முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்த வாரத்தில் தமிழ்நாட்டில் லஞ்ச ஊழலில் சிக்கி கைதானவர்கள்

ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்களை ஏமாற்றி ரூபாய் .1 கோடி லஞ்சம்: 3 வனச்சரகர்கள் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் !

"அரசு வனத்துறை நிலத்தை பட்டா வழங்குவதாகக் கூறி, 3 தலைமுறையாக வாழ்வாதாரத்தை இழந்த மலைவாழ் மக்களை மிரட்டி லஞ்சம்"  ஜவ்வாது மலையில் நூற்றுக்கணக்கான குடும்பங்களை பாதித்த ஊழல்; ஜமுனாமரத்தூர், மேல்பட்டு, நாடானூர் வனச்சரகர்கள் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம்; மாவட்ட வன அலுவலர் உத்தரவு  திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில், அரசுக்கு சொந்தமான காப்புக் காடு வனத்துறை நிலத்தை

திருவண்ணாமலை மாவட்டம், கிழக்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 262 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் லட்சக்கணக்கான மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் சாமை, திணை, வரகு, தேன் மற்றும் பலாமரம் வளர்ப்பு போன்ற விவசாய விளைபொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் தங்கள் நிலத்தை ஒட்டியுள்ள வனத்துறைக்குச் சொந்தமான காட்டு நிலங்களைச் சுமார் 3 தலைமுறைகளாக அனுபவித்து வரும் மலைவாழ் மக்களுக்கு, குறிப்பிட்ட சட்ட விதிகளின்படி அந்த நிலத்திற்கான வரி செலுத்த அனுபவ உரிமைப் பட்டா பெற வாய்ப்புக்கு காத்திருக்கும் நிலை எனக் கூறப்படுகிறது.

இந்த வாய்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வனத்துறையினர், ஜமுனாமரத்தூர், மேல்பட்டு மற்றும் நாடானூர் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாகக் காட்டு நிலங்களை விவசாயத்துக்கு அனுபவித்து வந்த மலைவாழ் மக்களை நேரில் அழைத்து மிரட்டியுள்ளனர்.

"நிலத்தைப் பயன்படுத்தியதற்காக உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் வழக்குஅ போடுவதாக மிரட்டி லஞ்ச வேட்டையை அரசு வன நிலங்களை குடியிருப்பு வகைமாற்றம் செய்து வீட்டு மனைப் பட்டா வாங்கித் தருவதாகக் கூறி, மலைவாழ் மக்களிடம் தலா ரூபாய் .1 லட்சம் முதல் ரூபாய் .5 லட்சம் வரை ஆக்கிரமிப்பு நிலங்களுக்குத் தகுந்தார் போல வசூல் செய்துள்ளனர். இவ்வாறு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்துள்ளது.

மாவட்ட வன அலுவலர் சுதாகர் நடத்திய விசாரணையில், புகார்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பின்வரும் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்:

ஜமுனாமரத்தூர் வனச்சரகர் பிரபு, மேல்பட்டு வனச்சரகர் சுரேஷ்,  நாடானூர் வனச்சரகர் செங்குட்டுவன், வனக்காவலர் முத்து, வனவர் அருணகிரி, வனவர் சுப்பிரமணி, இவர்கள் மீது விசாரணை நடக்கிறது 

மலைவாழ் மக்கள் லஞ்சம் கொடுத்த போதிலும், அவர்களுக்கு பட்டா எதுவும் இவர்கள் மூலம் வழங்கப்படவில்லை. மேலும், அவர்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வாங்காவிட்டால் காலி செய்ய நேரிடும் என மிரட்டியுள்ளனர். இதையடுத்து, பழங்குடி மற்றும் மலைவாழ் மக்கள் வனத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

 3 தலைமுறைகளாக ஒரே நிலத்தில் வாழ்ந்து, தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வரும் மலைவாழ் மக்களை, அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி மிரட்டி ஏமாற்றி லஞ்சம் வாங்கியது மிகவும் வேதனையானது. இவர்களின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி, அவர்களின் கடும் உழைப்பில் சேர்த்த பணத்தை பறித்துள்ளனர். இது வெறும் ஊழல் அல்ல; இது ஒரு சமூகப் படுகொலை. 30-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களிடம் மிரட்டிப் பணம் பறித்த வனத்துறை அதிகாரிகள், தாங்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டிய மக்களிடமே இவ்வாறு நடந்துகொண்டது, அவர்களின் சீருடையின் கண்ணியத்தை குலைத்துள்ளது. வனத்துறை என்பது இயற்கை வளங்களையும், அங்கு வாழும் மக்களையும் பாதுகாக்கும் ஒரு அமைப்பு. ஆனால், இங்கு அது எதிர்மறையான பாத்திரத்தில் செயல்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் சுதாகர், புகார்களின் அடிப்படையில் உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளார். 

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 6 பேரும், லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் குறித்து மேலதிக விசாரணை இனி நடைபெறும். 


அடுத்த ஊழல் பெரம்பலுார் அருகே, கான்ட்ராக்டரிடம் 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் (வயது ,48), என்பவரை பெரம்பலுார் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி, பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.பெரம்பலுார் அருகே, ஒப்பந்ததாரரிடம் 

வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள சித்தார்தன்,  கடந்த சில நாட்களுக்கு முன் பணி முடித்த ஒப்பந்ததாரர் ஒருவர் பில் தொகைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்தனை அணுகியபோது, 6,500 ரூபாய் லஞ்சம் கேட்டார். அந்த ஒப்பந்ததாரர் வஞ்சம் 4,500 ரூபாய் கொடுத்துள்ளார். அதற்கு சித்தார்த்தன் மீதமுள்ள 2,000 ரூபாய் கொடுக்குமாறு, அவர் கையால் பேப்பரில் எழுதி காண்பித்தார். அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது 



இதை ஒப்பந்ததாரர் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட, அது வைரலாகப் பரவியது. இதைத்தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்தனை பணியிடை நீக்கம் செய்து பெரம்பலுார் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி உத்தரவிட்டார்.   அடுத்த ஊழல் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கலப்புத் திருமண செய்த நபருக்கு நிதியுதவி மற்றும் சான்றிதழ் வழங்க ரூபாய் 1,500 லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை பெண் அலுவலர்கள் இருவர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பணம் பெற்ற கையுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைக்கண்ணன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பிரியதர்ஷினி என்ற பெண்ணை கலப்புத் திருமணம் செய்துள்ளார். அரசு வழங்கும் கலப்புத் திருமண நிதியுதவி (திருமண உதவித்தொகை மற்றும் 4 கிராம் தங்கம்) மற்றும் சான்றிதழைப் பெறுவதற்காக, ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி அன்று இணையதளம் வழியாக விண்ணப்பித்திருந்தார்.


அதை முறைப்படி அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்புவதற்காக, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை பிரிவில் பணிபுரியும் அலுவலர்கள்  பூங்கொடி (சமூக நல விரிவாக்க அலுவலர்) மற்றும் சகுந்தலா (ஊரக நல அலுவலர்) இவ்விருவரும் தாமரைக்கண்ணனிடம் ரூபாய் 2,000 லஞ்சம் கேட்ட நிலையில், இறுதியில் ரூபாய் 1,500 தருமாறு வற்புறுத்தியுள்ளனர். ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத தாமரைக்கண்ணன்,  புகார் அளித்தார். அவர்களின்

ஆலோசனையின்படி, செப்டம்பர் 3, 2026 அன்று பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் 1,500 பணத்தை தாமரைக்கண்ணன் கொண்டு சென்று கொடுத்துள்ளார். முதலில் சகுந்தலா அந்தப் பணத்தைப் பெற்று பூங்கொடியிடம் வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான டீம் இருவரையும் பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்து சிறையில் சேர்த்தனர்.  அடுத்த ஊழல் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே பட்டா மாறுதலுக்கு ரூபாய் . 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீரசோழபுரம் கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் (வயது 36) ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பணம் பெற்ற கையுடன்  பிடித்துக் கைது செய்தனர்,

கைது செய்யப்பட்ட அருண்குமார்  கிராம நிர்வாக அலுவலர், வீரசோழபுரம்    பொங்கலூர் மாதப்பூரைச் சேர்ந்த ராமசாமி மற்றும் அவரது சகோதரருக்குச் சொந்தமான விவசாய நிலத்தை உட்பிரிவு செய்து, தனித்தனியாகப் பட்டா மாறுதல் செய்து தருவதற்காக லஞ்சம் வாங்கியுள்ளார். பட்டா மாறுதலுக்கு மொத்தம் ரூபாய். 40 ஆயிரம் லஞ்சம் கேட்கப்பட்டு இதில் முதற்கட்டமாக ரூபாய் . 10 ஆயிரம் கொடுத்த ராமசாமி, மீதி லஞ்சம் கொடுக்க விரும்பாமல் திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனையின்படி, பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூபாய் . 20 ஆயிரத்தை அருண்குமாரிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை செப்டம்பர் 1, 2026 ஆம் தேதி பணம் பெற்ற கையுடன் மடக்கிப் பிடித்து விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்குச் சேர்த்தனர். 


 அடுத்த ஊழல் கல்குவாரிக்கான தடையின்மை சான்றிதழ் (NOC) மற்றும் அனுமதி வழங்க தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கனிமவள சுற்றுச்சூழல் அலுவலர் மற்றும் கனிமவளத்துறை அலுவலர்கள் சிலர் பெரும் தொகை லஞ்சமாகக் கேட்டதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், சுற்றுச்சூழல் பொறியாளர் உட்பட 3 பேர் பணம் உள்ள கையுடன் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கல் குவாரி மற்றும் கிரஷர்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தடையின்மை சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக, தருமபுரி சுற்றுச்சூழல் பொறியாளர் உட்பட 3 அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர்,   அடுத்த ஊழல் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் வீட்டு மனை பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியில் பணியாற்றி வந்த பெண் கிராம நிர்வாக அலுவலர் யாசியாபானு (வயது 45) கைது செய்யப்பட்டார். காரணம்: ஐ.டி நிறுவனப் பணியாளர் ஒருவரது வீட்டு மனைப் பட்டா மாறுதல்  பணிகளைச் செய்வதற்கு  ரூபாய் 4,000 லஞ்சம் கேட்ட நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத நபர் கொடுத்த புகாரின் பேரில், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (DVAC) பினாப்தலீன் இரசாயனப் பொடி  தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அனுப்பி, அவரை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...