"அன்புத் தாய்மார்களே, அருமை பெரியோரே, இனிய குழந்தைகளே!" என்ற உரைக்கு சொந்தக்காரர் தமிழகத்தின் மிகச்சிறந்த பட்டிமன்ற நடுவரும்,
பேராசிரியருமான சாலமன் பாப்பையா பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 11, 2026 அன்று 90 வது வயதில் காலமானார். சாலமன் பாப்பையா பிப்ரவரி மாதம் 22, 1936 ஆம் தேதி அன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் சாத்தான்குடியில் பிறந்தார், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது இனிய குரலிலும் நகைச்சுவை ததும்பும் பேச்சாலும் பல்லாயிரக்கணக்கான பட்டிமன்றங்களை நடத்தி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
திருக்குறள் மற்றும் பல பழந்தமிழ் இலக்கியங்களுக்கு எளிய முறையில் உரை எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி' உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார்.1961-ஆம் ஆண்டில், புதுக்கோட்டையில். 'பாரதி வேதாந்தக் கவிஞனா?, புதுமைக் கவிஞனா?' என்ற விவாதத் தலைப்புகளில், 'புதுமைக் கவிஞனே' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதேபோல் பாரதியார் நினைவுநாளில் காலமாமானார் தொடர்ந்து கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே பட்டிமன்ற நிகழ்வுகள் பலவற்றில் பேச்சாளராகக் கலந்துகொண்டார்.
முன்னாள் குன்றக்குடி அடிகளாருக்குப் பின் பட்டிமன்ற நடுவராக உயர்ந்தார். பட்டிமன்றத்தில் ராஜா, பாரதி பாஸ்கர் போன்ற தன் குழுவினருடன் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து பட்டிமனற நிகழ்ச்சிகளை நடத்தினார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை எனப் பல வெளிநாடுகளில் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார். 7000-க்கு மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்திய சாலமன் பாப்பையா புறநாநூறு பாடல்களை புதிய வரிசைப்படி உரையெழுதி வெளியிட்டார். அகநாநூறு மூன்று தொகுதிகளாக உரை எழுதினார். சாலமன் பாப்பையாவின் இலக்கிய அணுகுமுறை ரசனை சார்ந்த ஆய்வுநோக்கு கொண்டது. மு. வரதராசனை முன்னோடியாகக் கொண்டது சாலமன் பாப்பையா, அமெரிக்கன் கல்லூரியில் திருவள்ளுவர் கழகத் தலைவராகப் பணியாற்றியபோது பல நாடகங்களை எழுதினார். இயக்கினார். நடித்தார். அதேபோல்
திரைப்படங்களில் சாலமன் பாப்பையா புது வருஷம், எஸ். மேடம், டூயட், பாய்ஸ், முதல்வன், சிவாஜி போன்ற திரைப்படங்களில் நடித்தார் ஒரு தனியார் தொலைக்காட்சியில், 'வணக்கம் தமிழகம்' நிகழ்வில், தினந்தோறும் காலையில் திருக்குறளுக்கு விளக்கமளித்தார். நாலடியார், நான்மணிக்கடிகை, அறநெறிச்சாரம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, திரிகடுகம் போன்ற இலக்கியங்கள் குறித்து உரையாற்றினார். 'ஔவையின் அமுதமொழி' நிகழ்வின் மூலம் ஔவையின் பாடல்களுக்கு விளக்கமளித்தார்.தமிழ் இலக்கிய உலகிற்கும் பட்டிமன்றக் கலைக்கும் ஈடுசெய்ய முடியாத இந்த பேரிழப்பின் போது,
மக்கள் நினைவுகளில் நீங்காத மறைந்த குன்றக்குடி அடிகளாருக்கும் தற்போது காலமான சாலமன் பாப்பையா அவர்களுக்கும் இருந்த நெருங்கிய தமிழ் பந்தமும் வரலாறும் நினைவு கூறத்தக்கது மறைந்த குன்றக்குடி அடிகளார் அமைத்துக் கொடுத்த அந்த மக்கள் பாதையைப் பின்பற்றித் தான், சாலமன் பாப்பையா அவர்கள் மிக எளிய தமிழில் பட்டிமன்றக் கலையை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் கொண்டு சேர்த்தார்.
தொலைக்காட்சிப் பட்டிமன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். திருச்சிராப்பள்ளி, மதுரை வானொலி நிலையங்களில் இலக்கியச் சொற்பொழிவாற்றினார். சங்க இலக்கியம், திருக்குறள் விளக்கம் போன்ற உரை விளக்க நிகழ்ச்சிகளை நடத்தினார்.
தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடல் நாளை செப்டம்பர் 12, 2026 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணிக்குள் தகனம் செய்யப்படுகிறது. மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. "எனது உடலை அடக்கம் செய்யாமல், தகனம் செய்ய வேண்டும்" என்று சாலமன் பாப்பையா ஏற்கனவே உயில் எழுதி வைத்திருந்ததாக அவரது உதவியாளர் ராஜா தெரிவித்தார்.
இனி நல்ல தமிழ் பேசி மக்கள் மனம் கவர்ந்த சாலமன் பாப்பையா மக்கள் நினைவில் வாழ்வார்,













கருத்துகள்