தமிழநாடு முதலவர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட நபர் டெல்லி விமான நிலயத்தில் கைதாகி புழல் சிறையில் அடைப்பு
தமிழநாடு முதலமைச்சரை ஆள்மாறாட்டம் செய்து அல்-உருவாக்கப்பட்ட போலி மோசடி வீடியோ காட்சிகள் பரவியது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் உருவத்தை ஆள்மாறாட்டம் செய்து AI உருவாக்கிய ஆழமான போலி மோசடி வீடியோவுக்கு எதிராக CBCID காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சைபர் ரோந்து பணியின் போது, சிபிசிஐடி சைபர் கிரைம் குழு பேஸ்புக் மற்றும் பிற தளங்களில் பரவும் போலி வீடியோக்களை அடையாளம் கண்டுள்ளது.
இந்த வீடியோக்கள் பொய்யாக நிதி உதவி வழங்குவதாகவும், வாட்ஸ்அப் எண்களை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
01.09.2026 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விவரங்களைப் பெறவும் போலியான உள்ளடக்கத்தை அகற்றவும் மெட்டாவைத் தொடர்புகொண்டனர்.
இதுபோன்ற வீடியோக்கள், தொலைபேசி எண்கள் அல்லது வாட்ஸ்அப் குழுக்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் குறித்து பதிவட்ட நபர்தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து செயற்கை நுண்ணறிவு (AI Deepfake) தொழில்நுட்பம் மூலம் போலி வீடியோக்களை தயாரித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பிய மோசடி கும்பல் மீது சிபி-சிஐடி (CB-CID) சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், முதலமைச்சர் பேசுவது போன்ற போலி வீடியோவை உருவாக்கி, அதில் இந்தி ஆடியோவை இணைத்து, "நிதியுதவி பெற இந்த வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்" எனப் பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் பரப்பப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில், இது போன்ற பல போலியான AI வீடியோக்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபேஸ்புக் கணக்குகளிலிருந்து பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது இந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கவும், போலிக் கணக்குகளின் விவரங்களைப் பெறவும் மெட்டா (Meta) நிறுவனத்தை சைபர் கிரைம் காவல்துறை அணுகியுள்ளனர் I குற்றவாளிகளைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதே நேரத்தில், முதலமைச்சர் மற்றும் ஒரு நடிகை குறித்து சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்ட பிரவீன் கணேசன் (வயது 35) என்ற ஆன்லைன் தொழிலதிபர் ஒருவரைச் சென்னை சைபர் கிரைம் காவல்துறை தனியாகக் கைது செய்துள்ளனர்அந்தரங்கப் பொருட்களை விற்பனை செய்யும் 'காமகாரட் இந்தியா', 'விண்ட்ராக இங்க', 'விண்ட் ராக்ஸ்பேஸஸ்' மற்றும் சீனாவில் 24 மனை தெலுங்கு செட்டியார் கஃபே ஆகிய நிறுவனங்களை நடத்தி வருபவர் தொழிலதிபர் பிரவீன் கணேசன்(வயது 35). கடந்த ஜூன் மாதம் சீனாவில் இருந்த போது, முதல்வர் சி. ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றைப் பதிவிட்டதாக
சமூக வலைதளங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அந்தப் பதிவை அவர் நீக்கினார். இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை தெற்கு மண்டல சைபர் க்ரைம் காவல்துறை ஆய்வாளர் சுஜாதா தலைமையிலான காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதையடுத்து, சென்னை காவல்துறை ஆணை ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், பிரவீன் கணேசனுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு அனைத்து விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை ஹாங்காங்கிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு பிரவீன் கணேசன் வந்திறங்கினார். அங்குள்ள இம்மிகிரேஷன் அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டைச் சோதித்த போது, அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் இருப்பதை அறிந்து அவரைத் தடுத்து நிறுத்தி தகவல் அளித்தனர். உடனே தகவலறிந்து, சென்னை சைபர் க்ரைம் காவல்துறை ஆய்வாளர் (பொறுப்பு) துர்கா தலைமையிலான காவல்துறையினர் டெல்லி விரைந்து அங்கு பிரவீனை கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சென்னைக்கு அழைத்து வர 'டிரான்சிட் வாரண்ட்' பெற்றனர். நேற்று முன்தினம் இரவு அவர் சென்னைக்கு கைது செய்து கொண்டு வரப்பட்டார். இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

கருத்துகள்