கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (டாக்டர் ஆர். ஸ்டாலின் ராஜா ஐ.பி.எஸ் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
தமிழ்நாடு அரசு இன்று செப்டம்பர் 11, 2026 ஆம் தேதி வெளியிட்டுள்ள உத்தரவின் படி, அவர் கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய பணி நியமனமின்றி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணைக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த அன்ஷுல் நாகர் IPS கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல்துறைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றில் எஸ்பி ஸ்டாலின் ராஜா குறித்து கடுமையான பெண்கள் குற்றச்சாட்டு கலந்த விமர்சனங்களை முன்வைத்திருந்ததைத் தொடர்ந்து கன்னியா குமரி மாவட்டத்தில் அந்த சமூக ஊடக நபர் மீது 4 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதில் ஏதோ சில தகவல்கள் உளவுத்துறை சேகரித்து அதன்படி இந்த அரசியல் மற்றும் சமூக ஊடக விவாதப் பின்னணியில் இந்த திடீர் இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பெண்கள் தொடர்பான சில புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் இந்த மாவட்டப் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மேற்கு பகுதியின் துணை ஆணையராகப் பணிபுரிந்து வந்த அன்சுல் நாகர் IPS கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். டாக்டர் ஸ்டாலின்ராஜா IPS மீதான குற்றச்சாட்டுகள்: தனக்கென சமூக வலைத்தளங்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் குழுக்களை வைத்துக்கொண்டு, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதன் மூலம் இளம் பெண்களை ஈர்க்க முயற்சி செய்கிறார் ரீல்ஸ்களுக்கு விருப்பம் தெரிவிக்கும் பெண்களைக் கண்டறிந்து, காவலர்கள் மூலம் அவர்களைத் தொடர்புகொண்டு, வாட்ஸ்அப் எண்களைப் பெற்றுப் பேசுவதாகவும், பல பெண்களிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியுள்ளதாகவும் அவர் குறைந்தது 60 பெண்களுடன் இதுபோன்று தொடர்பில் இருந்ததாகவும், அவரிடம் ஏமாந்த 5 பெண்கள் ஒன்றிணைந்து ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி இது குறித்துப் பேசியுள்ளதாகவும் அவர்மீது குற்றம் சுமத்திய சமூக ஊடக நபர் குறிப்பிடுகிறார். மேலும்,
விரைவில் சென்னையில் வேறொரு பெண்ணை அவர் திருமணம் செய்ய உள்ளதாகவும் இந்த விவகாரம் குறித்து உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் உள்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தும், அவர்கள் ஏன் முதலமைச்சரின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்லவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை காவல் அதிகாரிகள் சீருடையில் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் போடுவதால் கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் ராஜா IPS, சமூக வலைத்தளங்களில் தனக்கென 150 முதல் 200 போலிக் கணக்குகளை உருவாக்கிப் பராமரித்து வருவதாகக் கூறுகிறார்.
அவரது ரீல்ஸ்களைப் பரப்பவும், புகழ் பாடவும் 'ஸ்டாலின் ஐடி விங்' என்ற பெயரில் ஒரு குழு செயல்படுகிறது, எனவும், தனது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதாகவும், அதற்கு 'லைக்' செய்யும் பெண்களைக் கண்காணிக்க அவரது கேம்ப் அலுவலகத்திலேயே ஒரு தனிக்குழு செயல்படுவதாகவும் கூறுகிறார்.கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐ.பி.எஸ் குறித்து, சவுக்கு சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களைப் பதிவு செய்ததாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் காவல் நிலையங்களில் ஒரே குற்றம் பல புகார் அளித்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 முக்கிய காவல் நிலையங்களில் இந்த புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றம் ஒன்று வழக்கு நான்குகன்னியாகுமரியில் ஷைஜீ தலைமையிலான குழுவினர் நேசமணி நகர் காவல் நிலையத்திலும், ரெகு தலைமையிலான குழுவினர் கோட்டார் காவல் நிலையத்திலும், இசைமணி தலைமையிலான குழுவினர் வடசேரி காவல் நிலையத்தில் துணைக் கண்காணிப்பாளரிடமும், பிரேம் தலைமையில் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்கள். இதனிடையே,
கன்னியாகுமரி மாவட்டக் காவல்து கண்காணிப்பாளர் (எஸ்.பி) டாக்டர் ஸ்டாலின் மீது சவுக்கு சங்கர் தொடர்ந்து புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது தற்போது உண்மை எனில் வழக்கு இனி திசைமாறும், இந்த புகார் அளித்த நபர்கள் யார் அவர்கள் இது குறித்து விபரம் முழுவதும் அறிவார்களா என்பதும், விசாரணை நடத்த வேண்டும், இதில் குற்றம் நடந்ததாக விபரம் கூறிய ஊடகம் மற்றும் குற்றம் செய்த அரசு அலுவலர் இருவரும் சம்பந்தப்பட்டது இதில் மூன்றாம் நபர் புகாரில் நான்கு இடத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏன் என்பது எழு வினா? சங்கர் ஒரு நீதிமதி முன் இந்த செய்தியை வாக்குமூலமாகப் பதிவு செய்தால் நிச்சயம் விசாரணை நடவடிக்கை வறு விதமாக அமையும், அதே போல் இது பொய் தகவல் எனில் அந்த சமூக வலைத்தளத்தின் மீது நடவடிக்கை வரும், அரசியல் கட்சி நபர் போல அரசு அலுவலருக்கு ஆதரவாக புகார் கொடுத்து மூன்றாம் நபர் நடவடிக்கை என்பது சரியா என்பது இங்கு எழுவினா?இந்த விவகாரம் கனிம வளக் கடத்தலைத் தடுத்ததன் காரணமாக, கடத்தல் கும்பல் மற்றும் அதற்கு ஆதரவாக இருந்த சில அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து அவருக்குத் தொடர் எதிர்ப்புகள் கிளம்ப எஸ்பி ஸ்டாலினை அப்பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என மேல்மட்டத்தில் தீவிர அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எது உண்மை என்பது விரைவில் வெளிச்சமாகலாம்








கருத்துகள்