முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரை நாயக்க மன்னர்கள் கால ஒற்றர் படையான பூம்பூம் மாட்டுக்காரர்களும், ஆடை நாகரீகம் அறிந்த சௌராஷ்ட்ரார்களும் குறித்த வரலாறு

மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்களில் மாமன்னர் திருமலை நாயக்கர் (பொஆ1623 முதல் 1659 வரை) உள்ள ஆட்சி செய்த காலத்தில்,


நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்திற்காக மிகவும் வலுவான ஒற்றாடல் முறை அதாவது உளவுத் தகவல் பரிமாற்றம் நடைமுறையில் இருந்தது. எதிரி நாடுகளின் ராணுவ நகர்வுகள் மற்றும் உள்நாட்டு சதித் திட்டங்களை முன்கூட்டியே கண்டறிய இந்த ஒற்றர்கள் படை பயன்படுத்தப்பட்டனர்மன்னர் திருமலை நாயக்கர் காலத்து ஒற்றர் முறையின்  தலைமை மற்றும் கட்டுப்பாடு ஸ்தானாபதி  ஒற்றர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் அனைவரும் 'ஸ்தானாபதி' (அரசின் தூதுவர் அல்லது உயர் அதிகாரி) என்பவரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டனர், ஒரு ஒற்றர் வழங்கும் தகவல் உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த, அவருக்குத் தெரியாமல் மற்றொரு ஒற்றர் நியமிக்கப்பட்டார்,  ஒரு ஒற்றர் தவறான தகவலை அளித்தால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டாரே தவிர, அவருக்கு மரண தண்டனையோ கடுமையான சித்திரவதையோ எதுவும் வழங்கப்படவில்லை.



அண்டை அரசர்கள் ஆட்சி செய்த மைசூர், தஞ்சாவூர் மற்றும் பிஜப்பூர் சுல்தானகங்களின் ரகசியங்களை அறிய வேண்டி இருந்ததால், ஒற்றர்கள் பல மொழிகள் தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. பொதுவாக சன்னியாசிகள், ஆன்மீகப் பயணிகள் மற்றும் அந்தணர்கள் எளிதாக எங்கும் சென்று வர முடிந்ததால் ஒற்றர் பணிக்கு அவர்கள் அதிகம் தேர்வு செய்யப்பட்டனர். துறவிகள், வியாபாரிகள், ஜோதிடர்கள் மற்றும் நாடகக் கலைஞர்கள் போல மாறுவேடமிட்டு எதிரி நாட்டு எல்லைகளுக்குள் ஊடுருவினர். ஒற்றர்கள் சேகரிக்கும் ரகசியத் தகவல்கள் மற்றும் குறியீட்டுச் செய்திகள் பெரும்பாலும் பனையோலைகளில்  எழுதப்பட்டு ரகசியமாக அரண்மனைக்கு அனுப்பப்பட்டன.




போர் காலங்களில் எதிரிப் படைகளின் நடமாட்டம் குறித்த துல்லியமான தகவல்களை உடனுக்குடன் மன்னருக்குத் தெரிவிக்கும் அதிவேகத் தூதுவர்களும் இவர்களுடன் இணைந்திருந்தனர்.மதுரை நாயக்கர்களின் ராணுவ மேலாண்மை பெரிது,மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் தன் ஆட்சிக் காலத்தில் "பூம்பூம் மாட்டுக்காரர்களை" (ஆதிவாசி மற்றும் நாடோடிப் பிரிவினர்) இரகசிய ஒற்றர்களாகப் பயன்படுத்தினார் என்பது ஒரு சுவாரசியமான வரலாற்றுத் தகவல் மற்றும் மக்கள் வழக்காறாகும்.


நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நிலைமைகளை அறிய அவர் கையாண்ட தனித்துவமான உத்தி இதுவாகும்.மன்னர் திருமலை நாயக்கர் இவர்களைத் தனது ஒற்றர் படையில் இணைத்துக் கொண்டதற்கான முக்கியக் காரணங்கள் மற்றும் செயல்பாடுகள் எளிமையான மாறுவேடம் மற்றும் சந்தேகம் இல்லாத நடமாட்டம்,  பூம்பூம் மாட்டுக்காரர்கள் வீதி வீதியாகச் சென்று, மாட்டை ஆட்டி, சகுனம் மற்றும் ஜோதிடம் சொல்லும் நாடோடி வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள்.  அவர்கள் எங்குச் சென்றாலும் மக்கள் அவர்களைக் கண்டு பயப்படவோ அல்லது சந்தேகப்படவோ மாட்டார்கள்.


இந்த இயல்பு நிலை மன்னர் திருமலை நாயக்கருக்குப் பெரும் சாதகமாக அமைந்தது. எதிரி நாட்டு எல்லைகளுக்குள்ளும், மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைகளிலும் இவர்களால் எளிதாகவே ஊடுருவ முடிந்தது. மக்கள் கருத்துக்களைச் சேகரித்தல், தெருக்களில் வலம் வரும்போது, பொதுமக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் அரசியல் குறைகள், வரி விதிப்புப் பற்றிய அதிருப்திகள், மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஊழல்கள் போன்றவற்றை இவர்கள் உன்னிப்பாகக் கவனித்தனர். சோதிடம் சொல்வது போலப் பாசாங்கு செய்து, மக்களின் மனவோட்டங்களை மிகத் துல்லியமாக அறிந்துகொண்டு அதனை அரண்மனைக்கு ரகசியமாகத் தெரிவித்தனர். எதிரி நாட்டு ரகசியங்களைக் கண்காணித்தல் அக்காலத்தில் அண்டை மாநிலங்களான


மைசூர் மற்றும் பிற சுல்தானியப் படைகளிடமிருந்து மதுரைக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்தன.எல்லையோரக் கிராமங்களில் நடக்கும் அந்நிய நாட்டு வீரர்களின் நடமாட்டம், அவர்களின் ஆயுதக் குவிப்பு, மற்றும் போர்த் திட்டங்களை இந்த மாட்டுக்கார ஒற்றர்கள் "பூம்பூம் மாடு" ஓட்டிச் செல்லும் சாக்கில் கண்காணித்து வந்தனர். குறியீட்டுச் செய்திப் பரிமாற்றம் இவர்களது உடுக்கைச் சத்தம் மற்றும் மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியோசை, மாடு தலையசைக்கும் விதம் போன்றவற்றுக்கு இடையே சில ரகசியக் குறியீடுகள் அளவுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.


ஆபத்துக் காலங்களில் அல்லது அவசரத் தகவல்களைத் தூரத்திலிருக்கும் மற்ற ஒற்றர்களுக்குத் தெரிவிக்க இந்த இசை மற்றும் சைகைகளைப் பயன்படுத்தினர். மன்னர் திருமலை நாயக்கர் தன் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய, சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் நாடோடி வாழ்க்கையையும், அவர்களின் திறமையையும் மிகச் சிறந்த நுண்ணறிவுப் பிரிவாக அதாவது Intelligence Bureau வாக மாற்றிப் பயன்படுத்தினார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அவர்கள் நேரடியாக அரண்மனைக்குத் தகவல் அனுப்பினர். பூம்பூம் மாட்டுக்காரர்களின் இந்த உளவுப் பணி,



பிற்காலத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கும்பெனி ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்தது. கலை வடிவமாக நாம் பார்க்கும் பூம்பூம் மாட்டுக்காரர் மரபுக்குப் பின்னால், மன்னர் காலத்து இராணுவப் பாதுகாப்பு மற்றும் உளவு வரலாறு மறைந்திருப்பது வியப்பிற்குரிய ஒன்றாகும்.  அவர்கள் காலம்கடந்தும் 1990 வரை பூம்பூம் மாட்டுடன் வந்த போது நமது பார்வை அவர்கள் யாசகம் பெற வந்த வாழ்வாதாரம் தானே தெரிந்தது, ஆனால் 15 ஆம் 16 ஆம் நூற்றாண்டில் அவர்கள் தான் உளவுப்படை மேலும் மன்னர் திருமலை நாயக்கரின் மற்றொரு படை கள்ளர் படை, அதை பிறகு காணலாம், சௌராஷ்டிரரும் 





திருமலை நாயக்கரின் 72 பாளையக்காரர்களும்...! (பாகம்-2) நூலில் சௌராஷ்டிரரும் சொக்கம்பட்டி ஜமீனும்...! உலகம் உய்ய  நிர்தோஷம் இல்லா தொழில் புரிய வேண்டும் என்று கிருஷ்ண பகவானால் பணிக்கப்பட்டவர்கள் தற்காலக் குஜராத்திகளான மதுரை மற்றும் விருதுநகர் பகுதி

சௌராஷ்ட்ரா பிராமணர்கள். காலத்தால் முன்னும் பின்னும் நடுவும்  சிறிதும் மாறாமல் முன்னோர்கள் முன்னெப்படியோ அப்படியே இன்றும், என்றும் அழியா ஆன்மப் பெருவாழ்வு வாழ்ந்து வருபவர்கள்  சௌராஷ்ட்ரா பெருமக்கள். உன்னதமான பாரத தேசத்தின் வடமேற்கு எல்லையில் உள்ள மாங்கனி தீபகற்பமான சோமநாதபுரத்தில் இருந்து 

11 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய சௌராஷ்டிரரின் படிப்படியான குடியேற்றம் என்பது, தென்திசையில் வளர்ந்து,அன்னை நித்தம் தவம் செய்யும் தென்குமரியில் முடிவடைகிறது.



விஜயநகர சாம்ராஜ்யத்தில் இருந்து திருவிதாங்கூர் சமஸ்தானம் வரை   அனைத்து மன்னர்களாலும் வரவேற்கப்பட்ட  ஒரு சமூகம் இருந்தது என்றால் அது பட்டு நூல் நெசவு சௌராஷ்ட்ரா பிராமண குலம் ஒன்றே...!

சேர,சோழ, பாண்டிய மன்னவர்களின் அரசவையில் எவ்வித பாகுபாடும்  இன்றி " ஔவையாருக்கு"  எப்படி மதிப்பும், மரியாதையும் கிடைத்ததோ.அதேபோல் அனைத்து அரசவைகளும் சௌராஷ்டிர மக்களை, அழைத்து, அவர்களது ஞானத்துக்கும், தொழில் பக்திக்கும், நேர்த்திக்கும், ஆச்சார அனுஷ்டானத்திற்கும்,

தெய்வீக கலைக்கும், ஆன்ம பக்திக்கும்  அவர்களுக்கு வீதிகளும், ஊர்களும், ராஜ அந்தஸ்தும், பட்டங்களும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

வித்யாரண்யரின் விஜயநகர சாம்ராஜ்யத்தில். மிலேச்சர்களின் படையெடுப்பால் சௌராஷ்டிர தேசத்தில் இருந்து புலம்பெயர்ந்த சௌராஷ்டிரர்கள், குஜராத், மஹாராஷ்டிராவைக் கடந்து வந்து, ஜகத்குரு.ஸ்ரீ ஸ்ரீ வித்யாரண்ய மஹாஸ்வாமிகளால் ஸ்தாபிக்கப்பட்ட, புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆன்மிக தர்மத்தையும், தொழில் வளத்தையும் வளர்க்கும் நல்ல குடிமக்களாக வரவேற்கப்பட்டர்கள். 

உறுதியும், கனவும் கொண்ட ஒருவன் பின்னால் ஒரு குலம் திரளும் போது, ஒரு சாம்ராஜ்யமே உருவாகி விடுகிறது என்ற உண்மையை சௌராஷ்டிரர்கள் உணர்ந்து கொண்ட சமயம் அது.

குடியேறிய நன்னிகழ்ச்சியை மறக்கலாகாது, என்றும் நினைவில் நிறுத்தி, நன்றியை கொண்டாட விரும்பிய சௌராஷ்ட்ரா மக்கள், தாங்கள் விஜயநகரத்தில் குடியேறிய 


பொது ஆண்டு .1312 ஆம் ஆண்டில்  இருந்து,  "சௌராஷ்டிர விஜயாப்தம்" என்ற புதிய சகாப்தத்தை   அங்கிருந்தே தொடங்கினர். 

கிருஷ்ணதேவராயர் காலத்தில் சௌராஷ்டிரர்கள் ஏழு வீதிகளில் தங்கி, தங்கள் தொழிலை இடையூறு எதுவுமின்றி நடத்தி வந்தனர். அவர்கள் பெரும்பாலும் அரண்மனைக்கு வேண்டிய அழகிய பட்டாடைகளை சீனர்களிடம் கற்று உற்பத்தி செய்வதில் 

முழுவதும் கவனம் செலுத்தினார்கள். அதனால் அரச குடும்பத்தினர், அவர்களின் தொழில் திறமையை பாராட்டி ராஜாங்க தர்பாரில் தனியிடமும், முதல் மரியாதையும் வழங்கினர்.  இதன் காரணமாக  சௌராஷ்டிர சமூகம் செல்வச் செழிப்புடன் ராஜ அந்தஸ்துடன் வாழ்ந்து வந்தது. சோழ தேசத்தில் காவிரிக்கரைதனிலே

தஞ்சையின் முதல் நாயக்க மன்னரான சேவப்ப நாயக்கர் ( பொஆ 1532 முதல் 1580 வரை )உள்ள காலத்தில் அவர்களால், காவிரி நதிக் கரைகளில் பட்டீஸ்வரம், கும்பகோணம் , தஞ்சாவூர் , அம்மாப்பேட்டை,  அய்யம் பேட்டை, திருவையாறு, அம்மையப்பன், அறந்தாங்கி, திருபுவனம், திருசேறை, திருநாகேஸ்வரம், திருச்சிராப்பள்ளி,உறையூர், திருவப்பூர   மற்றும் பல இடங்களில் பரவலாகப் பரவி,  நிலையாக குடியமர்த்தப்பட்டனர்.  அதே போல் மதுரை வைகை கரையில் நாயக்கர் மனனர்களால் தற்போதுள்ள மதுரை, விருதுநகர், உள்ளிட்ட ஆற்றங்கரை ஓர மாவடங்களில் குடியமர்த்தினர் வைகைக்கரைதனில் 



2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த,  மதுரை மற்றும் இராமநாதபுரம், பரமக்குடி, எமனேஸ்வரம், அருப்புக்கோட்டை பெரியகுளம், நிலக்கோட்டை, திண்டுக்கல் என பல ஊர்களில் பரவி நாயக்க மன்னர்களால் குடியமர்த்தப்பட்டனர்.

சௌராஷ்ட்ரா சங்கீத இராமாயணம் இயற்றிய  "சௌராஷ்ட்ரா கவிச்சக்கரவர்த்தி"

ஸ்ரீ வேங்கடசூரி  ஸ்வாமிகள்...தமது வரகவியால் ஸ்ரீ ரெங்கநாதரைப் பாடி, மழை பெய்யுமாறு செய்து தஞ்சாவூர் பெரும் பஞ்சத்தை போக்கிய வரகவி.ஸ்ரீ சுகந்த தூபதீர்த்தார்ய ஸ்வாமிகள்...

சங்கீத ஜோதியாக விளங்கும் ஸ்ரீமத் தியாகராஜ ஸ்வாமிகளின் பிரதம சிஷ்யரான ஸ்ரீ வேங்கடரமண 

பாகவத ஸ்வாமிகள்... என காவிரிக் கரையில் அவதரித்த சௌராஷ்டிர பெருமக்களின் மாணிக்கங்களாக 

விளங்கும் பல மகான்களும்,  கவிச்சக்கரவர்த்திகளும் தஞ்சாவூர் அரண்மனையை அலங்கரித்தனர்...

தீபாவளியையே நீட்டித்த  தஞ்சாவூர் மராட்டிய ராணியார்.இறை பக்தியில் நிரம்பிய ஒருவனின் உள்ளமோ கலையோ , தொழிலோ 



மிக உன்னதமாக இருக்கும்.  காரணம், அவன் மனம் இறை வழிபாடு , அவரின் நினைவு , அது கலந்த‌ தொழில் என அதை சுற்றிச் சுற்றி வரும். வீணான பொழுதுபோக்கிலோ,  வெட்டி வேலைகளிலோ அவன் கவனம் சிதறாது. தெய்வீகம் நிரம்பிய அந்த மனமானது, கடவுளில் நிலைத்து, பிரபஞ்சத்தோடு ஒன்றிணைந்து,  சகலத் திறமைகளையும் அவன் கரங்களுக்கு அது கொடுக்கும், இதனால் அவன் தொடும் காரியங்கள் அனைத்திலும்  தனி அழகும், நேர்த்தியும் , 

உறுதியும் மிளிரும். அத்தகைய தொழில் வல்லவர்கள்,  எல்லோரும் சேர்ந்து கொண்டாடும் "ஒளிநாள்" (தீபாவளி) அன்றும், தங்களுக்காக உழைத்துக் கொண்டிருந்த சௌராஷ்ட்ரா மக்களின் உள்ளன்பு கண்டு உருகி, அவர்கள் மட்டும் தனியாகத் தீபாவளியின் 3 ஆம் நாள் வரைக் கொண்டாட அனுமதி அளித்தார் தஞ்சாவூர் ஷாகோஜி, வெங்கோஜி, ஏகோஜி, சிவாஜி வழி , மராட்டிய ராணியார். இது வரலாறு கூறும் உண்மை..! 

இது அவர்களின் தொழில் தர்மத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். குடியேறிய நாட்டின் பொருளாதார தொழில் ,கலை பண்பாட்டு வளர்ச்சிகளில் மகத்தான 

பங்கு கொண்ட சௌராஷ்டிர பிராமணர்களுக்கு, பெரும் அந்தஸ்து கொடுத்து, தனக்கு அருகில், தன்னுடைய அரண்மனையைச் சுற்றிலுமே குடியிருப்புகளை ஏற்படுத்தி, இடம் கொடுத்தார் திருமலை நாயக்க மன்னர்.

கைத்தறி, பட்டு வஸ்திரத் தொழிலுக்குப் பெயர் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அவர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கம் கொடுத்து, அவர்களின் வஸ்திர தொழில் அபிவிருத்திக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுக்கு பக்கபலமாக விளங்கினர்



அருளாளர்களின் ஆன்மிக பூமியான மதுரையம்பதியில் சௌராஷ்டிர சமூகப் பெண்ணடியார்கள்....!

தெய்வீகம் என்பது சௌராஷ்டிரர்களின்  வாழ்வியலில், குடும்பத்தில்  ஒரு நடைமுறையாகவே இருந்து வந்தது. இதன் காரணமாக அந்த சமுதாயத்தில் பெண்களுக்கு முழு ஆன்மிக சுதந்திரம் இருந்தது, அந்த ஆன்மிக பக்தியில் உச்சம் தொட்ட பெண்கள் அவரவர் விருப்பப்படி, அவரவர் வழியில், ஆன்ம விடுதலை வேண்டி, தங்கள் ஞானத் தெளிவால் விடுதலை பெற்று,  "பெண்ணடியார்கள்" என்ற  உன்னத ஸ்தானத்தை பெற்றார்கள்.

63 நாயன்மார்களில் மூவர் பெண்ணடியார்கள்...! 12 ஆழ்வார்களில் ஒருவர் பெண்ணடியார்....! 

 மிக மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட சௌராஷ்டிர சமுகத்தில் இறையனுபவம் பெற்ற 15 அடியார்களில் 

மூவர் பெண்ணடியார்கள்...!  அந்த மூவர்தான் ஸ்ரீ புஷ்கலா தேவி, ஸக்தி ஸ்ரீ முத்துலட்சுமி, ஸ்ரீஎல்லம்மாள். 

இவர்கள் ஆன்ம விடுதலை பெற்று, வீடு பேறு பெற்றது மிக எளிய வழியில் தான். ஆம், நம் தமிழ் மறைநூல்கள் முதலாம் நூற்றாண்டில் இருந்து வழிகாட்டி வந்த வழியில் தான், இவர்களும் பயணித்து இறுதி எல்லையை தொட்டுள்ளனர். 

'கல்வி' கேள்வியில் சிறந்து விளங்கிய இவர்கள், ஆன்மிக ஞானம், 'அறிவு' பெற்றவர்களாக விளங்கினார். அதோடு 'ஒழுக்கத்தை' தங்கள் உயிராக கடைபிடித்து வந்தனர். 

தனக்கு உரிமையுள்ளவரிடம் காட்டுவது 'அன்பு'  என்றால்,  தமக்கு உரிமை இல்லாதர்களிடமும்  அதே அன்பை காட்டுவதைத் தான் 'அருள்' என்பார்கள். அவர்கள் அந்த அருளாளர் என்ற இயல்பிலேயே  எப்போதுமே இருந்து வந்ததின் காரணமாக எப்பொருளின் மீதும், எவர் மீதும் விருப்பு வெறுப்பின்றி  ஒரு 'துறவு' வாழ்க்கையை மேற்கொண்டு இருந்ததால் 

'வீடுபேறு' அடைவது அவர்களுக்கு மிக எளிதில் கைக்கூடியது எனலாம்...!மதுரை பட்டு நெசவு என்பது நாயக்கர் காலத்தில் மதுரையில் குடியேறிய சௌராஷ்டிர (பட்டு நூல்காரர்கள்) மக்களால் வளர்க்கப்பட்ட பாரம்பரியமிக்க நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த வரலாறு குஜராத்திலிருந்து தெற்கே வந்த சௌராஷ்டிர மக்கள் மதுரையில் அரண்மனையை ஒட்டிய பகுதிகளில் குடியேறினர் அரண்மனை வளாகம் கைவிடப்பட்ட பிறகு, அவர்கள் பத்துத்தூண்களைச் சுற்றி வீடுகளைக் கட்டி பட்டு நெசவுத் தொழிலைத் தொடர்ந்தனர். இதனால் இப்பகுதி பட்டுநூல் சந்தையாகவும், பின்னர் துணிக்கடைகள் நிறைந்த பகுதியாகவும் மாறியது.... என்பதே உண்மை,  வரலாற்றுப் பார்வை தொடரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...