*திருப்பம் 1: SIT-ல் இருந்து துணை ஆணையர் கீதாஞ்சலி விலகல்*
DGP மகேஷ் குமார் அகர்வால் செப் 24 அன்று அமைத்த 4 பெண் IPS கொண்ட SIT-யில் இருந்து *V.V.கீதாஞ்சலி* விலக கடிதம் கொடுத்துள்ளார்.
காரணம்: இவர் ஏற்கனவே CCB-யில் இருந்தபோது அன்றைய கமிஷனர் *A.அருண்* மேற்பார்வையில் இதே வழக்கை விசாரித்தவர். எனவே *Conflict of Interest* தவிர்க்க விலகுவதாக கூறியுள்ளார். தற்போது விடுப்பில் சென்றுள்ளார். இவருக்கு பதிலாக கீழ்ப்பாக்கம் DC கீதா நியமிக்கப்படலாம் எனத் தகவல். *ஏற்கனவே விசாரித்தவர்களே மீண்டும் SIT-ல் இருந்தால் எப்படி நியாயமான விசாரணை நடக்கும்?*
*திருப்பம் 2: CBI கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது*
இதே காரணத்தை சொல்லி CBI விசாரணை கேட்டு பத்திரிகையாளர் வாராகி, வழக்கறிஞர் ராஜசேகரன் உள்ளிட்ட 3 பேர் போட்ட பொதுநல மனு இன்று நீதிபதி *V.லட்சுமிநாராயணன்* முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி 4 கேள்விகள் கேட்டு CBI கோரிக்கையை *இப்போதைக்கு* நிராகரித்துள்ளார்:
1. *SIT இருக்கும்போது CBI எதற்கு?* - 6 நாள் மட்டுமே ஆன SIT-க்கு அவகாசம் கொடுக்க வேண்டும்.
2. *ஆப்பிரிக்காவில் இருந்தா CBI அதிகாரிகள் வருவார்கள்?* - CBI-லும் இருப்பது இதே இந்திய போலீஸ் அதிகாரிகள்தான்.
3. *அரசியல் செய்ய வேண்டாம்* - சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்ட வழக்கு இது.
4. *ஆதாரம் இருந்தால் கொடுங்கள்* - காவல்துறைக்கு பணம் கொடுக்கப்பட்டது என்று நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் நாளை அக்டோபர் 1 மாலை 3 மணிக்குள் SIT தலைவர் தேன்மொழியிடம் நேரடியாக கொடுங்கள்.
*நீதிமன்ற உத்தரவு:* SIT தனது விசாரணை அறிக்கையை *அக்டோபர் 7* அன்று தாக்கல் செய்ய வேண்டும்.
*இதன் பொருள்
நீதிமன்றம் CBI கதவை முற்றிலும் மூடவில்லை. *"SIT என்ன செய்கிறது என்று அக் 7 வரை பார்ப்போம், முன்னேற்றம் இல்லை என்றால் அப்போது CBI பற்றி யோசிக்கலாம்"* என்பதுதான் நிலைப்பாடு. ஆனால் SIT மீது இப்போது *நீதிமன்ற கண்காணிப்பு (Judicial Monitoring)* வந்துவிட்டது, இது மிகப்பெரிய பலம்.
அடுத்த 7 நாட்கள் மிக முக்கியம் சார்.



கருத்துகள்