தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலின் நியமன பெண் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வி.எம். வேலுமணி மற்றும் வழக்கறிஞர் சுதர்சனா சுந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி இந்த முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாநில பார் கவுன்சிலுக்கு இரண்டு பெண் உறுப்பினர்களைச் சென்னை உயர்நீதிமன்றம் நியமிக்க வேண்டும்
பார் கவுன்சில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 23 உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய பின், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் தீப்தி அறிவுநிதி இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
மொத்த உறுப்பினர்கள்: அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பி.எஸ். அமல்ராஜ் உட்பட 23 வழக்கறிஞர்கள் வெற்றி பெற்றனர். இந்த 2 நியமன பெண் உறுப்பினர்களுடன் சேர்த்து பார் கவுன்சிலின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்கிறது.



கருத்துகள்