புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மிராஸ் தன்னாட்சி மறவர் நாட்டு பட்டம் ஏ.எல்.எஸ். பழனியப்பன் அம்பலகாரர் 2026 செப்டம்பர் 7 திங்கட்கிழமை அதிகாலை 5 மணி அளவில் சென்னையில் காவேரி மருத்துவமனையில் காலமானார்.
செப்டம்பர் 8 செவ்வாய்க்கிழமை இன்று மதியம் 2 மணிக்கு மேல், பொன்னமராவதியில் உள்ள பொன்-புதுப்பட்டி மாம்பழத்தான் ஊரணி கரையில் உள்ள அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவர் பொன்னமராவதி பகுதியில் மிராசுதாரராகவும், பாரம்பரியமிக்க பரம்பரை தன்னாட்சி வழி நாட்டு அம்பலகாரராகவும் விளங்கியவர். அன்னாரின் மறைவுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு பொன்னமராவதி நாட்டு மக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்கினர், பாண்டிய மன்னர்களின் காலத்தில், பொன்னன் அமரன் ஆகியோரது காவற்படையின் தளபதியாக விளங்கிய அழகாண்டத் தேவர் இப்பகுதி நாட்டைக் காக்கப் போரிட்டு வீரமரணம் அடைந்தார். இன்றும் அவரது நினைவாக அமரகண்டன் ஊரணியில் படடமரத்தானாக உள்ள ஆலயத்தில் பாரம்பரியத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் வாழும் மறவர்களில் சிலர் தங்களை உப்புக்கோட்டை மறவர் அல்லது உப்புக்கட்டு மறவர் எனும் இவர்களது பூர்வீகம் மற்றும் தொன்மைச் சிறப்புகள் பழங்காலச் சேர, பாண்டிய நாட்டு எல்லைப் போர் வரலாறுகளோடு தொடர்புபடுத்தப்படுகின்றன.பாண்டிய மன்னன் ஜடையவர்ம சுந்தரபாண்டியத் தேவன் கல்வெட்டில்,
“விருதர் மூக்கிழந்து முகம்ழிய மறப் படையுடன் எழுக படை” என குடுமியான் மலைக் கல்வெட்டு கூறுகிறது.
பாண்டிய மன்னன் சீவல்லவ தேவர் விராயச்சிலை கல்வெட்டுகலில் “முன்னள் குல சேகர தேவருக்கு இவ்வூர் மறவர் நம்பியான் ஞாற்றுவ பெரியான் “ என்று க்ல்வெட்டு கூறுகிறது.
இராஜராஜ சோழனின் கல்வெட்டும் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் மயிலாபூரில் உள்ள மறவரை பற்றி கூறுகிறது.
குலோத்துங்கனின் குடுமியான் மலை கல்வெட்டு திருவேங்கை வாசல் சிவன் கோயில் க்ல்வெட்டும் அவ்வூரில் உள்ள மறவரைப் பற்றிக் குறிக்கிறது.
இவ்வாறு பொன்னமராவதியில் உள்ள விராயச்சிலை 1000- வருடங்களுக்கு மேலாக போர்பாசறையாக உள்ளது.
மறவனீஸ்வரம் கண்ட சேர மறவன் பழுவேட்டரயர்
பொது ஆண்டு 881 முதல் 1020 வரை பழுவூரை ஆண்ட மன்னர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்தலாம்.
குமரன் கண்டன், குமரன் மறவன், கண்டன் அமுதன், மறவன் கண்டன், கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன், இதுதான் கல்வெட்டுகளில் இருப்பவை பெரும்பாலும் நிவந்தங்கள் கொடையளித்த செய்தியில் ஒளிந்திருக்கும் செய்திகளை Reading through the lines என்று ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கினால், வரலாறு வெளிப்படும்.
ஒரு மின்விளக்கைக் கொடையளித்துவிட்டு, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை மறைக்குமளவுக்குத் தன் பெயரை எழுதிவைத்து விடும் இக்காலத்து வழக்கத்துடன் கல்வெட்டுகளை ஒப்பிட்டுப் புறந்தள்ளாமல், அவை எப்பேற்பட்ட அட்சய பாத்திரங்கள் என்று உணரத் தலைப்படுவோமே!
கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள் என்ற செய்தி உடையார்குடி அனந்தீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம் தெளிவாகின்றது. இந்த தன்னாட்சி மறவர் நாட்டு வரலாறு. சிறப்பு வாய்ந்த பல நாட்டுத் தலைவர்களைக் கண்டிருந்தாலும் இந்த தலைமுறை கண்ட நாட்டு அம்பலகாரர் ஏ. எல்.எஸ். பழனியப்பனை நினைத்து வழி வழி வரலாறு பேசும், அவரது இழப்பு பொன்னமராவதி நாட்டுக்கு பேரிழப்பு, மக்கள் போராளி ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்,

கருத்துகள்