முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேகமலை - மாஞ்சோலை விவகாரம் தென்னிந்திய பார்வர்டு பிளாக் நடத்திய அனைத்துக் கட்சிப் பொதுக்கூட்டம்

மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தேனி மாவட்டம் மேகமலை வசிக்கும் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தோட்டத் தொழில் மக்களுக்கு நீநியும் உரிமையும் கேட்ட அனைத்துக் கட்சிப் போராட்டம்


தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மேகமலை – மாஞ்சோலை மக்களின் உரிமைக்காக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர், மக்களின் உரிமைக்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்,. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கே.சி. திருமாறன் ஜி, இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் ரவி பச்சமுத்து  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பனருட்டி தி.வேல்முருகன், கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர் உ.தனியரசு, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஆர். தனபாலன்,


புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, விஸ்வகர்மா ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சாமி, மீனவர்கள் சங்கத் தலைவர்கள் மகேஸ்வரன் மற்றும் போஸ்ட் மணி, விவசாய அணி தலைவர் வி.என். அரசு, மற்றும்  மேகமலை -மாஞ்சோலை சார்பாக மக்களின் உரிமை, வாழ்வாதாரம் மற்றும் வாழ்விடப் பாதுகாப்பிற்காக அனைத்துக் கட்சிகளின் சார்பாக கலந்து கொண்டு போராட்டத்திற்கு வலுச் சேர்த்தனர்

அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுடன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் சமீபத்தில் மேகமலை மலைக்கிராம மக்கள் வெளியேற்றத்திற்கு எதிராகப் பெரிய அளவிலான அனைத்துக் கட்சி போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. உச்ச நீதிமன்றம் மேகமலை வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மக்களை வெளியேற்றவும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.  மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் வணிக ரீதியிலான விடுதிகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தலைமுறை தலைமுறையாக அங்கு வசித்து வரும் சுமார் 98 மலைக்கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது,


மக்கள் தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்வதை ஏற்காமல் எதிர்க்கின்றனர். வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் தங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மறுஆய்வு மனு (Review Petition) தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்துகின்றனர். போராட்டத்தில் பங்கேற்ற முக்கியத் தலைவர்கள் மதுரை மற்றும் தேனி பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஆதரவு அளித்துள்ளனர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் எஸா. கிருஷ்ணசாமி போராட்டத்தில் கலந்துகொண்டு, காடு மற்றும் புலிகள் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை வெளியேற்றுவது வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயல் என்று கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

சிபிஎம் (CPI-M) மாநிலச் செயலாளர் பி. சண்முகம் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. ராணுவப் படைகளைப் பயன்படுத்தி மக்களை வெளியேற்றலாம் என்ற நீதிமன்றத்தின் கருத்துக்கு அவர் பலத்த கண்டனம் தெரிவித்தார். தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு, தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கே.சி. திருமாறன் ஜி மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர். போராட்டத்தின் வடிவங்கள் தேனி மற்றும் மதுரை சுற்றுவட்டார மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டு முழு அடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.மாஞ்சோலை மற்றும் மேகமலை ஆகிய இரண்டு பகுதிகளிலும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தென் மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் அனைத்து கட்சியை சேர்த்த நிர்வாகிகள் மூலஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன, போராட்டம் அடுத்த கட்டத்தில் நகர்கிறது அரசு நடவடிக்கை எதிர் பார்த்து

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...