடியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்:
அதில் சண்முகசுந்தரம் -காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (மானாமதுரை சரகம்),
இரமேஷ்குமார் - ஆய்வாளர் (திருப்புவனம் காவல் நிலையம்),
சிவகுமார் - சார்பு ஆய்வாளர்,
இளையராஜா - தலைமைக் காவலர்,
இவர்கள் நால்வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட நீதிமன்றம் ஆணையிட்டது. உயர் பதவியில் உள்ள அலுவலர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவது, தற்போது அத்நி பூத்த நிகழ்வாக அமைந்துள்ள நிலையில் சட்டம் மற்றும் நீதித்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் சிபிஐ விசாரணையின் அடிப்படையில் தற்போது மொத்தம் 10 காவல்துறை அலுவலர்கள் நீதிமன்றக் காவலில் உள்ள நிலை
1 சண்முகசுந்தரம் துணைக் கண்காணிப்பாளர் (மானாமதுரை சரகம்)
2 ரமேஷ்குமார் ஆய்வாளர் (திருப்புவனம்),
3 சிவகுமார் சார்பு ஆய்வாளர்,
4 இளையராஜா தலைமை காவலர்,
5 கண்ணன் தனிப்படை காவலர் ஏற்கனவே கைதானவர்
6 ராஜா தனிப்படைக் காவலர் ஏற்கனவே கைதானவர்
7 ஆனந்த் பிரபு தனிப்படைக் காவலர் ஏற்கனவே கைதானவர்
8 சங்கர் தனிப்படைக் காவலர் ஏற்கனவே கைதானவர்
9 மணிகண்டன் தனிப்படைக் காவலர் ஏற்கனவே கைதானவர்
10 இராமச்சந்திரன் தனிப்படைக் காவலர் ஏற்கனவே கைதானவர்
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் நடந்த நிகழ்வுகள் அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தையும், சிபிஐ- விசாரணையின் தீவிரத்தையும் உணர்த்துகின்றன:
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தனிப்பட்ட ஒரு பெண்ணின் நகை காணாமல் போனதாகக் கூறப்பட்ட விவகாரத்தில், அங்கு காவலாளியாக இருந்த அஜித்குமாரைத் தனிப்படைக் காவலர்கள் விசாரணைக்காக சட்டவிரோதமாக அழைத்துச் சென்று அவர்கள் நடத்திய சித்திரவதையில் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்தச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கண்டனங்களை எழுப்ப வைத்தது. வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க அரசால் உத்தரவிடப்பட்டது. சிபிஐ துணைக் கண்காணிப்பாளர் ரோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணையைத் தொடங்கி
விசாரணையின் முடிவில், சிபிஐ அதிகாரிகள் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். பின்னர் வழக்கு விசாரணை ஐந்தாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு வெறும் ஒரு லாக்-அப் மரணம் மட்டுமல்ல; இது காவல்துறைக்குள் நிலவும் மௌன உடன்படிக்கை எனும் Blue Code of Silence ஐ உடைத்தெறிந்துள்ளது. பொதுவாக, கீழ்நிலைப் பணிக் காவலர்கள் மீது மட்டுமே இதுவரை நடவடிக்கை எடுக்கப்படும் சூழலில், ஒரு துணைக் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது மிகவும் முக்கியமான சட்டம் நீதி முன்னேற்ற முன்னுதாரணமாகும்.
காவல்துறையினர் ஆதாரங்களை மறைக்க முயன்றதை நீதிமன்றம் கண்டித்துள்ள விதம், புலனாய்வு அமைப்புகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதை நன்றாகவே வலியுறுத்துகிறது. ஒரு மரணத்தைத் தடம் தெரியாமல் மறைக்க முயலும் உயர் அலுவலர்களுக்குச் சட்டம் ஒருபோதும் விலக்களிக்காது என்பதை நீதிபதி தாமோதரனின் இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இது காவல்துறை நிர்வாகத்தில் உடனடி மற்றும் ஆழமான நிர்வாகச் சீர்திருத்தங்களின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது இந்த உத்தரவு,
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 10 பேரும் தனித்தனி வாகனங்களில், பலத்த காவலர்கள் பாதுகாப்போடு மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்தச்சம்பவம் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செப்டம்பர் 16-ஆம் தேதி இவர்களது நீதிமன்றக் காவல் முடிவுக்கு வரும் நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நீதித்துறை மற்றும் அரசியல் மற்றும் செய்தித் தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட கொலையான அஜித்குமாரின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்கான முதல் படிக்கல்லாக இந்த ‘கொலை வழக்கு’ மாற்றம் கருதப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்த விவகாரம் காவல்துறை மீதான கடந்த கால ஆட்சி விமர்சனங்களை வலுவாக்கும் என்பதில் எந்த விதமான ஐயமில்லை,












கருத்துகள்