"சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாடப் பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் திரண்டமுப்புரி நூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் மூடிக வாகனே இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்க மறுத்தே திருந்திய முதல்ஐந் தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறம்இது பொருள்என வாடா வகைதான் மகிழ்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டி இன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் றன்னை அடக்கு முபாயம் இன்புறு கருணையின் எனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவத்(து) இருவினை தன்னை அறுத் திருள் கடிந்து........." விநாயகர் அகவல் வரிகளில் - ஒளவையார் அருளியது இன்னும் தொடரும்.. விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களை மத நல்லிணக்கத்திற்காக வெளியிட்டவர்கள் ஆற்காட்டு நவாப்புகள் மற்றும் மைசூர் மன்னரான திப்பு சுல்தான் ஆவர். அமர்ந்த நிலையிலான விநாயகருக்குப் பதிலாக, நிற்கும் விநாயகரான ஆநிருத்த கணபதி உருவத்தை முதன்முதலில் ஆட்சியில் தங்கள் நாணயங்களில் பொறித்தவர்கள் ஆற்காட்டு நவாப்புகள் ஆவர். நாணயத்தின் மறுபக்கத்தில் 'நவாபு' என்ற பெயரையும் பொறித்துள்ளனர். இஸ்லாமிய மன்னராக இருந்தாலும், மைசூர் சுல்தானான திப்பு சுல்தானின் செம்பு நாணயங்களில் (காசு) யானை முகக் கடவுளான விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதாக நாணயவியல் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது அதுபோல சிவகங்கை ஜமீன் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்கள் விநாயகர் உருவம் பொறித்த செப்பு நாணயங்களை (காசுகளை) வெளியிட்டுள்ளனர். இந்த நாணயங்களின் முன்பக்கத்தில் விநாயகர் தனது வாகனமான மூஷிகத்தின் (எலி) மீது அமர்ந்திருப்பது போன்றும், பின்பக்கத்தில் சிவலிங்கத்தின் வடிவமும் பொறிக்கப்பட்டிருக்கும்.
அதேபோல கொங்கு நாட்டை ஆண்ட சேர மன்னர்கள் வெளியிட்ட செப்பு நாணயங்களில் விநாயகர் வழிபாடு பிரதிபலித்தது இந்த நாணயத்தின் முன்பக்கத்தில் விநாயகர் சம்மணமிட்டு அமர்ந்திருப்பது போன்றும், பின்பக்கத்தில் ஸ்ரீ லட்சுமி தேவி கமல ஆசனத்தில் அமர்ந்திருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டிருந்தது. மைசூர் ஆட்சியாளரான திப்பு சுல்தானும் விநாயகர் உருவம் கொண்ட செப்பு நாணயங்களை வெளியிட்டுள்ளார். இதில் விநாயகர் ஒரு பீடத்தின் மீது அமர்ந்து, தனது கைகளில் ஆயுதங்களை ஏந்தியவாறு பெரிய தொந்தியுடன் காட்சியளிப்பார். இந்தியாவில் சோழர்கள் வென்று வந்த தாய்லாந்து நாட்டின் 10 பாட் நாணயத்திலும், முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்தோனேசியா நாட்டின் பழைய 20,000 ரூபியா பணத்தாளிலும் விநாயகரின் உருவம் அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று தான் மத மச்சரியங்கள் மேலோங்கி நிற்கிறது அரசியல் காரணமாக, தமிழ்நாடு வரலாற்றில் விநாயகர் வழிபாடும் அதற்கான ஆலயங்களும் பல்வேறு மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டு வளர்ந்துள்ளன. தமிழ்நாட்டின் மிக முக்கிய விநாயகர் ஆலயங்களையும், அவற்றை உருவாக்கிய அரச வம்சங்களையும் பார்த்தால் பாண்டிய மன்னர்கள் மருதங்குடி எனும் இராஜநாராயணபுரம் ஆகிய
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தமிழ்நாட்டின் மிக பழமையான குடைவரைக் கோயில்களில் ஒன்றாகும். இது பொது ஆண்டு 4-ஆம் நூறாண்டு முதல் 7-ஆம் நூற்றாண்டுக்குள் முற்கால பாண்டிய மன்னர்களால் குடைவரைக் கோயிலாகச் செதுக்கப்பட்டது. இங்குள்ள 6 அடி உயர கம்பீரமான விநாயகர் சிலை இரு கரங்களுடன், வலம்புரித் தும்பிக்கையோடு தனித்துவமாக அமையப்பெற்றுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விநாயகர் ஆலயமும் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன. பல்லவ மன்னர்களால் திருச்சிராப்பள்ளி உச்சிப் பிள்ளையார் கோயில் திருச்சிராப்பள்ளியின் அடையாளமாகத் திகழும் இந்த உலகப் புகழ்பெற்ற மலைக்கோட்டை பிள்ளையார் கோயிலின் ஆரம்பகால மென்மையான பாறை குடைவரைப் பணிகளை பொது ஆண்டு 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் தொடங்கினர்.திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில் (முழு வடிவம்): பல்லவர்களால் தொடங்கப்பட்ட இக்கோயிலின் கட்டுமானப் பணிகளை, பிற்காலத்தில் மதுரை நாயக்க மன்னர்கள் விஜயநகரப் பேரரசின் கீழ் முழுமையாகக் கட்டி முடித்தனர் அதேபோல் வாதாபி கணபதி (திருச்செங்காட்டங்குடி): பல்லவ மன்னர் முதலாம் நரசிம்ம வர்மனின் படைத்தளபதியான பரஞ்சோதி முனிவர் (சிறுத்தொண்ட நாயனார்), சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியை வென்றதன் நினைவாக அங்கிருந்த விநாயகர் சிலையைத் தமிழ்நாட்டிற்கு எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்தார்.
( இது விளையாட்டு விநாயகர்)
அதேபோல் சோழ மன்னர்கள் கங்கைகொண்ட விநாயகர் (கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில்): சோழப் பேரரசன் முதலாம் இராஜேந்திர சோழன் தனது வட இந்தியப் போர் கங்கை நோக்கிய போர்ப் பயணத்தின் வெற்றிக் கோப்பையாக பால வம்ச அரசர்களிடமிருந்து கொண்டு வந்த வரலாற்றுப் புகழ்பெற்ற விநாயகர் சிலை இதுவாகும். வெள்ளை விநாயகர் ஆலயம் தஞ்சாவூர் கோட்டையின் கிழக்கு வாசலில் (கீழ்வாசல்) அமைந்துள்ள இந்த ஆலயத்தின் விநாயகரைச் சோழ மன்னர்கள் தங்களின் கோட்டைப் பகுதி வழிபாட்டிற்காகப் பிரதிஷ்டை செய்ததாகக் கருதப்படுகிறது. அதேபோல் விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்கள் சாசிவேகாலு கணேசா மற்றும் கடலேகாலு கணேசா (ஹம்பி, கர்நாடகா): விஜயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பியில் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட 8 அடிக்கும் அதிகமான பிரம்மாண்ட விநாயகர் சிலைகளும் ஆலயங்களும் விஜயநகர மன்னர்கள் மற்றும் வணிகர்களால் கட்டப்பட்டன. என்பதே, தமிழ் பக்தி இலக்கியத்தில் விநாயகர் (பிள்ளையார்) வழிபாடு மிக முக்கியமான மற்றும் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கும் முன்னால் விநாயகரை வழிபட்டுத் தொடங்குவது ஹிந்து மரபாகும். "முழுமுதற் கடவுள்" மற்றும் "பிரணவப் பொருள்" (ஓம்) எனப் போற்றப்படும் விநாயகரைப் பற்றி சைவத் திருமுறைகள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றும் பிற்காலப் பக்தி இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன,
(இது அரசியல் விநாயகர்)
சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் விநாயகர் வழிபாடு பரவலாகக் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர்: இவர் தனது தேவாரப் பாடல்களில் விநாயகரை "ஆனைமுகன்" என்றும், "கணபதி" என்றும் போற்றுகிறார். சம்பந்தர் இறைவனை வழிபடச் செல்லும் போது தடைகள் நீங்க விநாயகரை முதலில் வணங்கியதாகக் குறிப்புகள் உள்ளன, சைவத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி, திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரின் பேரருள் பெற்றவர். இவர் விநாயகர் மீது திருவட்டைப் பிள்ளையார் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை உள்ளிட்ட நூல்களைப் பாடி, பக்தி இலக்கியத்தில் விநாயகர் வழிபாட்டை நிலைநிறுத்தினார். திருமூலர் (திருமந்திரம்): பத்தாம் திருமுறையான திருமந்திரத்தில், விநாயகரை வழிபட வேண்டிய அவசியத்தை திருமூலர் அழகாகக் குறிப்பிடுகிறார்:"ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைபுந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே." என்கிறார் அதேபோல ஔவையாரின் விநாயகர் அகவல் பக்தி இலக்கியத்தில் விநாயகரைப் பற்றிப் பாடப்பட்ட நூல்களில் மிக உயரிய இடத்தைப் பெறுவது ஔவையார் அருளிய விநாயகர் அகவல் 72 அடிகளைக் கொண்ட அகவற்பாவால் ஆன தத்துவ நூல். விநாயகரின் உருவ அழகை, "சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாட..." எனத் தொடங்கி ஔவையார் வர்ணிக்கிறார். வெறும் துதிப்பாடலாக மட்டுமில்லாமல், மனித உடலில் இருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பும் யோக நெறி மற்றும் ஆன்மீக ரகசியங்களை உள்ளடக்கிய ஒரு வழிகாட்டி நூலாகவும் இது போற்றப்படுகிறது. விநாயகரின் தோற்றம், அவரது லீலைகள் மற்றும் அவரை வழிபடும் முறைகளை 10 முதல் 15-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த இந்த நூல் விரிவாக விவரிக்கிறது. இதில் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கூறும் 'விநாயக சஹஸ்ரநாமம்' இடம்பெற்றுள்ளது. விநாயகரின் எட்டு அவதாரங்களை விவரிக்கும் புகழ்பெற்ற வடமொழிப் புராண நூலிது. பொறாமை, பேராசை, மதம் (தலைக்கனம்), மோகம் போன்ற மனிதனின் தீய குணங்களை (அசுரர்களை) அழிக்க விநாயகர் எடுத்த அவதாரங்களை இது விளக்குகிறது, பிற்காலப் பக்தி இலக்கியங்கள் "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா"
கச்சியப்ப சிவாச்சாரியார்: இவரது கந்தபுராணத்தில், முருகப் பெருமான் வள்ளித் திருமணம் புரிவதற்கு விநாயகர் யானை வடிவம் எடுத்து உதவி செய்த பக்திப் பின்னணிச் சுவை விரிவாகப் பாடப்பட்டுள்ளது. இவரது திருப்புகழ் பாடல்களின் தொடக்கத்தில் விநாயகர் துதி "கைத்தல நிறைகனிவப்பொடு...") பாடப்பட்டு, காரிய சித்திக்கு விநாயகர் வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பது வலியுறுத்தப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் பக்தி இலக்கியப் பங்களிப்பாக பாரதியார் "விநாயகர் நான்மணி மாலை" என்ற நூலை இயற்றி விநாயகரைப் போற்றியுள்ளார். பக்தி இலக்கியத்தில் விநாயகர் வெறும் உருவ வழிபாட்டுத் தெய்வம் மட்டுமல்லாமல்; அவர் அறிவு (புத்தி), ஞானம் (முக்தி) மற்றும் தடைகளைத் தகர்க்கும் ஆற்றலின் மொத்த வடிவமாகத் திகழ்கிறார். அதன் பின் தற்போது 1985 ஆம் ஆண்டு முதல் விநாயகர் ஊர்வலங்கள் ஹிந்து அமைப்புக்களின் ஏற்பாடடில் மும்பையில் நடப்பது போல துவங்கி சமய மறுமலர்ச்சிக்கு தற்காலம் வழி வகுத்ததுள்ளது, 1980 க்கு முன் ஆலய வழிபாடு செய்யாமல் வாழ்ந்த ஹிந்து மக்கள் பலர் தற்போது வழிபாடுகளை நடத்தும் நிலை தான் பக்திநெறி வளர்ச்சி ஆகும்














கருத்துகள்