இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த நபரை செருப்பாலடிக்கப் பாய்ந்து, அவதூறாகப் பேசிய
குற்றச்சாட்டுக்கு உள்ளான அலுவலர் கலைமண்ணன் மண்டபம் முகாமின் சிறப்பு துணை ஆட்சியர பொறுப்பில் இருந்தவர். மண்டபம் முகாமில் வசித்து வரும் ஜெகநாதன் (வயது 53) என்ற இலங்கைத் தமிழர், தனக்கு ஏற்பட்டுள்ள குடலிறக்கம் நோய்க்கான சிகிச்சைப் பெற சென்னை செல்வதற்காக சார் ஆட்சியரிடம் முகாமில் முறைப்படி அனுமதி விடுப்பு கோரியுள்ளார். ஏற்கனவே விண்ணப்பித்திருந்த விடுப்பு குறித்து அவர் மீண்டும் கேட்கச் சென்றபோது, சார் ஆட்சியர் கலைமண்ணன் அவரிடம் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி, தனது காலணியைக் கழற்றி அடிக்க முயன்றுள்ளார். இது வைரால் காணொளியில் "பிச்சுப்புடுவேன் பிச்சு... செருப்பைக் கழட்டி அடிச்சிடுவேன் நாயே..." என்று அலுவலர் மிரட்டும் காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே கடுமையான கண்டனங்களை எழுப்பியது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக உரிய துறை ரீதியான விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த அலுவலர் கலைமண்ணன், ஜெகநாதனை நோக்கி "பிச்சுப்புடுவேன் பிச்சு... செருப்பை கழட்டி அடிச்சிடுவேன் நாயே" என்று தரக்குறைவாகப் பேசி, தனது காலணியைக் கழட்டி அடிக்கப் பாய்ந்துள்ளார்.மண்டபம் முகாமில் வசித்து வரும் ஜெகநாதன் (53) என்ற இலங்கைத் தமிழர், தனக்கு ஏற்பட்டுள்ள குடலிறக்கம் (Hernia) நோய்க்கான சிகிச்சைப் பெற சென்னை செல்வதற்காக சார் ஆட்சியரிடம் முறைப்படி அனுமதி (விடுப்பு) கோரியுள்ளார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக உரிய துறை ரீதியான விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,




கருத்துகள்