முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூக நல்லிணக்கம் சீர் கெடுக்க முயலும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை கோரும் தெ இ பா பிளாக் நிர்வாகிகள்

தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகப்பிரிவு SIFB IT WING மாநிலப் பொதுச்செயலாளர் கள்ளந்திரி அஜித 04.09.2026 இன்று  வெளியிட்ட செய்திக் குறிப்பில் 

தேசஒற்றுமைப் போராளி, வாழும் நேதாஜி, தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் KC.திருமாறன் ஜி ஆணைக்கிணங்க, மதுரையைத் தலைமை இடமாக கொண்டு செயல்படுவதாகக் தெரிவித்துள்ள உரிய எழுதிய நபர் பெயர் முகவரி இல்லாத "டிஜிட்டல் வாய்ஸ்" என்ற அரசின் வெளியீட்டாளர் அனுமதி பெறாத அச்சகம் பெயர் இல்லாத மற்றும் நீதிமன்றத்தின் விளம்புகை செய்யாத முறையான முகவரி இல்லாத அஞ்சல் மூலம் வந்த ஒரு வெளியீட்டின் சில பக்கங்களில், தேசிய தலைவர் தெய்வீக திருமகனார்  ஐயா பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் திருமகன் குறித்து தனிப்பட்ட இழிவு படுத்தும் நோக்கில், அச்சிட்ட பக்கங்களில் கண்டபடி "கொடூரமான கிரிமினல்"  என வெளியிட்டு,



தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் கெடும் வகையில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கவும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக நடந்து கொள்ளும் விதமாக செயல்படும் இந்த குற்றச் செயல் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும்,

அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க்கோரியும்,  தென்னிந்திய பார்வேர்ட் பிளாக்  மதுரை மாவட்டக் கோட்டப் பொறுப்பாளர்ஆழ்வார்புரம் மருதுஆனந்த் தலைமையில், மதுரை மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாநகரக் காவல் ஆணையரைச் நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்ட நிகழ்வில் மதுரை மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்ஹிந்த்புரம் வசந்தகுமார்,மதுரை மாநகர் மாவட்ட பொருளாளர்  ஊமச்சிகுளம் சுரேஷ் மதுரை மாநகர் மாவட்ட அமைப்பு செயலாளர் முனிச்சாலை பாண்டி, மதுரை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் கள்ளந்திரி அஜித், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் வண்டியூர் கணேசன், மதுரை மாநகர் மாவட்ட மாணவரணி பொறுப்பாளர்கள் மருது பிரவீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் எனவும்



நீதிமன்றம் மூலமாக இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கைகளை கட்சி சார்பான சட்ட வல்லுநர்கள் மூலம் தொடரவும் உள்ளதாக மதுரை மாவட்டக் கோட்டப் பொறுப்பாளர் ஆழ்வார்புரம் மருதுஆனந்த் தெரிவித்தார். இந்தியாவில், உண்மை இல்லாத வதந்திகளைப் பரப்புவதும், உரிய அனுமதியின்றி அச்சுப் பிரசுரங்களை (செய்தித்தாள்கள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவை) வெளியிடுவதும் சட்டப்படி கடுமையான குற்றமாகும். இதற்காக இந்தியக் குற்றவியல் சட்டங்களின் கீழ் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். தற்போது நடைமுறையில் உள்ள பாரதிய நியாய சன்ஹிதா (BNS, 2023) மற்றும் பழைய இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) ஆகியவற்றின் கீழ் இதற்கான குற்றப்பிரிவுகள் மற்றும் தண்டனைகள்  வதந்தி மற்றும் போலிச் செய்திகளைப் பரப்புதல் (Rumours & Fake News)குற்றப்பிரிவு: BNS பிரிவு 353 (முந்தைய IPC பிரிவு 505).  பொதுமக்களிடையே அச்சத்தையோ, பீதியையோ அல்லது கலவரத்தையோ ஏற்படுத்தும் நோக்கில் தவறான செய்திகளையோ அல்லது வதந்திகளையோ அச்சிட்டு வெளியிடுவது. 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும். (இதுவே வழிபாட்டுத் தலங்களில் அல்லது மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்).  BNS பிரிவு 356 (முந்தைய IPC பிரிவுகள் 499, 501).குற்றம்: ஒரு நபரின் அல்லது அமைப்பின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் உண்மைக்கு புறம்பான தகவல் 2 ஆண்டுகள் வரை எளிய சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும்.  அனுமதி இல்லாமல் பிரசுரங்கள் வெளியிடுதல் பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் பதிவுச் சட்டம், 1867 (Prisons and Books Registration Act).குற்றம்: உரிய அரசுத் துறையின் (RNI - Registrar of Newspapers for India) அல்லது மாவட்ட ஆட்சியரின் (District Collector) முறையான அனுமதி மற்றும் பிரகடனம் (Declaration) இல்லாமல் செய்தித்தாள்களையோ அல்லது பிரசுரங்களையோ அச்சிட்டு வெளியிடுவது சட்டவிரோதமானது.தண்டனை: உரிய அனுமதியின்றி அச்சிடும் பிரஸ் அல்லது வெளியீட்டாளருக்குச் சட்டம் மற்றும் விதிகளின்படி அபராதம் விதிக்கப்படுவதோடு, அந்த அச்சுக்கூடம் அல்லது பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்படலாம்.4. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக வதந்தி பரப்புதல்குற்றப்பிரிவு: BNS பிரிவு 197 மற்றும் 196 (முந்தைய IPC 153A).குற்றம்: இறையாண்மைக்கு பாதிப்பு அல்லது பல்வேறு சமூகத்தினரிடையே பகைமையை வளர்க்கும் விதத்தில் தவறான தகவல்களைப் பரப்புவது.தண்டனை: 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை. அனுமதி இன்றி அச்சுப் பிரசுரம் தொடங்கி அதில் போலியான வதந்திகளைப் பரப்பினால், குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் கடுமையான அபராதமும் விதிக்கப்பட சட்டத்தில் இடமுண்டு. அச்சுப் புத்தகங்களைப் போலவே டிஜிட்டல் ஆடியோ புத்தகங்களுக்கும் சர்வதேச தரப் புத்தக எண் (ISBN) அவர்கள் வசம் உள்ளதா? அச்சடித்த அச்சகம் எழுதிய நபர் குறித்த விபரம், வெளியிட்ட நபர் பதிப்பக விபரம் இருந்தில் நல்லது நீநிமன்ற நடவடிக்கை மற்றும் செய்தி வெளியிட மதுரையில் டிஜிட்டல் வாய்ஸ் புத்தகம்  குறித்து மேலும் விபரம் எதுவும் தரவுகளில் இல்லை மதுரை கோரிப்பாளையம் பகுதியில் 'டிஜிட்டல் வாய்ஸ்' (Digital Voice) என்ற பெயரில் தனியாக ஒரு குறிப்பிட்ட கடை அல்லது நிறுவனம் நேரடியாக இல்லை. ஆகவே இது குறித்து மதுரை காவல்துறையின் IS எனும் உளவு அமைப்பு துப்புத் துலங்கி கண்டறிய வேண்டும் என்பதே சமூக நல்லிணக்கம் விரும்பும் நபர்கள் எதிர்பார்ப்பாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...