வால்பாறை தனித் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதாகரின் ஜாதிச் சான்றிதழைச் சரிபார்க்கக் கோரிய வழக்கில் உரியவர்கள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
வால்பாறை தனித் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதாகரின் ஜாதிச் சான்றிதழைச் சரிபார்க்கக் கோரிய வழக்கில்,
இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அளவிலான ஜாதிச் சான்றிதழ் சரிபார்ப்புக் குழு ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வால்பாறை தனித் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுதாகரை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஸ்ரீதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கைத் தொடர்ந்தார்.
அதில் சட்டமன்ற உறுப்பினர் ஆன சுதாகர் தனது வேட்புமனுவில், தான் ஹிந்து மதத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தவர் (SC) எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் தீவிரமாக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருகிறார் என்றும், சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி ஞானஸ்தானம் மற்றும் திருமணம் செய்துகொண்ட அவரது தந்தை ஆரோக்கியத்தின் உடல் கிறிஸ்தவ முறைப்படி கல்லறைத் தோட்ட்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சட்ட வாதத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஹிந்து, சீக்கியர் அல்லது பௌத்த மதங்களைத் தவிர வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள் அட்டவணை பட்டியல் ஜாதியினராகக் கருதப்பட மாட்டார்கள். எனவே, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் ஒருவர் தனித் தொகுதியில் போட்டியிட பொய்யான ஜாதிச் சான்றிதழைப் பயன்படுத்தியது
சட்டவிரோதம் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி, கோயம்பத்தூர் மாவட்ட ஜாதிச் சான்றிதழ் சரிபார்ப்புக் குழுவைத் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராகச் சேர்த்தார். மேலும், இதுகுறித்து தேர்தல் ஆணையமும், ஜாதிச் சான்றிதழ் சரிபார்ப்புக் குழுவும் பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை 6 அக்டோபர் 2026 ஆம் தேதி அன்று விசாரணைக்கு உத்தரவிட்டு தள்ளி வைத்துள்ளார்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வால்பாறை (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் அ.சுதாகர் 54,671 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் டாக்டர் ஸ்ரீதரன் 45,300 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்தார். இத்தேர்தலில் திமுக வேட்பாளர் 9,371 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார் வால்பாறை தொகுதி தேர்தல் முடிவுகளின் முழுமையாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் சுதாகர் (திமுக - வென்றவர்): 54,671 வாக்குகள் (36.34 சதவீதம் )டாக்டர் ஸ்ரீதரன் (டி.வி.கே): 45,300 வாக்குகள் (30.11சதவீதம் )லட்சுமண சிங் (அதிமுக): 43,728 வாக்குகள் (29.07 சதவீதம் )உமாதேவி (நாதக): 5,256 வாக்குகள் (3.49 சதவீதம் )சமீபத்திய உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை வழங்கிய தீர்ப்பு ஒரு நபர் ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ அல்லது பிற மதங்களுக்கு மாறிய பிறகு, அவர் அட்டவணை பட்டியலின (SC) ஜாதிக்குரிய சிறப்பு சலுகைகளையோ அல்லது எஸ்சி/எஸ்டி (SC/ST) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கை கோரவோ சட்டப்படி தகுதியற்றவர்
என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி எல். விக்டோரியா கௌரி பிறப்பித்துள்ள இந்த முக்கிய தீர்ப்பின் பின்னணி மற்றும் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இரவிகுமார் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.புகார்: தான் ஜிதி ரீதியாக அவமதிக்கப்பட்டதாகக் கூறி, எஸ்சி/எஸ்டி சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடினார்.எதிர்த்தரப்பு வாதத்தில் மனுதாரர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி, 2015-ஆம் ஆண்டிலேயே ஞானஸ்நானம் பெற்றுவிட்டதால், அவருக்கு இந்தச் சட்டத்தின் கீழ் சலுகை கோர உரிமை இல்லை என பள்ளி நிர்வாகத் தரப்பில் வாதிடப்பட்டது,
ஒரு நபர் பிறிதொரு மதத்திற்கு மாறி, அந்த மதத்தின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றும் போது, அவர் அட்டவணை பட்டியலின சமூகத்திற்குரிய சட்டப் பாதுகாப்புகளைக் கோர முடியாது. அரசியல் சாசன ஆணை (1950): 1950-ஆம் ஆண்டின் அரசியல் சாசன ஆணையின்படி (Constitution Scheduled Castes Order of 1950), ஹிந்து, சீக்கியம் அல்லது பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே பட்டியலின (SC) சமூகப் பிரிவினராக அங்கீகரிக்கப்படுகிறார்கள்.வழக்கு தள்ளுபடி: கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய மனுதாரருக்கு எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரும் தகுதி சட்டப்படி இல்லை என்று கூறி நீதிபதி அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.உச்ச நீதிமன்ற மற்றும் அரசியல் சாசன விதிகளைச் சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர் மீண்டும் பழைய மதத்துக்குத் திரும்பாத நிலையில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நிவாரணம் கோர முடியாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பெரியகுளம் கள்ளிப்பட்டி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2019 முதல் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தவர் இரவிகுமார். பின்னர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிக்கு பணி இடமாறுதல் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கள்ளிப்பட்டி பள்ளியின் முதல்வர் அருளானந்தன் கோவில் மற்றும் அம்புரோஸ், டேனியல் ஜேம்ஸ், எமர்சன் டேவிட் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையினருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.அந்த மனுவில், தான் அட்டவணை பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஹிந்து. பள்ளியில் மேல் ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தன்னையும், பிற அட்டவணை பட்டியல் ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்களையும் பாகுபாடுடன் நடத்தி அவமானப்படுத்தினர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கெளரி விசாரித்தார். பள்ளி முதல்வர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.பாஸ்கர் மதுரம் வாதிடுகையில், மனுதாரர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். உசிலம்பட்டி எஸ்டிஏ திருச்சபையில் 2015-ஆம் ஆண்டில் ஞானஸ்தானம் பெற்றுள்ளார். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்துக்கு எதிராகச் செயல்பட்டு வந்ததால் குடியாத்தம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்றார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் எஸ்டிஏ திருச்சபையில் ஞானஸ்தானம் பெற்றுள்ளதற்கு ஆதாரம் உள்ளது. ஆனால் மனுவில் தான் ஒரு ஹிந்து எனக் குறிப்பிட்டுள்ளார். வழக்கு தொடரும் நபர் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். ஜாதிய வன்கொடுமைப் புகாரானது பாதிக்கப்பட்டவரை அவமதித்தல், அச்சுறுத்தல் வேண்டுமென்றே நடந்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரை அவரது அட்டவணை பட்டியல் ஜாதி அல்லது பட்டியல் பழங்குடியின அடையாளத்தின் காரணமாக அவமானப்படுத்துவது நோக்கமாக இருந்திருக்க வேண்டும். சம்பவம் பொது இடத்தில் நடந்திருக்க வேண்டும். மனுதாரர் புகாரில் இந்த விபரம் இல்லை. நிர்வாக ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கையை துன்புறுத்தல் எனக் கூறி நடவடிக்கைக்கு உத்தரவிட முடியாது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சிறப்புத் தண்டனைச் சட்டங்களை அவற்றின் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள்ளேயே செயல்படுத்தப்பட வேண்டும். ஹிந்து மதத்தில் இருந்து மாறிய பிறகு மீண்டும் பழைய மதத்துக்குத் திரும்பியதற்கான ஆதாரம் இல்லாத நிலையில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோர முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். அதை போல் உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு
CHINTHADA ANAND v. STATE OF ANDHRA PRADESH & ORS.
Supreme Court of India
Criminal Appeal No. 1580 of 2026
SLP (Crl.) No. 9231/2025
Judgment: 24.03.2026 Coram: Justice Prashant Kumar Mishra & Justice Manmohan அமர்வு
ஒருவர் Scheduled Caste (Madiga) சமூகத்தில் பிறந்திருந்தாலும், பின்னர் Christianity-க்கு மாறி, நீண்டகாலமாக Pastor ஆக செயல்பட்டால், அவர் தொடர்ந்து SC status மற்றும் SC/ST (Prevention of Atrocities) Act-ன் பாதுகாப்பைக் கோர முடியுமா?
முடியாது.
Constitution (Scheduled Castes) Order, 1950 – Clause 3 படி, Hindu, Sikh அல்லது Buddhist மதங்களைத் தவிர வேறு மதத்தை profess செய்பவர் Scheduled Caste member ஆக சட்டப்படி கருதப்படமாட்டார். Christianity இந்த மூன்று மதங்களில் சேர்க்கப்படவில்லை.
இந்த வழக்கில் appellant முன்பு Madiga SC community-ஐச் சேர்ந்தவர். ஆனால் அவர் Christianity-க்கு மாறி 10 ஆண்டுகளுக்கும் மேலாக Pastor ஆக செயல்பட்டு வந்தது Court முன் நிரூபிக்கப்பட்டது. இதனால், அவர் தொடர்ந்து Christianity-ஐ profess செய்கிறார் என்பது தெளிவாகிறது என்று Court கூறியது.
“Once the appellant converted to Christianity, the caste status which he earlier enjoyed … stood eclipsed in the eyes of law.”
அதாவது, பிறப்பால் இருந்த SC status மட்டும் போதாது; Clause 3-ன் கீழ் மதம் தொடர்பான constitutional requirement-மும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
ஜாதிச் சான்றிதழ் மட்டுமே வைத்திருப்பது போதாது என்று Supreme Court தெளிவுபடுத்தியது.
மீண்டும் Hindu/Sikh/Buddhist மதத்திற்கு genuine reconversion நடந்ததாகக் கூறினால்:
Original SC caste-க்கு சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம்
உண்மையான reconversion
Original community அவரை மீண்டும் ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரம்
ஆகியவை நிரூபிக்கப்பட வேண்டும் என்று Court கூறியது.
SC status இல்லாத நிலையில், அந்த நபர் SC/ST (Prevention of Atrocities) Act-ன் கீழ் SC member-க்கு வழங்கப்படும் statutory protection-ஐ அடிப்படையாகக் கொண்டு complaint maintain செய்ய முடியாது என்று Supreme Court held செய்தது.
அதனால், High Court criminal proceedings-ஐ quash செய்தது சரி என்று Supreme Court உறுதி செய்தது.
“SC status is governed by the Constitution (Scheduled Castes) Order, 1950; mere birth in an SC community or possession of a caste certificate cannot override Clause 3 after conversion to a religion not recognised under that Order.” Important provisions:
Constitution (Scheduled Castes) Order, 1950 – Clause 3
SC/ST (Prevention of Atrocities) Act, 1989
இந்த judgment-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட Review Petition-மும் 15.07.2026 அன்று Supreme Court-ஆல் dismissed செய்யப்பட்டதாக பதிவாகியுள்ளது. உச்சநீதிமன்றம் வரை தீர்ப்பு உள்ள நிலையில் வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தவறாக சான்று வழங்கியிருந்தால் அதை செல்லாது என அறிவிக்க நீதிமன்றம் தயங்காது உரிய தீர்ப்பு நீதிமன்றம் வழங்கும், இந்த தீர்ப்பு இதுபோல அரசு பணிகள், மற்றும் பிற சலுகைகள் பெற்று தேசத்தை ஏமாற்றிய வேறு நபர்களுக்கும் பொருந்தும் என்ற நிலை இனிவரும்,










கருத்துகள்