கரூர் தேவர்மலை VAO கார்த்தி அதிர்ச்சி - சிட்டா அடங்கலுக்கு மீன் வறுவல் லஞ்சம்! ஆடியோ வைரல் - பணியிடை நீக்கம்
கரூர் மாவட்டம் தேவர்மலையில் கிராம நிர்வாக அலுவலராக (VAO) பணியாற்றி வருபவர் கார்த்தி.
அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் விவசாயக் கடன் பெறுவதற்காக சிட்டா அடங்கல் கேட்டு மனு அளித்திருந்தார். சம்பவத்தன்று விவசாயி தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிட்டா ரெடியாகிவிட்டதா என கேட்டுள்ளார்.
அதற்கு VAO கார்த்தி, "பாளையத்தில் இருக்கிறீர்களா? வரும்போது ஒரு கடையில் இரண்டு மீன் வறுவல் நல்லா எண்ணெயில் பொரித்து, வெங்காயம் தனியாக கட்டி வாங்கி வாருங்கள்" என்று கூறியதாக தெரிகிறது.
அருகில் இருந்த விவசாயியின் மகன் போனை வாங்கி, "அரசாங்கம் உங்களுக்கு சம்பளம் தரவில்லையா?" என கேட்க, சுதாரித்துக் கொண்ட VAO, "ஹலோ ஹலோ சரியாக கேட்கவில்லை, நீங்கள் மீன் வாங்கி வர வேண்டாம், வந்து சிட்டாவை வாங்கிக் கொள்ளுங்கள்" என கூறி போனை வைத்துள்ளார்.`Karur, VAO, Lanjam`
இந்த உரையாடலை விவசாயி தரப்பு ஆடியோ ரெக்கார்ட் செய்துள்ளது. தற்போது அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் VAO கார்த்தியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் ஒழியவில்லை, அது உணவு வடிவில் வருகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


கருத்துகள்