முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகத் தரத்தில் தமிழ்நாட்டில் கார் பந்தயம் அதன் துவக்கம் தான் லண்டன் போட்டி

 இங்கிலாந்து நாட்டு லண்டன் மாநகரில் நடைபெற்ற புகழ்பெற்ற Le Mans Cup கார் பந்தயத்தை,


தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் நேரில் சென்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சர்வதேச பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித்குமாரின் ‘ரேசர் ஏகே’ (Racer AK) அணி 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க பிரிட்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற Silverstone Motor Racing Circuit மைதானத்தில் இந்த பந்தயம் நடைபெற்றது.  தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன் சென்றிருந்த தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய், அஜித்தின் அழைப்பை ஏற்று கார் பந்தய மைதானத்திற்குச் சென்றார். அங்கு அஜித்குமாரை கட்டியணைத்து, முத்தமிட்டு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். 


பந்தயம் தொடங்குவதற்கு முன்பாக அஜித் குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்து விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், அஜித்குமார் தனது பந்தயக கார் குறித்து முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு விரிவாக விளக்கமளித்தார். இந்த மிகக் கடுமையான சர்வதேச 'Michelin Le Mans Cup' பந்தயத்தில், அஜித்குமாரின் பந்தய அணி (Racer AK Racing) 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' அமைக்கப்படும் என முதல்வர் சி. ஜோசப் விஜய் சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்த நிலையில், இந்த சர்வதேச உள்கட்டமைப்பை அவர் நேரில் பார்வையிட்டுள்ளார்.


அது தொடர்பாக இனி கார் பந்தயம்  நடத்துவதற்கு அல்லது அதில் பங்கேற்பதற்கு, சர்வதேச தரம் வாய்ந்த பந்தய கார்களை தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் முக்கிய கார் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உற்பத்திப் பிரிவுகள் .உலகப் புகழ்பெற்ற கார் பந்தய நிறுவனங்கள் (Racing & Production Companies)Ferrari (Scuderia Ferrari): ஃபார்முலா 1 (F1) மற்றும் உலகளாவிய பந்தயங்களில் மிகவும் புகழ்பெற்ற இத்தாலிய நிறுவனம்.Mercedes-Benz (Mercedes-AMG): அதிவேக எஞ்சின்கள் மற்றும் F1 பந்தயங்களில் பலமுறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி நிறுவனம்.Red Bull Racing: இவர்களே நேரடியாக கார் விற்காவிட்டாலும், சொந்தமாக அதிநவீன ரேசிங் கார்களை உருவாக்கி பந்தயங்களை நடத்தும் முன்னணி நிறுவனம்.McLaren Racing: உயர் ரக ஸ்போர்ட்ஸ் கார்கள் மற்றும் பந்தய கார்களை தயாரிப்பதில் உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் நிறுவனம்.Porsche: சகிப்புத்தன்மை பந்தயங்கள் (Endurance Racing) மற்றும் 'லீ மேன்ஸ்' (Le Mans) பந்தயங்களில் அதிக வெற்றிகளைப் பெற்ற நிறுவனம்.Audi & BMW:

பந்தயங்களுக்குத் தேவையான கார்கள் மற்றும் எஞ்சின்களை தயாரித்து வழங்கும் பிற முக்கிய ஜெர்மனி நிறுவனங்கள்.கார் பந்தயம் நடத்த தேவையான முக்கிய தேவைகள்நீங்கள் ஒரு கார் பந்தயப் போட்டியை நடத்த சர்வதேச அனுமதி (FIA): 'ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி எல்'அட்டோமொபைல்' (FIA) என்ற சர்வதேச அமைப்பின் விதிமுறைகளின்படிதான் உலகளவில் கார் பந்தயங்கள் நடத்தப்பட வேண்டும்.இந்திய அனுமதி (FMSCI): இந்தியாவில் பந்தயம் நடத்த 'ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்ஸ் ஆஃப் இந்தியா' (FMSCI) அமைப்பின் அனுமதி பெற வேண்டும். பந்தய மைதானம் (Race Track): தமிழ்நாட்டில் சென்னை (இருங்காட்டுக்கோட்டை) மற்றும்



கோயம்புத்தூரில் (கரி மோட்டார் ஸ்பீடுவே) இதற்கான பிரத்யேக ரேசிங் டிராக்குகள் உள்ளன. இந்த நிலையில் முதலமைச்சர் லண்டன் பந்தயம் பார்வை இட்ட நிலையில் இனி அது சம்பந்தப்பட்ட தொழில் துவங்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைய வாய்ப்பு உள்ளது,  அதன் மூலம் தனியார் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் நிலை வரலாம்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...